Author Topic: நான் ரசித்த கவிதைகள்...!!!  (Read 3856 times)

Offline Yousuf

தாய்மை!!!

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!


ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!


ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!


எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?


இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?


பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!


வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!


குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!


கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…!


நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!


வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால்
அனைவரும் சிரிப்பார்கள் - ஏன்
மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் - ஆனால்
சிரிக்காதவள் தாய் மட்டுமே...!


தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் - எல்லாவற்றையும் விட
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று...!

Offline Yousuf

Re: நான் ரசித்த கவிதைகள்...!!!
« Reply #1 on: July 14, 2011, 08:45:26 PM »
"அன்னை" என்பவள் நீதானா!

நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து,
நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும்,
நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும்,
நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,


நிற்கதியாய் தவிக்கவிட்டு நின் சொந்தம் விலகிடவும்,
நீ யொருத்தி தனிநின்று நெருடலுடன் வாழ்ந்திடவும்,
நெடுந்தூரம் சென்றிடவே நீசர்சிலர் விரட்டியதால்,
நின்கணவர் நிழல்தொடர்ந்தாய் நித்தமும் இறைதொழுதாய்!

யாருமே துணையில்லை என்றபோதும் ஏங்கிடாமல்,
இருக்கின்றான் இறைவனென்ற எண்ணமே உந்தனுக்க்கு,
ஏற்றம் தந்ததினால் ஏணியாய் நீ வாழ்ந்தாய்!
கடமைகளை என்றென்றும் கடைபிடித்தாய்!

கருவை சுமந்தபடி கடுமையான பணிகள் செய்து,
கணவருக்கு உணவளித்து கணநேர ஓய்வில்லாமல்,
கருமேக சங்கடத்தில் காட்சிதரும் நிலவினைப்போல்,
கடுந்துயர் அனுபவித்து கண்ணுக்குள் அதையடக்கி,

நிம்மதியை துறந்து நெஞ்சத்தில் சுமைசுமந்து,
நெடுந்தூரம் நடந்து நீண்டதொரு மூச்சுவாங்கி,
நிலையில்லா வாழ்க்கைக்கு நீயும் கூட பொருளீட்டி,
நிறைமகனாய் என்னை நிலத்தினில் பிறக்கவைத்தாய்!

பிறந்தபின்னும் கண்விழித்து பிரியமுடன் எனைவளர்த்தாய் !
பிறைநிலவை துணைக்கழைத்து பேசிப்பேசி உணவளித்தாய் !
பேசக்கற்றுத் தந்தாய் எனைப்பிரியாமல் நீயணைத்தாய் !
பெருமையுடன் என்னை கண்ணே-மணியே என்றாய் !

தட்டுத்தடுமாறி தவழ்ந்தபோது என்னை தாங்கிப்பிடித்தாய்,
தட்டில் இறைத்த சோற்றை தவறாமல் ஒருங்கிணைத்தாய்,
ஒட்டுப்போட்ட புடவைத்தொட்டில் என் உறக்கத்தின் தாய்வீடு !
ஓடியாடும் எந்தனுக்கு உன் உந்துதலே வெற்றிக்கோடு !

பள்ளிக்கு அனுப்பி வைத்தாய் பாடமும் சொல்லித்தந்தாய்,
பசிக்கு உணவளித்தாய் பட்டினிக்கு இரையானாய்,
பாசமழை பொழிந்தாய் பகைமையை மறக்கச் செய்தாய்,
பலகதைகள் சொல்லி என்னை பக்குவப்படுத்தி வைத்தாய்!

தேர்வில் வென்ற என்னை தேடிவந்து உச்சிமோர்ந்தாய்,
தேடியும் கிடைக்காத செல்வம் என்மகனே என்றாய்,
நாடியும் கிட்டாத நல்லதொரு வேலை ஒன்றை,
நான் பார்க்க வழி செய்தாய்-நனிசிறந்த தாயானாய் !

பருவ காலத்தில் ஒரு பாவையை மணமுடித்து வைத்தாய்,
பறந்தது கவலையென்று பகற்கனவு தினம் கண்டாய்,
பணக்கார மருமகளை உன் மகள் இவளே என்றாய்,
அவள் செய்யாத வேலைக்கெல்லாம் வேலைக்காரி நீயானாய்!

