Author Topic: சீறாப்புராணம் காண்டம்-1 பாகம்-2  (Read 4628 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)
படலங்கள் 10- 24 / பாடல்கள் (597 -1240 )


சீறாப்புராணம்
முதலாவது காண்டம் - விலாதத்துக் காண்டம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

நஹ்மதுஹூ வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்


1.10 பாதை போந்த படலம்


597   குரைகட லனைய செல்வக் குறைஷியின் குலத்து நாப்ப
ணரசிளங் குமர ரான வப்துல்லா வரத்தில் வந்த
முருகவி ழலங்கற் றிண்டோண் முகம்மது தமக்குச் சார்ந்த
திருவய திருபத் தைந்து நிறைந்தன சிறக்க வன்றே.   1.10.1

598   பேரறி வெவையுஞ் செம்மை பெருத்தொளிர் வனப்பும் வெற்றி
வீரமுந் திறலு முண்மை விளங்கும்வா சகமுங் கல்விச்
சாரமும் பொறையு மிக்க தருமநற் குணமு மியார்க்கும்
வாரமு முகம்ம தின்பால் வந்தடைந் திருந்த தன்றே.   1.10.2

599   பாரினி லடங்கா விண்ணோர் பன்முறை பெரிதிற் கூண்டு
சீருறை பாத காப்புற் றிருப்பது தெரியக் காணா
ரூரவர் போலுந் தங்கைக் குறுபொரு ளின்மை யெண்ணங்
காருறு கவிகை வள்ளற் கருத்திலங் குருத்த தன்றே.   1.10.3

600   அகலிடத் தடங்கா வெற்றி யப்துல்முத் தலிபு பெற்ற
புகழபித் தாலி பென்னும் புரவலர் தம்மை நோக்கித்
துகளணு வணுகா மேனி சொரிகதி ரெறிப்பத் திண்மை
முகம்மதி னழகு பூத்த வாய்திறந் துரைக்க லுற்றார்.   1.10. 4

601   குடித்தனப் பெருமை சேர்ந்த குலத்தினுக் குயர்ந்த மேன்மை
படித்தலம் புகழுஞ் செங்கோற் பார்த்திவ ராத றேய்ந்து
மிடித்தவர் பெரிய ராதன் மிகுபுகழ் கிடைத்தல் கையிற்
பிடித்திடும் பொருள தன்றிப் பிறிதலை யுலகத் தன்றே.   1.10.5

602   ஒருதனி பிறந்து கையி னுறுபொரு ளின்றி யிந்தப்
பெருநிலத் திருந்து வாழ்தல் பேதமை யதனால் வண்மைத்
திருநகர் ஷாமிற் சென்று செய்தொழின் முடித்து வல்லே
வருகுவன் சிறியே னுந்த மனத்தரு ளறியே னென்றார்.   1.10.6

603   மகனுரைத் தவையுந் தங்கண் மனைவறு மையையு மெண்ணி
யகநினை யறிவு நீங்கி யாகுலக் கடலின் மூழ்கி
வகையுறத் தேறிச் செவ்வி முகம்மதின் வதன நோக்கி
நகுகதிர் முறுவற் செவ்வாய் திறந்த்பின் னவில லுற்றார்.    1.10.7

604   என்னுயிர்த் துணைவ னீன்ற விளங்கதிர்ப் பருதி யேயிந்
நன்னிலத் தரிய பேறே நங்குடி குலத்துக் கெல்லாம்
பொன்னுநன் மணியு மென்னப் பொருந்துநா யகமே தேறா
வொன்னலர்க் கரியே கேளென் னுளத்தினி லுற்ற தன்றே.    1.10.8

605   மன்றலந் துடவை சூழ்ந்த மக்கமா நகரில் வாழ்வோன்
றென்றிசை வடக்கு மேற்குக் கிழக்கெனுந் திக்கு நான்கும்
வென்றிகொள் விறலோன் செம்பொன் விழைதொழி லவருக் கெல்லாங்
குன்றினி லிட்ட தீபங் குவைலிது வென்னும் வேந்தன்.   1.10.9

606   இருகரஞ் சேப்பச் செம்பொ னிரவலர்க் கீந்த தாலு
மரியமெய் வருந்த நாளு மருந்தவம் புரிந்த தாலுங்
கருதிய வரத்தி னாலுங் கதிருமிழ்ந் தொழுகும் பைம்பொன்
வரையினின் மணிக்கொம் பென்ன வருமொரு மகவை யீன்றான்.    1.10.10

607   தேன்கட லமிர்துந் திக்கிற் றிகழ்வரை யமிர்துஞ் சூழ்ந்த
மீன்கட னடுவிற் றோன்றும் வெண்மதி யமிர்துந் துய்ய
கூன்கட வளையார் வெண்பாற் குரைகட லமிர்துஞ் சோதி
வான்கட லமிர்து மொன்றாய் வடிவெடுத் தனைய பாவை.   1.10.11

608   பைங்கட லுடுத்த பாரிற் பன்மணி வரையிற் றீவிற்
செங்கதிர்க் கனக நாட்டிற் செழுமணி மனைக்கு நாளுந்
தங்கிய சுடரு மொவ்வாத் தனித்தனி யழகு வாய்ந்த
மங்கையர் தனையொப் பென்ன வகுக்கநா வகுத்தி டாதே.    1.10.12

609   குலமெனும் விருக்கந் தோன்றிக் குழூஉக்கிளைப் பணர்விட் டோங்கி
நலனுறு செல்வ மென்னு நறுந்தழை யீன்று வண்ணச்
சிலைநுதற் பவளச் செவ்வா யனையெனுஞ் செம்பொற் பூவிற்
கலனனி நறவஞ் சிந்துங் கனியினுங் கனிந்த பாவை.   1.10.13

610   இனமெனுஞ் சோலை சூழ்ந்த விகுளைய ரெனும்வா விக்குட்
புனையிழை யனைக ரான பொன்னிதழ்க் கமல் நாப்பண்
வனைதரு பதும ராக மணிமடி யிருந்ஹ செவ்வி
யனமென விளங்கித் தோன்று மணியணிப் பாவை யன்னார்.    1.10.14

611   குரிசிலென் றுயர்ந்த வெற்றிக் குவைலிதன் பரிதிற் பெற்ற
வரிவைதன் னழகு வெள்ளத் தமுதினை யிருகண் ணாரப்
பருகுதற் கிமையா நாட்டம் படைத்திலோ மெனநா டோறுந்
தெரிவைய ருள்ளத் தெண்ணந் தேற்றினுந் தேறா தன்றே.   1.10.15

612   வானகத் தமர ராலு மானில மக்க ளாலுந்
தானவ யவத்தின் செவ்வி தனையெடுத் தின்ன தின்ன
தானநன் குவமை யென்ன வளவறுத் துரைக்க வொண்ணாத்
தேன்மொழி கதிஜா வென்னுந் திருப்பெயர் தரித்த பாவை.   1.10.16

613   வருகலி வெயிலால் வாடு மானுடப் பயிர்கட் கெல்லாம்
பொருளெனு மாரி சிந்திப் பூவிடத் தினிது நோக்கி
யருமறை மலருட் காய்த்த வறிவெனுங் கனியை யுண்ட
திருநமர் குலச்சஞ் சீவிச் செழுங்கொழுந் தனைய பூவை.   1.10.17

614   வணக்கமு மறிவுஞ் சேர்ந்த மனத்துறும் பொறையு நல்லோ
ரிணக்கமும் வறியோர்க் கீயு மிரக்கமு நிறைந்த கற்புங்
குணக்கலை வல்லோ ராலுங் குறித்தெடுத் தவட்கொப் பாகப்
பணக்கடுப் பாந்தட் பாரிற் பகருதற் கரிய வன்றே.   1.10.18

615   மின்னென வொளிம றாத விளங்கிழை கதிஜா வென்ன
மன்னிய பொருளின் செல்வி மனையகத் தினினா டோறு
மின்னணி நகர மாக்க ளியாவரு மினிது கூறப்
பொன்னனி வாங்கித் தேச வாணிபம் பொருந்தச் செய்வார்.    1.10.19

