Author Topic: ஒற்றை மரம்  (Read 643 times)

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
ஒற்றை மரம்
« on: April 09, 2019, 02:47:45 PM »


ஊர் ஓரம் ஒற்றையாய் ...
காய்ந்து சருகாய் நிற்கும் மரம் !
ஒரு காலத்தில் செழிப்பாய் ...
கிளைகளும் இலைகளுமாய் ...
கொப்பும் குளுமையை ...பரப்பி கொண்டு ...
தளிர்களும் ...பூக்களும் ....
காய்களும் ...கனிகளுமாய்....
பூச்சிகளும் ...புள்ளினங்களும் ...
பறவைகளும் ..அதன் உறவுகளும் ...
இந்த மரத்தில் கூடு கட்டிக்கொண்டு ....
குடி கொண்டு சல்லாபித்து கொண்டு ...
சந்தோசமாய் கீச்சிட்டு இருந்தன !
மழையும் பனியும் ....
வெயிலும் காற்றும் ...
புயலும் பூகம்பத்துக்கும் ..
அசராமல் உறுதிகொண்டு ...
அனைவர்க்கும் புகலிடம் கொடுத்த ...
அழகிய மரம் இன்று ...?

ஓர் மழை நாளில் ...
எதிர்பாராமல் வந்த இடி ....
அனைத்தையும் பொசுங்கி போட்டன !
ஓடி ஓடி வந்த பறவைகளும் ...
உறவுகளும் ....ஒதுங்கி விட்டன !
இலைகளையும்  கனிகளையும் ..
இழந்து வெறும் கிளைகளை ...
தரையில் தாங்கிக்கொண்டு ...
அதன் வலிகளையும் வேதனைகளையும் ...
மறைத்து கொண்டு ..
வானத்தை வெறித்து கொண்டு ....
சருகாய் சப்தமின்றி ....
யாருக்காக காத்து கொண்டு நிற்கின்றதோ .?
அவ்வவ்போது அந்த மரத்தின் ...
பழைய நிலையை எண்ணி ...
நன்றி மறக்காத சிறு பறவைகள் ..
வந்து சிந்தும் கண்ணீர் துளிகள் ..
போதுமா இந்த மரம் துளிர்க்க ..?




Offline DoRa

  • Sr. Member
  • *
  • Posts: 388
  • Total likes: 1184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • making someone SMILE is the best feelings😁
Re: ஒற்றை மரம்
« Reply #1 on: April 09, 2019, 03:14:38 PM »
Rishu Babe Nice Kavithai....நன்றி மறக்காத சிறு பறவைகள் ..
வந்து சிந்தும் கண்ணீர் துளிகள் ..
போதுமா இந்த மரம் துளிர்க்க ..?

indha kavithaiyaa parthaa evlo kayangal unga manathil irukum nu enku puriguthu kavalai vendam babe
Manathil Nambikaiyum udambil Thairiyamum Irunthal kandipaa  edhai venum enralum sathikalam tholvikai n avamanangal than namaku paadangala kaathu kodurathu vazhalkail aaduthaa padiku eduthu pogiranaa muyatchi seithall mudiyathaa kariyam edhuvum ile babe  ;) ;D happy a irukanga ellam nallathukye elam nanbaikyeee :-* :-*
« Last Edit: April 09, 2019, 03:30:57 PM by DoRa »