மனைவியின் மயக்கத்தில் உனை மறந்து போனேன் தாயே,
மணிக்கணக்கில் பேசும் வாய்ப்பு மறைந்ததேன் தாயே,
மனைவியின் ஒப்பனையை மணிக்கணக்கில் ரசித்தேன் தாயே,
மாற்றுடை உனக்களிக்க மறந்து போனேன் தாயே !

ஓடிஓடி உழைத்த பின்னே ஓய்வெடுக்க படுத்தாய் தாயே !
உரியதொரு சிகிச்சை தர என் உள்ளம் நாடவில்லை தாயே !
ஒரு நாட்டு வைத்தியரை உனைப்பார்க்க வைத்தேன் தாயே !
ஒன்றுமில்லை காய்ச்சல் என்று உதவா மருந்து தந்தார் தாயே !

ஒளிமங்கும் உன் கண்கள் என்னை உலுக்கி எடுத்த போதும்,
ஒன்றுமே செய்யாமல் ஊனமாய் நின்றேன் தாயே !
உலக வாழ்வு போதுமென்று ஒருநாள் உறங்கிவிட்டாய் தாயே !
உன்னை நான் மண்ணிலிட்டு ஊமையானேன் தாயே !

வாழ்ந்த காலத்தில் உன் வாஞ்சையை நான் உணரவில்லை,
வாடிய உன்முகத்தில் வளர்சிரிப்பை நான் கொணரவில்லை,
வருங்காலம் நமக்கே என்ற உன்வார்த்தை புரியவில்லை,
வளர்த்துவிட்ட உந்தனுக்கு வாட்டம் தந்த மகனானேன் !

உயிர்வாழ்ந்த காலத்தில் உனதருமை எனக்கு புரியவைல்லை,
ஓடிஓடி அழுகின்றேன் ஒவ்வொரு சொட்டு கணணீரும் செந்நீராக,
உன்னை மீண்டும் காண்பதற்கு ஒருவழி உண்டென்றால்,
ஓடி நான் வந்திடுவேன் உனைத்தேடி சேவை செய்வேன் !

அருமருந்தாய் இருந்து அல்லல் எனும் நோய்தீர்த்து,
அன்பெனும் பாசத்தை நித்தம் அமுதுடன் கலந்தளித்து,
அகிலத்தில் நான் வாழ ஆக்கமும் ஊக்கமும் தந்த,
ஆற்றலே!தாயே!! "அன்னை" என்பவள் நீதானா?

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடுக்கடுக்காய் வந்தாலும்,
ஆழிசூழ் உலகில் அன்னை புகழ் மங்கிடுமோ ?
அவள் தரும் பாசத்தை அவனியிலே யார் தருவார்?
அன்றுமுதல் இன்று வரை அன்னையவள் ஆருயிரன்றோ?

என் நிலைமை இனி யாருக்கும் வரவேண்டாமென்றால்,
எழில் நபிகள் எடுத்துரைத்த இம்மை சொர்க்கம்,
என்றுமே அன்னை காலடியில் இருக்கின்றதென்ற உண்மையினை.
இதயத்தில் ஏற்றி வைத்து இறைதொழுது வாழ்ந்திடுங்கள்!!!

Offline Yousuf

Re: நான் ரசித்த கவிதைகள்...!!!
« Reply #2 on: July 14, 2011, 08:49:17 PM »
தந்தையின் தவிப்பு!!!


அன்னையைமட்டும்
அணைத்துகொள்கிறாய்
இந்த தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்

ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத்
தந்தைக்கும் பங்குண்டல்லவா

சிலஇடங்களிலும் சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே
சித்தரிக்கப்படுகிறது!

சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா

அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படக்கூடாதே என
என்பாசத்தை
பூட்டியே வைத்துள்ளேன்

அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப்போலவே
பார்ப்பதைதான்
என்னால்
பொறுக்கமுடிவதில்லை

விரோதியல்லடா உன் தந்தை
உன்னை இவ்வுலகத்திற்கு

வெளிச்சமாய் காட்ட
என்னை நான்
மெழுகாக்கிக்கொண்டேன்

உருகுவதற்காக
வருந்தாது மெழுகு
தன்
உயிரைக்கொன்று
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நான்

மகனே
நீ உயிர்வாழ
உன் அன்னை -தன்
உதிரத்தைப்
பாலாக்கித்தந்தாள்

நான்
உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா-இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,,,,,,,,,,அறிவாயா?