616   கலைத்தடக் கடலே யெந்தங் கண்ணிரு மணியே யாமு
மலைத்தடக் கடற்கட் பாவை யணிமனை யடுத்துச் செம்போ
னிலைத்திட நினைத்து வாங்கி நெறிநெடுந் தூர மெல்லாந்
தொலைத்திவண் புகுவம் வல்ல தொழின்முடித் திடுவ மென்றே.    1.10.20

617   தீனகக் குளந்த டாகந் திசைதொறு நிறைந்து தேக்க
வானதிப் பெருக்கை யொப்ப வருமுகம் மதுவை நோக்கித்
தூநகை முறுவல் வாய்விண் டுரைத்தனர் சொன்ன மாரி
யானென வுதவுஞ் செங்கை யருளெனுங் கடலி னாரே.   1.10.21

618   தரைத்தலம் புகழும் வெற்றித் தடப்புயத் தபித்தா லீபு
முரைத்தவை யனைத்துந் தேர்ந்து முகம்மது முளத்தி னூடு
வருத்தமுஞ் சிறிது நேர மகிழ்ச்சியுந் தொடர்ந்து தோன்றக்
கருத்தினி லிருத்திக் தாதை கழறல்சம் மதித்தி ருந்தார்.   1.10. 22

619   குங்குமத் தடந்தோள் வள்ளல் குறித்திடுங் கருத்தி னூடு
செங்கயல் வரிக்கட் செவ்வாய்த் திருந்திழை கதிஜா வென்னு
மங்கைதம் பெயருஞ் சித்ர வடிவுநின் றுலவ மாறாப்
பொங்கறி வதனான் மூடிப் புந்தியின் மறைப்ப தானார்.   1.10.23

620   மம்மரை மனத்துள் ளாக்கி முகம்மது கதிஜா வென்னும்
பெய்ம்மலர்க் கொம்பே யன்ன பெண்மனைக் கடையிற் சாரு
மம்மறு கிடத்திற் போக்கும் வரத்தும தாகி வாசச்
செம்மலர்ச் சுவடு தோன்றாத் திருவடி நடத்தல் செய்தார்.   1.10.24

621   இப்படி நிகழ்கா லத்தோ ரிளவன்மா மறைக்கு வல்லான்
மைப்படி கவிகை வள்ளல் வனப்பிலக் கணமு நீண்ட
கைப்படு குறியுஞ் சேர்ந்த கதிர்மதி முகமு நோக்கிச்
செப்பிடற் கரிய வோகைத் திருக்கட லாடி னானே.   1.10.25

622   பெரியவன் றூத ராகப் பிறந்தொரு நபிபிற் காலம்
வருகுவர் சரத மென்ன மறையுண ரறிவர் கூடித்
தெரிதர வுரைத்த தெல்லா மிவரெனத் தேறும் வாளா
லிருளறுத் துண்மை யாயுள் ளிருத்தினன் பெருத்த நீரான்.   1.10.26

623   கண்டவ னுளத்தி னூடு கண்கொளா வுவகை பொங்கிக்
கொண்டுகொண் டெழுந்து சென்று குவைலிது மனையு ளாகி
வண்டுகண் படுக்குங் கூந்தன் மடமயில் கதிஜா வென்னு
மொண்டொடி திருமுன் முந்தி யொதுக்கிவாய் புதைத்துச் சொல்வான்.

624   குவைலிது தவத்தின் பேறே குரைகடன் மணியே நீண்ட
புவியிடை யமுதே பொன்னே பூவையர்க் கரசே யென்றன்
செவியினிற் பெரியோர் கூறுஞ் செய்தியாற் றேர்ந்து தேர்ந்த
கவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான்.    1.10.28

625   வன்மன நஸ்றா வென்ன வருபெருங் குலத்திற் றோன்றிப்
பன்முறை மறைக டேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி
நின்மனந் தேறக் கண்ட புதுமையை நினவ றாமற்
சொன்மென மயிலே யன்னார் சொற்றபி னவனுஞ் சொல்வான்.    1.10.29

626   முல்லைவெண் ணகையாய் தொன்னாண் முறைமுறை மறைக ளெல்லாம்
வல்லவர் தௌிந்த மாற்ற மக்கமா நகரிற் பின்னா
ளெல்லையில் புதுமை யாயோ ரிளவல்வந் துதித்துப் பாரிற்
பல்லருந் தீனி லாகப் பலன்பெற நடக்கு மென்றும்.   1.10.30

627   ஈறிலா னபியாய்த் தோன்று மெழின்முகம் மதுதம் மெய்யின்
மாறிலாக் கதிருண் டாகி மான்மதங் கமழு மென்றுஞ்
சேறிலாங் ககில மீதிற் றிருவடி தோயா தென்றுங்
கூறிலாப் பிடரின் கீழ்பாற் குறித்தலாஞ் சனையுண் டென்றும்.    1.10.31

628   வியனுறு புறுக்கா னென்னும் வேதமொன் றிறங்கு மென்றுங்
குயின்மொழிப் பவளச் செவ்வாய்க் கொடியிடைக் கருங்கட் பேடை
மயிலினை யிந்த வூரின் மணமுடித் திடுவ ரென்றும்
நயனுறக் கேட்டே னின்றென் னயனங்கள் குளிரக் கண்டேன்.    1.10.32

629   முன்னுணர்ந் தவரைக் கேட்டு முதலவன் மறைக டேர்ந்தும்
நின்னையொப் பவரு மில்லை யாகையா னினது பாலம்
மன்னைவிண் ணப்பஞ் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும்
பொன்னனீ ரென்னப் போற்றிப் புகழ்ந்தன னெகிழ்ந்த நெஞ்சான்.   1.10.33

630   கலைவலா னுரைத்த மாற்றங் கேட்டபின் கதிஜா வென்னுஞ்
சிலைநுத றௌியத் தேர்ந்தோர் செவ்வியோன் றன்னைக் கூவி
யலகில்வண் புகழ்சேர் வள்ள லகுமதை யினிதிற் கூட்டித்
தலைவநீ வருக வென்னத் தாழ்ச்சிசெய் தெழுந்து போந்தான்.    1.10.34

631   ஏவலென் றுரைத்த மாற்ற மிடையறா தொழுகிச் செய்யுங்
காவல னபித்தா லீபு கடைத்தலை கடந்து சென்று
பாவலம் பிய செந் நாவார் பன்முறை வழுத்தப் போதா
மேவலர்க் கரியே றென்னு முகம்மதை விரைவிற் கண்டான்.   1.10.35

632   கண்டுகண் களித்துள் ளஞ்சிக் கரகம லங்கள் கூப்பி
யொண்டொடி கதிஜா வென்னு மோவிய முரைத்த மாற்றம்
விண்டுவிண் ணப்பஞ் செய்தான் விரைகம ழலங்கற் றிண்டோட்
கொண்டறன் செவியு நெஞ்சுங் குறைவறக் குளிர வன்றே.   1.10. 36

633   கூறிய கூற்றைக் கேட்டுக் குறித்துள கரும மின்று
மாறிலா தடைந்த தென்ன முகம்மது மனத்தி லுன்னித்
தேறியங் கெழுந்து போந்தார் தேனினு மதுர மாறா
தூறிய தொண்டைச் செவ்வா யொண்ணுதன் மனையி லன்றே.    1.10.37

634   சித்திர வனப்பு வாய்ந்த செம்மறன் வரவு நோக்கிப்
பத்திரக் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பதும ராக
முத்தணி நிரைத்த பீட முன்றிலிற் காந்தட் கையால்
வைத்திவ ணிருமென் றோத முகம்மது மகிழ்ந்தி ருந்தார்.   1.10.38

