FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on October 10, 2019, 07:20:01 PM

Title: சமூக நீதி சாதி ஏற்றத்தாழ்வு
Post by: சிற்பி on October 10, 2019, 07:20:01 PM
மனிதனை பிரித்தது
மனுதர்மம்
அதுவே உலகின்
மாபெரும் அதர்மம்

உலகம் எல்லா உயிர்களுக்கும்
பொதுவானது தான்..
பிறப்பால் உயர்வு தாழ்வு
கற்பிப்பது எவ்வளவு பெரிய
முட்டாள்தனம்

காற்றுக்கும் நீருக்கும் கடலுக்கும்
அந்த பேதங்கள் வருவதில்லை

தாழ்த்தபட்டவன்
எப்படி தாழ்ந்தவன்
உன்னை விட
அறிவிலே தாழ்ந்தவனா
அழகிலே தாழ்ந்தவனா
ஆற்றலிலே தாழ்ந்தவனா

எப்படி அவன் உனக்கு
தாழ்ந்தவன் ஆகிறான்

காலங்காலமாக
அடக்க பட்டவன்
அத்துமீறுகிறானா?
அப்படி யென்றால்
அது சரி தான்

அவனும் மனிதன் தானே
எதிர்ப்புகளை எரிக்காமல்
எழுவது சாத்தியமில்லை

எல்லாவற்றுக்கும் இந்த சாதி
அடிப்படை பிரச்சினை ஆகிவிட்டது
அது மனிதனை மனிதனாக
வைப்பதில்லை

ஒரு தாழ்த்த பட்டவனை
இந்த சமூகம் மனிதனாக
ஏற்றுக் கொள்வதை விடவும்
மனிதாபிமானமற்று போகவே
விரும்புகிறது

கல்லிலும் கடவுளை
பார்க்க தெரிந்தவருக்கு
மனிதனை மனிதனாக
பார்க்க தெரியவில்லை

உயர்ந்தவன் என்று
தன்னை நினைத்து
கொண்டிருப்பவர்கள்
அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்

ஒரு தாழ்த்தப்பட்டவர்
எழுதிய அரசியலமைப்பு தான்
இன்று இந்திய
திருநாட்டையே
ஆட்சி செய்து கொண்டிருக்கிறது..
       ....... சிற்பி...
Title: Re: சமூக நீதி சாதி ஏற்றத்தாழ்வு
Post by: Guest 2k on October 19, 2019, 01:40:05 PM
very nice Shirpi