635   எரிமணித் தவிசின் மேல்வந் திருந்தலக் கணமும் பொற்புந்
திருவுறை முகமு மன்பு திகழ்தரு மகமுங் கண்ணும்
விரிகதிர் பரந்த மெய்யும் விறல்குடி யிருந்த கையு
மருமலர் வேய்ந்த தோளு மணிதிரண் டனைய தாளும்.   1.10.39

636   பேரொளி பரப்பிப் பொங்கிப் பெருகிய வழகு வெள்ளச்
சார்பினிற் கதிஜா வென்னுந் தையறன் கரிய வாட்கட்
கூருடைக் கயல்க ளோடிக் குதித்தன குளித்துத் தேக்கி
வாரிச வதனஞ் சேர்ந்து மறுக்கமுற் றிருந்த வன்றே.   1.10.40

637   பார்த்தகண் பறித்து வாங்கப் படாமையா னறவஞ் சிந்தப்
பூத்தகொம் பனைய மெய்யி னாணெனும் போர்வை போர்த்துக்
கூர்த்தவா வௌிப்ப டாமற் கற்பெனும் வேலி கோலிச்
சேர்த்ததம் முளங்கா ணாது திருந்திழை வருந்தி நின்றார்.   1.10.41

638   மெய்மொழி மறைக டேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து
மொய்மலர்க் கதிஜா செவ்வி முழுமதி வதன நோக்கிச்
செய்தவப் பலனே யன்ன வள்ளலைத் திரும னைக்கே
எய்துதற் கருள்செய் வீரென் றெடுத்துரை விடுத்துச் சொன்னான்.    1.10.42

639   விரும்பிய காம நோயை வௌிவிடா தகத்துள் ளாக்கி
யரும்பிள முறுவற் செவ்வா யணிமல ரிதழை விண்டோ
யிரும்புகழ் தரித்த வெற்றி முகம்மதை யினிதி னோக்கி
வரும்பெருந் தவமே நுந்த மனையிடத் தெழுக லென்றார்.   1.10.43

640   காக்குதற் குதித்த வள்ளல் காரிகை வடிவைக் கண்ணா
னோக்கியு நோக்கா தும்போ னொடியினி லெழுந்தம் மாதின்
மாக்கட லனைய கண்ணு மனமும்பின் றொடர்ந்து செல்லக்
கோக்குல வீதி நீந்திக் கொழுமனை யிடத்திற் சார்ந்தார்.   1.10.44

641   மடங்கலே றனைய செம்மன் மனையில்வந் திருந்த போழ்தே
படங்கொள்பூ தலத்தி ராசப் பதவியும் பெரிய வாழ்வு
மிடங்கொள்வா னகத்தின் பேறு மௌிதினி னும்பாற் செல்வ
மடங்கலு மடைந்த தின்றென் றறைந்துபண் டிதன கன்றான்.    1.10.45

642   தெரிந்துணர்ந் தறிந்தோர் மாற்றஞ் சிறிதெனும் பழுது வாரா
விரிந்தநூ லுரையும் பொய்யா விளங்கொளிர் வடிவ தாக
விருந்தவர் நபியே யாமு மிவர்மனை வியரே யென்னக்
கருந்தடங் கண்ணா ருள்ளக் கருத்தினி லிருத்தல் செய்தார்.    1.10.46

643   படியினிற் சசியுஞ் செங்கேழ்ப் பரிதியு நிகரொவ் வாத
வடிவெடுத் தனைய வள்ளன் முகம்மதி னெஞ்ச மென்னுங்
கடிகமழ் வாவி யூடு கருத்தெனும் கமல நாப்பண்
பிடிநடைக் கதிஜா வென்னும் பெடையென முறைந்த தன்றே.    1.10.47

644   தம்மனத் துறைந்த காத றனைவௌிப் படுத்தி டாமற்
செம்மலு மிருந்தார் மற்றைச் சிலபகல் கழிந்த பின்னர்
மும்மதம் பொழியு நால்வாய் முரட்கரி யபித்தா லீபு
விம்மிதப் புயம்பூ ரிப்ப மைந்தனை விளித்துச் சொல்வார்.   1.10. 48

645   தெரிதரத் தௌிந்த சிந்தைத் தேமொழி கதிஜா பாலில்
விரைவினிற் சென்று செம்பொன் விளைவுறச் சிறிது கேட்போ
மருளொடு மீந்தா ரென்னி லதற்குறு தொழிலைக் காண்போம்
வரையற விலையென் றோதில் வருகுவம் வருக வென்றார்.   1.10.49

646   உரைத்திடுந் தந்தை மாற்றஞ் செவியுற வுவகை பொங்கி
விரைத்தகாக் குழற்க தீஜா மெல்லிழை நினைவு நெஞ்சும்
பொருந்திய வகத்தி னூடு புக்கிடத் திருவாய் விண்டு
கரைத்தனர் நாளைக் காண்போங் கருதிய கரும மென்றே.    1.10.50

647   வேறு
மருக்கொள் பூதரப் புயநபி முகம்மது
    மனையிடை மகிழ்கூர
    விருக்கு மெல்லையி லெல்லவன் புகுந்திர
    விருள்பரந் திடுகாலைக்
    கருக்கு மைவிழி துயிறரு பொழுதொரு
    கனவுகண் டனர்நூலிற்
    சுருக்கு நுண்ணிடைப் பொலன்றொடி திருந்திழை
    சுடர்மணி கதிஜாவே.    1.10.51

648   நிறையும் வானக மலர்தரு முடுவின
    நிரைவிடுத் தௌிதாகக்
    கறையி லாக்கலை முழுமதி மடிமிசை
    கவினொடு விளையாட
    மறைவி லாதுகண் டணிதுகில் கொடுதனி
    மகிழ்வொடு பொதிவாகக்
    குறைவி லாதுரத் துடனணைக் கவுமகங்
    குளிரவு மிகத்தானே.    1.10.52

649   கண்ட காரண மாதுல னெனவரு
    கலைவல னொடுகூற
    விண்டு கூர்த்திடப் பார்த்தனன் றௌிந்திவர்
    விரைமலர் முகநோக்கி
    வண்டு லாம்புய நபியுனை யிதமுற
    மணமுடித் திடநாடிக்
    கொண்ட தாமிதென் றோதிட வுடலங்
    குளிர்ந்திருந் திடுநேரம்.    1.10.53

650   மதும மார்த்தெழு புயவபித் தாலிபு
    முகம்மது நயினாரும்
    விதுவுஞ் சேட்டிளம் பருதியுங் கலந்துடன்
    விரைவொடு தெருவூடே
    புதுமை யாய்நடந் தணிநில வெறித்திடப்
    புனையிழை கதிஜாதஞ்
    சுதைகொண் மண்டப மணிக்கடைப் புகுந்தனர்
    துணைவழி களிகூர.    1.10.54

651   இருவ ரும்வரக் கண்டன ரெழுந்திருந்
    திணைமல ரடிபோற்றிச்
    சொரியு மென்கதி ராதனத் திருத்திநந்
    தூய்மலர்ப் பதநோவ
    வரிதில் வந்ததென் புன்மொழிச் சிறியவ
    ரறிவிலர் மனைதேடித்
    தெரியக் கூறுமென் றஞ்சிநின் றுரைத்தனர்
    தேமொழி கதிஜாவே.    1.10.55

652   இந்த மாநிலத் தொருநிதி யேயென
    திருவிழி மணியேகேள்
    சுந்த ரப்புய னப்துல்லா வெனதுறு
    துணையுயிர்க் குயிரான
    மைந்த ரிங்கிவர் மனத்திருள் கெடவொரு
    மணமுடித் திடநாடிச்
    சிந்தை நேர்ந்திவ ணடைந்தன ருமதுரைத்
    திருவுள மறியேனே.    1.10.56

653   சிறிது பொன்னென திடத்தினி லளித்திடிற்
    றேசிக ருடன்கூடி
    யுறுதி ஷாமினுக் கேகியிங் கடைகுவ
    னுமதரு ளுளதாகில்
    வறிய வர்க்கொரு மணநிறை வேறிடு
    மடமயி லனையாரீ
    தறுதி யில்லெனி லதுதுவுநன் றெனவபித்
    தாலிபு முரைத்தாரே.    1.10.57

654   நிரைத்த செவ்வரி பரந்தகட் கடைமயி
    னிசமென வபித்தாலி
    புரைத்த வார்த்தையுந் தம்ம்னக் கருத்தையு
    முடன்படுத் திடநோக்கித்
    திரைத்த டத்தலர் மரையென முகமலர்
    செறிதரத் துயர்கூரும்
    வருத்த மின்னினை வின்படி முடிந்தென
    மனத்திடைக் களித்தாரே.   1.10.58

655   பூத ரம்பொரு புயத்தபித் தாலிபு
    புளகெழு முகநோக்கி
    மாத வத்தினென் பொருளுள தெவையுநின்
    மனைப்பொரு ளௌியேனு
    மாத ரத்துறு மொழிவழி நடப்பதற்
    கையுறே லெனப்போற்றிக்
    காத லித்துரைத் தார்விரைத் தார்குழற்
    கனிமொழி கதிஜாவே.    1.10.59

656   இனிய வாசக மிருதுளைச் செவிபுக
    விதயமென் மலர்போத்த
    துனிப றந்தன வுவகையும் பிறந்தன
    துணைவரைப் புயமீறத்
    தனிய னம்வயி னினஞ்சில பெறுபொரு
    டருகுவ னெப்போற்றி
    வனச மென்மலர் முகமலர்ந் திருந்தனர்
    மருவல ரறியேறே.    1.10.60

657   கொடுவ ரிப்பதத் துகிர்முனை யரிந்தன
    கோதில்வெண் ணறுவாசத்
    தடிசி லும்மறு சுவைப்பொரிக் கறிகளு
    மமுதொடு செழுந்தேனும்
    வடிந றாவுடைந் தொழுகுமுக் கனியுடன்
    மதுரமென் மொழிகூறி
    யிடுவி ருந்தளித் தாரிரு வருக்குமோ
    ரிளங்கொடி மடமானே.    1.10.61

658   அனம ருந்திய வரசர்க டமைமணி
    யாசனத் தினிதேற்றி
    நனைத ருந்துவர்க் காயிலை பாளித
    நறும்புகை மலர்சாந்தம்
    புனையு மென்றுகிற் கஞ்சுகி சிரத்தணி
    போல்வன பலவீந்து
    சினவு வேல்விழி பொருள்கொடு வருகென
    வுரைத்தனர் திருவாயால்.   1.10. 62

659   ஆட கங்கொணர் கென்றலும் வான்றொடு
    மறையினிற் சிலரோடி
    மூடு பெட்டகந் திறந்தனர் கொணர்ந்தனர்
    குவித்தனர் முறையாக
    நீடி லக்கநூ றயிரத் தொன்பதி
    னாயிர நிறைதேர்ந்த
    மாடை தானெடுத் தீந்திடக் கொண்டனர்
    முகம்மது நயினாரே.    1.10.3

660   கொடுத்த தங்கம லாற்பெரும் ஷாமெனக்
    குறித்திடுந் திசைக்கேற்க
    வெடுத்த நற்சரக் கொட்டையின் பொதியிரு
    நூறொடு திரளாக
    விடுத்த கப்பரி வாரத்தி லுரியவர்
    விறல்கெழு வயிரவீந்
    தொடுத்த நெஞ்சின ரிருபது பெயரையுந்
    தொகுத்தனர் மடமானே.    1.10.64

661   வடிவு றுந்திரட் டாள்களு மிருபுறம்
    வகிர்தரு மயிர்வாலு
    நெடுகிக் கட்டுரத் திறுகிய கண்டமு
    நிமிர்ந்தமெய் யுறுகூனு
    நடையி லோர்பகற் கொருபதின் காவத
    நடந்திடுந் திடத்தாலுங்
    கடிய வொட்டையொன் றெழினபிக் களித்தனர்
    கரியமை விழிமானார்.    1.10.65

662   மல்ல லம்பிய புயமுகம் மதுநபி
    மனத்தினின் மகிழ்கூரச்
    செல்ல லைந்திடப் பொழிதரு கரமிசைச்
    செழுங்கதிர் வடிவேலு
    மெல்ல வன்கதிர் மறைதரு குற்றுடை
    வாளொடு மினிதீந்தார்
    வில்லின் மேற்பிறை தோற்றிய தெனநுதல்
    விளங்கிய மடமானே.    1.10.66

663   இவையெ லாநபிக் களித்த பினேவலி
    னியலுறு மைசறாவை
    நவைய றத்தம தருகினி லிருத்திவெண்
    ணகைமலர் முகநோக்கிப்
    புவியி னின்னிலு மெனக்குரி யவரிலைப்
    பொருளுநின் பொருளேயா
    மவய வந்தனைக் காப்பவர் போனபிக்
    கடுத்தினி துறைவாயே.    1.10.67

664   ஏகும் பாதையிற் பண்டித னொருவனுண்
    டியன்மறை வழிதேர்ந்த
    வாக னெம்மினத் தவரிலு முரியவன்
    மகிழ்ந்தவ னிடத்தேகி
    நீக ருத்துட னெனதுச லாமையு
    நிகழ்த்திநள் ளிருட்போது
    மோக முற்றியான் கண்டிடுங் கனவினை
    மொழியென மொழிவாயே.   1.10.68

665   பாதை யுற்றிடுஞ் செய்தியு மிவர்க்கிடர்
    பணித்திவர் தமக்கான
    வாதை யுற்றிடு வருத்தமுங் காரணத்
    தொகுதியும் வனஞ்சார்ந்த
    போதி னிற்பெரும் புதுமையு மிங்கிவர்
    பொறுமையு நகர்சேர்ந்து
    சூதர் தம்மொடு மிருப்பது மினமெனச்
    சூழ்ந்தவர் வரலாறும்.    1.10.69

666   இற்றை நாட்டொடுத் தந்நகர்க் கேகியிங்
    கிவண்புக வருநாளை
    யற்றை நாளைக்குங் கண்டிடுங் காரண
    மனைத்தையுந் தொடராக
    ஒற்றர் தம்வயி னெழுதியுங் கனுப்பியென்
    னுறுவிழி மணிபோலுங்
    குற்ற மில்லதோர் நபியுடன் வருகென
    வுரைத்தனர் குலமாதே.    1.10.70

667   இத்தி றத்துரை பகர்ந்தன ரழகொளி
    ரிளமயின் முகநோக்கி
    மத்த கக்கட கரிமுகம் மதினெழின்
    மலரடி யிணைபோற்றி
    யுத்த ரப்படிப் பணிகுவ னவரையென்
    னுயிரினு மிகக்காத்து
    முத்தி ரைப்படி வருகுவன் காணென
    மொழிந்தடி பணிந்தானே.   1.10.71

668   முருகு லாங்குழன் மயிலபித் தாலிபு
    முழுமதி முகநோக்கி
    யரசர் நாயக நின்மனைக் கெழுகென
    வுரைத்தலு மவர்போந்தார்
    பரிச னங்களும் வணிகருஞ் சூழ்தரப்
    பாதமென் மலர்பாரிற்
    றெரித ராமுகம் மதுநபி யாத்திரைத்
    திரளொடு மெழுந்தாரே.    1.10. 72

669   கூன்றொ றுத்தொறும் பொதியெடுத் தேற்றிய
    குழுவிடை நயினாரு
    மேன்ற தம்மிரு கரத்தினும் பொதியிரண்
    டெடுத்தெடுத் தினிதேற்றிச்
    சான்ற பேர்கட மனத்ததி சயமுறத்
    தையறன் மனைநீங்கித்
    தோன்ற றோன்றின ரணிமணி மறுகிடைச்
    சுடர்விடு மதியேபோல்.    1.10.73

670   அருந்த வத்தபூ பக்கருஞ் சுபைறுட
    னாரிது மப்பாசுந்
    திருந்தி லாமனத் தபுஜகி லொடுங்கலை
    தெரிதரு மசைறாவும்
    பொருந்தக் கூடிய மாக்களி மிடபமும்
    புரவியுந் துகளார்ப்ப
    வருந்தி லாப்பெரு வாழ்வுகொண் டுறைதரும்
    வளநகர்ப் புறத்தானார்.    1.10.74

671   ஊறு நீர்த்தடக் கரைகளுங் குட்டமு
    மோடையு மலர்க்காடுந்
    தேற றூற்றிய சோலையு மரம்பையின்
    றிரளிடைப் பழக்காடுங்
    கூறு கூறுகொண் டிடுகிடங் கிடைச்சிறு
    கொடியிலைக் கொடிக்காலுஞ்
    சாறு கொண்டெழு மாலையுங் கன்னலஞ்
    சாலையுங் கடந்தாரே.    1.10.75

672   கடந்து காவத நடந்தொரு பொழிலிடை
    காளைக ளனைவோரு
    மிடம்பெ றத்திரண் டிறங்கியங் குறைந்தன
    ரிட்பொழு தினைப்போக்கி
    விடிந்த காலையின் முன்னிலை யெவரென
    விளம்பின ரவரோடு
    மடைந்த பேர்களின் முகம்மது முதலென
    அபூபக்க ரறைந்தாரே.    1.10.76

673   முகம்ம தென்றுரை கேட்டலு மபுஜகில்
    மனத்திடை தடுமாறி
    மிகமு னிந்தன னிவர்தமை முன்னிலை
    விலக்குவ துனக்காகா
    திகழெ னப்பலர் கூறவுங் கேட்டில
    னிதற்குமுன் னிலையானென்
    றகம கிழ்ந்திட நடந்தனன் கெடுமதி
    யடைவது மறியானே.    1.10.77

674   ஒட்டை மீதினில் வருன்பொழு தவ்வழி
    யோரிடத் திடையூறாய்க்
    கட்டை தட்டிட வொட்டையுஞ் சாய்ந்தொரு
    கவிழொடு தலைகீழாய்
    முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும்
    முழுப்பெருக் கெனச்சோரி
    கொட்டி னானெழுந் தானபு ஜகிலெனுங்
    கொலைமனக் கொடியோனே.   1.10.78

675   உதிரங்கொப் பளித்து முகமழிந் துடைந்தான்
    முகம்மதை யுறுதிகே டாக
    நிதமுரைத் ததனா லபுஜகி லினமு
    நிலைகுலைந் திடுவது நிசமென்
    றதிர்தர வுரைத்துப் பல்லருங் கூண்டிவ்
    வாற்றிடை முன்னிலை யானோன்
    மதுரமென் மொழியா னுத்பா வலது
    மறுத்தெவ ருளரெனத் தேர்ந்தார்.   1.10.79

676   கூறுமென் மொழியா னுத்பா வென்னுங்
    குரிசில்பி னியாவரு நடந்து
    தூறடை நெறியுஞ் சிறுபரற் றிடருந்
    தொலத்திடுங் காலையி லாங்கோர்
    யாறிடை வீழ்ந்தான் முன்னிலை யிளவ
    லனைவரும் பயந்திட வன்றே.   1.10.80

677   நிலமிசை கலங்கி யுத்துபா வீழ
    நெடுங்கழுத் தலைவரி வேங்கை
    யலைபடப் பிடித்தங் கடவியி னடைய
    வருக்கனுங் குடபுலத் தடைந்தான்
    செலநெறி தெரியுந் தெரிகிலா தென்னத்
    திசைதிசை நிறைந்தது திமிரம்
    பலபல வருக்கச் சரக்கெலா மிறக்கிப்
    படுபரற் பாதையி லுறைந்தார்.   1.10.81

678   ஆய்ந்தபே ரறிவர் பசிக்கிடர் தவிர்த்தங்
    கவரவர் சார்பினிற் சார்ந்தார்
    வாய்த்தபே ரெழிலார் முகம்மதுந் துயின்றார்
    மாகமட் டெண்டிசை கவிய
    வேய்ந்தவல் லிருளி லடிக்கடி வெருவி
    விடுதியி னடுவுறைந் தவணிற்
    சாய்ந்திடா திருகண் டூங்கிடா திருந்தான்
    றருக்கினால் வெருக்கொளு மனத்தான்.   1.10.82

679   அலரிவெண் டிரைமே லெழுந்தனன் கீழ்பா
    லனைவரு மெழுகவென் றெழுந்தார்
    நிலைதளர்ந் திருந்த வுத்துபா வென்போ
    னெறியின்முன் னிலைநடப் பதற்கோர்
    தலைவரை வேறு நிறுத்துமென் றுரைத்த
    தன்மைகேட் டனைவரும் பொருந்தி
    யிலைமலி வேலா னாசெனுங் குரிசின்
    முன்னிலை யெனவெடுத் திசைத்தார்.   1.10.83


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
 1.11 சுரத்திற் புனலழைத்த படலம்


680   முன்னிலை யாசு நடந்திட நடந்து
    முதிரட விகள்கடந் ததற்பின்
    றன்னிக ரில்லான் றிருவுளப் படியாற்
    றரையினிற் ஜிபுறயீ லிறங்கி
    யிந்நிலத் தெவர்க்குந் தெரிகிலா வண்ண
    மிளம்பிடி யொட்டையொன் றௌிதாய்ப்
    பன்னரும் பாதைத் தலைதடு மாறப்
    பண்பொடு கொடுநடத் தினரே.   1.11.1

681   மட்டவிழ் புயத்தா னாசுமுன் னடத்தி
    வந்தவொட் டகம்புது மையதாம்
    பெட்டையொட் டகத்தைக் கண்டுபின் றொடரப்
    பிசகின தருநெறி கானிற்
    செட்டரு மெருதும் புரவியு மிடைந்து
    சிறுநெறி வயின்வெகு தூர
    மெட்டிமுன் னடப்பச் சிறுநெறி குறுகி
    யிருந்ததுந் தேய்ந்தபோ யதுவே.   1.11.2

682   ஆசெனு மரச னொட்டகக் கயிற்றை
    யசைத்திடுந் திசையெலா நடப்ப
    வாசியு மெருதுங் கூன்றொறுத் தொகையும்
    வழிகெடத் தனித்தனி மறுகத்
    தேசிகர் கலங்கி யாமிதற் கென்கொல்
    செய்குவ தெனமன மிடைந்து
    வீசிய கானற் சுடச்சுடக் கருகி
    விடர்விடும் பாலையி லடைந்தார்.   1.11.3

683   பின்னிய திரைவா ருதியினைச் சுவற்றிப்
    பெரும்புறக் கடலினைத் தேக்கித்
    தன்னகங் களித்து வடவையின் கொழுந்து
    தனிவிளை யாடிய தலமோ
    பன்னருந் தென்கீழ்த் திசையினன் றிரண்ட
    படையொடு மிருந்தபா சறையோ
    வுன்னதக் ககன முகடற வுருக்கு
    முலைகொலொ வெனவறி கிலமால்.    1.11.4

684   பருத்திருந் தெழுந்து பறந்தசின் னிழலும்
    பற்றறாக் கானலிற் றேய்ந்த
    கரிந்திலை தோன்றா தொவ்வொரு விருக்கங்
    கணங்களின் குலமெனத் தோன்று
    மெரிந்தெரி மேய்ந்து கரிந்துவிண் ணிடங்காந்
    திடுந்தரை யொருதுளி நீரு
    மருந்திடக் கிடையா தலகைக டிரிந்தங்
    காள்வழக் கற்றவெங் கானம்.   1.11.5

685   பாலையென் றுலர்ந்த செந்நிலக் கானற்
    பரப்பினைப் புனலென வோடிச்
    சாலவு மிளைத்துத் தவித்துழை யினங்க
    டனித்தனி மறுகிய மறுக்க
    மாலுளர்ந் திருண்ட புன்மனச் சிறியோர்
    மருங்கினி லிரந்திரந் திடைந்து
    காலறத் தேய்ந்த பலகலை மேலோர்
    கருத்தினில் வருத்தமொத் தனவே.    1.11.6

686   கள்ளியின் குலங்கள் வெந்தொடுங் கினவேர்க்
    கட்டையி னுட்டுளை கிடந்து
    புள்ளிபூத் திருந்த பைத்தலைப் பாந்தள்
    புறந்திரிந் துறைந்திடா திறந்து
    முள்ளெயி றொதுங்கிச் செம்மணி பிதுங்கி
    முளைதொறுங் கிடப்பதைச் செறிந்த
    கொள்ளியிந் தனங்க ளென்றுழைக் குலங்கள்
    குறுகிடப் பயந்துகான் மறுகும்.   1.11.7

687   மூவிலை நெடுவேற் காளிவீற் றிருப்ப
    முறைமுறை நெட்டுடற் கரும்பே
    யேவல்செய் துறைவ தலதுமா னிடர்கா
    லிடுவதற் கரிதுசெந் நெருப்புத்
    தாவியெப் பொருப்புங் கரிந்தன சிவந்து
    தரைபிளந் ததுவதிற் பிறந்த
    வாவியோ வெழுந்த புகைபரந் ததுவோ
    வறக்கொடுங் கானலென் பதுவே.   1.11.8

688   சேந்தெரி பரந்த பாலையிற் புகுந்து
    சென்னெறி சிறிதுந்தோன் றாமற்
    காந்தெரி கதிரோ னெழுதிசை தெற்கு
    வடக்குமேற் கெல்லைகா ணாமன்
    மாந்தரு மாவுந் திசைதடு மாறி
    வாயீனி ரறவுலர்ந் தொடுங்கி
    யேந்தெழில் கருகி மனமுடைந் துருகி
    யெரிபடு தளிரையொத் திடுவார்.   1.11. 9

689   மன்னவ னாக முன்னடந் ததற்கோர்
    வல்வினை பின்றொடர்ந் ததுவோ
    வின்னைநா ளகில மடங்கலுந் தழலா
    லெரிபடு காரணந் தானொ
    முன்னைநாள் விதியோ நகரைவிட் டெழுந்த
    முகுர்த்தமோ பவங்கண்முற் றியதோ
    பன்னுதற் கெவையென் றறிகுவோங் கொடியேம்
    பாலையிற் படும்வர லாறே.   1.11.10

690   பாடுறு புனலறத் றொவ்வொரு காதம்
    படுபரற் பரப்புநாற் றிசைக்கு
    மோடுவர் திரும்பி மீள்குவ ரடிசுட்
    டுச்சியும் வெதுப்புற வுலர்ந்து
    வாடுவர் துகில்கீழ்ப் படுத்தியொட் டகத்தின்
    வயிற்றிடை தலைநுழத் திடுவார்
    தேடிடும் பொருட்கோ வுயிரிழப் பதற்கோ
    செறிந்திவ ணடைந்தன மென்பார்.    1.11.11

691   ஓங்கிய வுதய கிரிமிசை யெழுந்த
    மதியென வொட்டகை யதன்மேல்
    வீங்கிய புயமுங் கரத்தினி லயிலும்
    வெண்முறு வலுமலர் முகமும்
    பாங்கினிற் குளிர்ந்த வெண்கதிர் பரப்பப்
    பரிமள மான்மதங் கமழத்
    தூங்கிசை மறைதேர் முகம்மதும் பாலைத்
    துன்புறா தின்பமுற் றனரே.   1.11.12

692   பாலையி லடைந்து பசியினா லிடைந்து
    பலபல வருத்தமுற் றதுவும்
    வேலைவா ருதிபோல் வழிபிழைத் ததுவும்
    விழுந்தியான் முகமுடைந் ததுவுங்
    கோலமார் புலிவந் ததுமுகம் மதையாங்
    கூட்டிவந் துறுபவ மென்னச்
    சாலவு முரைத்தா னீதியை வெறுத்த
    தறுகணா னெனுமபூ ஜகிலே.   1.11.13

693   மூரிவெற் பனைய புயமுகம் மதுவை
    முன்னிலைத் தலைவராய் நிறுத்தித்
    தாரையிற் செலுநம் மிடர்களுந் தவிருந்
    தழலெழும் பாலையுங் குளிர்ந்து
    வேரியங் கமல வாவியங் கரையாம்
    விரைவினிற் சாமடை குவமென்
    றாரிதுக் குரைத்தார் தாதவிழ் மலர்த்தா
    ரணிதிகழ் புயத்தபூ பக்கர்.   1.11.14

694   ஈதுநன் றெனவொத் தனைவரு மிசைத்தா
    ரெழின்முகம் மதுவுமுன் னிலையாய்ப்
    பாதையி னடப்பப் பெரியவ னருளின்
    பணிகொடு ஜிபுறயீ லிறங்கிப்
    பேதமற் றணுகி யொட்டகக் கயிற்றைப்
    பிடித்தன ரரைநொடிப் பொழுதிற்
    றீதற நெறியுங் தெரிந்தன நான்கு
    திசைகளுந் தௌிதரத் தெரிந்த.   1.11.15

695   தலமைமுன் னிலையாய் முஅக்ம்மது நடப்பச்
    சாருநன் னெறியினைச் சார்ந்தோம்
    நிலமிசைக் கரிய மேகமொன் றெழுந்து
    நிழலிவர்க் கிடுவதுங் கண்டோம்
    மலைகடற் றிரைபோற் கானலில் வெதும்பி
    யலைந்திடு வருத்தமுஞ் தவிரப்
    புலனுறப் புனலும் பருகுவஞ் சிறிது
    போழ்திலென் றனைவரும் புகன்றார்.    1.11.16

696   மந்தரம் பொருவா தெழுந்தபொற் புயத்து
    முகம்மது மேறுவா கனத்தின்
    கந்தரக் கயிற்றை யசைத்திட வுளத்தின்
    கருத்தறிந் தொட்டகங் களித்துச்
    சுந்தரப் புவியில் வலதுகா லோங்கித்
    தொட்டிடத் தொட்டவப் போதிற்
    சிந்துநேர் கடுப்ப நுரைதிரை பிறஙகச்
    செழித்தெழுந் ததுநதிப் பெருக்கே.    1.11.17

697   ஆறெழுந் தோடிப் பாலையைப் புரட்டி
    யழகுறு மருதம தாக்கத்
    தேறல்கொப் பளித்து வனசமுங் குவளைத்
    திரள்களும் குமுதமும் விரிய
    வேறுபட் டுலர்ந்த மரமெலாந் தழைத்து
    மென்றழை குளிர்தரப் பூத்துத்
    தூறுதேன் றுளித்துக் கனிகளுங் காயுஞ்
    சொரிதரச் சோலைசூழ்ந் தனவே.   1.11.18

698   வற்றுறாச் செல்வப் பெருக்கினி தோங்கும்
    வகுதையம் பதியுசை னயினார்
    பெற்றபே றிதுகொ லெனமுழு மணியாய்ப்
    பிறந்தமெய்த் துரையபுல் காசீஞ்
    சுற்றமுங் கிளையுஞ் சிறப்பொடு தழைத்துச்
    சூழ்ந்திருந் தணிதிகழ் வதுபோற்
    குற்றமி னதியி னிருகரை மருங்குங்
    குறைவறத் தளிர்த்தன தருக்கள்.    1.11.19

699   நானமும் புழுகும் பாளிதக் குலமு
    நறைகெட மிகுந்தவா சமதாய்த்
    தேனினுங் கருப்பஞ் சாற்றினுந் திரண்ட
    தெங்கிள நீரினு மினிதா
    யூனமி னதிய னொருகைநீ ரருந்தி
    யுடல்குளிர்ந் தரும்பசி யொடுங்கி
    யானன மலர்ந்து முகம்மதைப் புகழ்ந்தங்
    கனைவரு மதகளி றானார்.   1.11.20


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
 1.12. பாந்தள் வதைப் படலம்


700   கனலுண்ட கடுஞ்சுர மீதுநறும்
புனலுண்டு பொருந்தின ரவ்வுழையின்
சினமுண்டெழு செங்கதிர் பொங்குமிரு
ளினமுண்டு குணக்கி லெழுந்ததுவே.   1.12.1

701   மருதங்கள் கலந்த வனத்திலிருந்
தெருதும்பரி யும்மெழி லொட்டகமும்
பெருகுந்திர ளும்படி பின்செலவே
வரதுங்க முகம்ம தெழுந்தனரே.   1.12.2

702   வடிவாலொளி வீசிய வானவர்கோன்
படிமீதுறு பாதையின் முன்செலவே
நெடியோனபி பின்செல நீணெறியிற்
கடிமார்பர் கலந்து நடந்தனரே.    1.12.3

703   கானந்தனி லேகிய காலையினிற்
றானந்தரு தாரை தனைத்தெரியா
தீனந்தரு வல்லிரு ளெய்திநெடு
வானுந்தெரி யாது மறைத்ததுவே.   1.12.4

704   இருள்கொண்டு பரந்திட யாவருமோர்
மருள்கொண்டவர் போல மயங்கினரா
லருள்கொண்ட முகம்மது மன்புறவே
தெருள்கொண்டு நடந்தனர் செல்வழியே.    1.12.5

705   கொடுவல்லிரு ளுண்டு கொழுங்கதிர்பைங்
கடலந்தரை மீதெழு காரணமுற்
றிடருந்தவி ரும்மிவ ராலெனவே
மடனெஞ்சமி லாது மகிழ்ந்தனரே.   1.12.6

706   மருமிக்க புயத்தெழில் வள்ளலுடன்
கருமத்தொழில் காரரு மற்றவரு
மொருமித்து நடந்துறு வாவெனுமோ
ரருவிக்கரை மேவி யடுத்தனரே.   1.12.7

707   வண்டார்பொழி லார்வரை யூடருவி
யுண்டார்சில ருண்கிலர் காணெனவே
கண்டார்நபி வல்லவ னைக்கருதிக்
கொண்டார்புன லுங்குதி கொண்டதுவே.    1.12.8

708   அளித்தானுண நீர்கிடை யாதகரை
யுளித்தானிலை யாதிட வோடுபுனற்
குளித்தார்குடித் தார்மகிழ் கொண்டுடலங்
களித்தாடி நடந்தனர் காளையரே.   1.12.9

709   மகிழ்கொண்டு நடந்த வனந்தனிலே
துகடுன்றி விசும்பு துடைத்திடவே
நிகழ்கின்ற நெடுந்தொலை சென்றதின்மே
லுகழ்கின்றொரு வன்வர வுற்றனனே.   1.12.10

710   கையோடிரு காலு நடுங்கிடவே
வையோடிய வேர்வைகள் சிந்திவிழ
வையோவிதி யோவென வாயலறி
யுய்வாறினி யேதென வோதினனே.   1.12.11

711   மயமாறிட வாய்குழ றிக்குழறித்
துயரோடுற வந்து சுழன்றவனை
வயவீரர்கள் கண்டுன் மனத்திலுறும்
பயமேதுகொ லென்று பகர்ந்தனரே.   1.12.12

712   சினமுண்ட செழுங்கதிர் வேலுடையீர்
வனமுண்டரை நாழிகை யுள்வழியிற்
கனமுண்டொரு காரண மாமலையி
னினமுண்டு பருத்தெழு கின்றதுபோல்.    1.12.13

713   அரவொன்றுள தத்திரி யும்பரியுங்
கரமொன்று கரித்திர ளும்மெதிரே
வரவுண்டிடும் வாறலை நீளமதை
யுரமொன்றி யுரைத்திட நாவரிதே.   1.12.14

714   கண்ணின்கன லுங்கடை வாய்புரளப்
பண்ணுங்கவை நாவொடு பற்களுறும்
வண்ணந்தனை யோதிட வானவருந்
துண்ணென்றுட லங்க டுணுக்குறுவார்.    1.12.15

715   திருகுஞ்சின மாயது சீறிவெகுண்
டிருகுன்று கடந்தென தின்னுயிரைப்
பருகும்படி வந்தது பாருமதோ
வருமின்றது காணென மாழ்கினனால்.    1.12.16

716   அலைவுற்றவ னம்மொழி கூறிடலு
நிலையற்றவர் நின்று நினைந்துநினைந்
துலைவுற்றுட லங்க ளொடுங்கிமன
மலைவுற்று மயங்கி வருந்தினரே.   1.12.17

717   வந்தானுரை செய்தது மற்றவர்க
ணொந்தாவி பதைத்திட நோக்கினரா
லுந்தாதுறு பாதையி லொட்டகம்விட்
டிந்தாரெழில் வள்ள லிறங்கினரே.   1.12.18

718   அதிர்கொண்டது நாசியி லங்கியெழக்
கொதிகொண் டுறுகோ பமதாயரவஞ்
சதிகொண்டு நடந்தது தாரையிலென்
றெதிர்கொண்டன ரெங்கண் முகம்மதுவே.    1.12.19

719   அரிகண்டு வெகுண்டடல் வாயினைவிண்
டெரிகொண்ட விழிக்கன லிற்றுவிழ
விரிகின்ற படத்தை விரித்துவிடஞ்
சொரிகின்ற தெனத்திசை தூவியதே.   1.12.20

720   கழிகின்ற துரும்பொரு கைமுழமுண்
டெழில்கொண்ட முகம்ம தெடுத்தெதிரெ
வழிகொண்டதை வீசிட வல்லுடல
மிழிகொண்டு திரங்க ளெழுந்தனவே.   1.12.21

721   அடிபட்ட வித்திர ளத்தனையும்
பொடிபட்ட துருண்டு புரண்டுவயின்
மடிபட்டொரு கற்குவை வாயினிடைக்
கடிபட்டது பட்டது கட்செவியே.   1.12.22

722   வரைபோலுர கத்தை வதைத்ததுகண்
டிரைவோடுபு கழ்ந்திவர் செங்கனிவா
யுரையூடொழு கிச்செலு மென்றுவகைத்
திரையூடு குளித்தனர் தேசிகரே.   1.12.23


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
 1.13. நதி கடந்த படலம்


723   கட்செவி பகையறுத் தரிய கானகத்
துட்படு மிடர்தவிர்த் தொளிரும் வள்ளலை
வட்படும் வேலுடை மாக்க ளியாவரு
நட்பொடு கலந்துட னடந்து போந்தனர்.    1.13.1

724   குறுபொறை கடந்துபோய்க் குவடு சுற்றிய
சிறுநதி யாறுகள் கடந்து சென்றபின்
மறுவுறு மதிதொடு மலையு மம்மலைப்
பெறுமுறை யருவியும் பிறங்கத் தோன்றின.    1.13.2

725   அம்மலை நதிக்கரை யடுத்துச் சீரிய
செம்மலுந் சூழ்ந்தே சிகரு நீங்கிலாச்
சும்மைகொண் டிறங்கிநீ ராடித் தூநறைப்
பொம்மலுண் டரும்பகற் பொழுது போக்கினார்.    1.13.3

726   மதுப்பிலிற் றியமரை மலரின் கொள்ளையும்
விதுக்கதிர் படத்தனி விரியுங் காவியு
மெதிர்ப்பொடு களிப்புமா குலமு மெய்திடக்
கதிர்க்கதி ரவன்குட கடற்கு ளாயினான்.    1.13.4

727   நீருறை பறவையின் குலமு நீடரு
பாரினில் விலங்கின மியாவும் பண்ணறாக்
காருறு சோலைவாய்ச் சுரும்புங் கண்படைத்
தூர்வன வெவையுநல் லுறக்க முற்றதே.    1.13.5

728   போதடைந் திருளெனும் படலம் போர்த்திட
மாதவ ரெனுமுகம் மதுவு மன்னருந்
தாதவிழ் நதிக்கரைத் தருவி னீழலிற்
சோதிமா முகமலர் விழிக டூங்கினார்.    1.13.6

729   வனநதிப் பெருக்கெடுத் தெறிந்து மால்வரை
தனையமிழ்த் திடவரு வதுகொல் சார்ந்தநும்
மினமுட னெழுகவென் றிலங்கும் வள்ளறங்
கனவினிற் ஜிபுறயீல் கழறிப் போயினார்.    1.13.7

730   மருப்பொலி புயமுகம் மதுதங் கண்விழித்
தொருப்பட வெழுந்துழை யுற்ற பேர்க்கெலாம்
விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்துநம்
மிருப்பிடம் புரட்டுமீங் கெழுக வென்னவே.    1.13.8

731   தெரிதர வுரைத்தசொற் றேர்ந்தி யாவரும்
விரைவினிற் சோலைவாய் விடுதி நீங்கியே
புரவியொட் டகம்பொதி பொருளுங் கொண்டணி
வரையினுச் சியினிடை மலிய வைகினார்.    1.13. 9

732   படர்தரு திரைவயி றலைத்த பைம்புனற்
கடலிடை குளித்துச் செங்கதிர்க் கரங்களா
லடைபடு மிருட்குல மறுத்துப் போக்கியே
சுடரவ னுதயமா கிரியிற் றோன்றினான்.    1.13.10

733   அரிசினக் கொடுவரி யமிழ்ந்து போதரப்
பொரியரைத் தருக்களைப் புரட்டிப் பொங்கிய
நுரையிரு கரைகளு நுங்க மானதிப்
பிரளய மிடனறப் பெருகி வந்ததே.   1.13.11

734   குறவரைக் குறிஞ்சிவிட் டீழ்த்துப் பாலையின்
மறவரை முல்லையி லாக்கி மாசுடைத்
தொறுவரை நிரையொடுஞ் சுருட்டி வாரியே
யறைபுனற் பெருக்கெடுத் தடர்ந்த தெங்குமே.    1.13.12

735   கரைசுழித் தெறிந்துநீள் கயங்க ளாக்கின
திரையெறி கயத்தினைத் திடர தாக்கின
விரைகமழ் சோலைவே ரறுத்து வீழ்த்தின
வரைகளைப் பிடுங்கின மலிந்த நீத்தமே.    1.13.13

736   கரைபுரண் டுள்ளகங் கலித்துக் கானிடைத்
திரவியந் திரைக்கரத் தெடுத்த்ச் சிந்தியே
குரைகட லெனுநதி குரிசி னந்நபி
மரைமல ரடிதொழ வந்த போலுமே.   1.13.14

737   மானதி பெருகியெவ் வரையுஞ் சுற்றிய
நானிலத் திசைநெறி நடப்ப தின்மையாற்
றானவன் றூதொடு சார்ந்த மன்னரு
மீனமின் மூன்றுநா ளிருந்து நோக்கினார்.    1.13.15

738   மலைமிசை மூன்றுநா ளிருந்து மானதி
யலைதெடுத் தெறிந்துயர்ந் தடர்ந்த தல்லது
நிலைதரக் காண்கிலோ மென்ன நீண்டசஞ்
சலமெனுங் கடற்குளாய்த் தவித்து வாடினார்.    1.13.16

739   மனத்தினிற் றுன்புற வருந்தி மாழ்கிய
வினத்தவ ரியாரையு மினிதி னோக்கியே
கனத்தமைக் குடைநிழல் கவின்பெற் றோங்கிய
நனைத்துணர்ப் புயத்தவர் நவில லுற்றனர்.    1.13.17

740   இற்றைநா ளிரவிவ ணிருந்து கண்டுநா
மற்றைநாட் போகுவம் வருந்த லென்றனர்
வெற்றியும் வீரமுந் தவத்தின் மேன்மையு
முற்றிய மாட்சியா ரலங்கன் மொய்ம்பினார்.    1.13.18

741   இருகரை களுந்தெரிந் திலவிம் மானதி
பெருகுவ தடிக்கடி பேது றாதுபி
னொருமொழி யுரைத்தவ ருளத்தின் பெற்றியைத்
தெரிகிலோ மெனமனந் தேம்பி னாரரோ.    1.13.19

742   அவ்வுழி ஜிபுறயீ லடைந்து கண்டுயில்
செவ்விநேர் முகம்மது கனவிற் செப்பினா
ரிவ்விருள் விடிந்தபி னெழுந்து முன்னரோர்
நவ்விதோன் றிடும்வழி நடத்தி ரென்னவே.    1.13.20

743   மனமுற ஜிபுறயீல் வந்து சொல்லிய
கனவினைச் கண்டகங் களித்துக் கண்ணிணை
யினைவிழித் தெழுந்தன ரெழுந்த காலையிற்
றினகர னெழுந்தனன் பரந்த செங்கதிர்.    1.13. 21

744   வரைபுரை புயமுகம் மதுமன் மாவொடு
நிரைநிரைத் தொறுவையு நடத்திர் நீவிரென்
றுரைசெய்தி பெருக்கெடுத் தோங்கு மானதிக்
கரையினின் மரைமலர்க் காலி னேகினார்.    1.13.22

745   ஒட்டகம் புரவிமற் றுள்ள பேர்களு
மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிடத்
தொட்டவெண் டிரைக்கட லகடு தூர்த்திட
முட்டிய புன்னதிக் கரையின் முன்னினார்.    1.13.23

746   அள்ளிய பொன்னெடுத் தமைத்து வெள்ளியாற்
புள்ளிக ளணியணி பொறித்து வைத்தன
வொள்ளிய மெய்யழ கொழுக வொல்லையிற்
றுள்ளிய வுழையுழை யிடத்திற் றோன்றிற்றே.    1.13.24

747   நதியிடை வந்துமா னடப்பக் கண்டுமா
மதிநிகர் முகம்மது மனத்தி லின்பமுற்
றிதமுற நடந்துபி னேக யாவரும்
புதுமைகொ லிதுவெனத் தொடர்ந்து போயினார்.    1.13.25

748   உடற்பொறிப் புள்ளிக ளொளிர முன்செலு
மடப்பிணை பின்செலு மக்க ளியாவர்க்குங்
கடற்பெருக் கெனக்கரை கடந்து வீங்கிய
தடப்பெரு நதிமுழந் தாட்கு ளானதே.    1.13.26

749   பெருகிய பிரளயப் பெருக்கைப் போக்குதற்
கொருவனே யலதுவே றிலையென் றுன்னியே
தெருளுறச் செல்குநர் செல்க வென்றனர்
வரையிரண் டெனுமணிப் புயமு கம்மதே.    1.13.27

750   இம்மொழி நன்கென விசைந்தி யாவருஞ்
செம்மலோ டினிதுறச் செல்லுங் காலையில்
விம்மிதப் புயநபி விரித்த வாசகஞ்
சம்மதித் திலனொரு தறுக ணாளனே.    1.13.28

751   புந்தியிற் புத்தினைப் புகழ்ந்து போற்றித்தன்
சிந்தைவைத் தவ்வுழைச் செல்லும் போழ்தினி
லுந்தியின் றிரைசுழித் துருட்டி யீழ்த்திட
நந்தினா னபியுரை மறுத்த நாவினான்.    1.13.29

752   விதியவன் றூதர்சொன் மேவி லாதவ
னதியினி லிறந்தன னடுக்க மின்றியே
யிதமுற வுண்மைகொண் டிசைந்த பேர்முழுக்
கதிபெறு பவரெனக் கரையி லேறினார்.    1.13.30


753   சிந்துவின் றிரைப்பெருக் கெறியத் தீதிலா
நந்தியத் திரிபரி யாவு நன்குற
வந்தவை முகம்மதின் பறக்கத் தாலெனத்
தந்தம ரொடுபுகழ்ந் தெடுத்துச் சாற்றினார்.    1.13.31