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நான் ரசித்த கவிதைகள்...!!!
« Reply #3 on: July 14, 2011, 08:58:27 PM »
THAAIMAI ENRUME THANITHUVAMANA ONRUTHAAN RIALY NICE KAVITHAIKAL...KEP IT UP
                    

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: நான் ரசித்த கவிதைகள்...!!!
« Reply #4 on: July 15, 2011, 03:57:35 AM »
Soup juper duper kavithai ena mariye kavithai eludha kathukita besh besh

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Yousuf

Re: நான் ரசித்த கவிதைகள்...!!!
« Reply #5 on: July 15, 2011, 05:37:00 PM »
எச்சில் மலர்கள்!!!


நாகரீகம் என்ற பெயரில்
அநாகரீகங்கள் அத்துமீரும்போது-இந்த
அல்லிப்பூக்கள் அறுவடைக்கு வருகிறது
மிதம்மீறிய பழக்கவழக்கங்களால்
எஞ்சிமிஞ்சுவது பாவமிந்த
எச்சில் மலர்கள்தான்

தாய் தந்தையரின்
முகம்காணா இந்த மொட்டுக்கள்
தவறே செய்யாமல்
தண்டனை அனுபவிக்கும் தனிமை
வயிற்றுப்பசிக்கூட பிறரிடம் கையேந்தி
தவிக்கும் கொடுமை

தான் அனாதையாகிவிட்டோம்
தான் அனாதை ஆக்கப்பட்டோம்
என்பதையறியாமலே
ஆதரவற்றநிலையில்
அனாதையில்லத்தில்
வாழும் தளிர்கள்

தன் சுகங்களை மட்டுமே
பெரிதென எண்ணிவாழும்
சில மனித ஜென்மங்களால்
ஜனனத்தில்கூட
ஜடமாகிபோகிறது -இச்
சின்னஞ்சிறிய சிசுக்கள்
தன்னையறிந்த பின்னே
அல்லாடித்தவிக்கிறது
இந்தபிஞ்சு மனங்கள்

கலாச்சாரத்தின் குரல்வலையை
காலடியில்போட்டு மிதித்துக்கொண்டு
நாகரீகத்தின் பிடியில்
சிக்கிச்சீரழியும் நவநாகரீக கன்றுகளே!
தன்கற்பு என்னும் மானத்தை
காத்துக்கொள்ளுங்களேன்
அனாதை என்ற ஒன்றை
இல்லாமல் ஆக்குங்களேன்!!

Offline Yousuf

Re: நான் ரசித்த கவிதைகள்...!!!
« Reply #6 on: July 15, 2011, 05:42:11 PM »
விடை தேடும் வினாக்கள்?


படைத்தவனின் பயம் விட்டுப்போனதாலா
பாவங்கள் பெருகிக்கொண்டே போகிறது

பொல்லாத காரியங்கள் பெருகப் பெருகவா
பொன்னான பூமியே பூகம்பத்திற்குள்ளாகிறது

நாகரீக மோகம் நீண்டுகொண்டே போவதாலா
அரைகுறை நிர்வாணங்கள் அரங்கேற்றப்படுகிறது

மனங்களுக்கெல்லாம் மதம் பிடித்ததாலா
மனிதம் காக்கவேண்டிய மதங்களெல்லாம்
மனிதர்களைக்கொல்கிறது

சுயநலங்கள் பெருகிப்போனதாலா
சொந்த பந்தங்கள்கூட பாரமாகிப்போகிறது

வெக்கம் விட்டுபோனதாலா
வைரமாகக்கூடிய மங்கைகூட
விலைமகளாகிப்போகிறது

தன்னம்பிக்கை குறைந்துபோனதாலா
தற்கொலைகள் தலைதூக்கி நிற்கிறது

மனஇச்சைகளுக்கு மதிப்புகொடுப்பதாலா
குடிகெடுக்கும் மதுவுக்கும்
மனம் இடங்கொடுக்கிறது

வஞ்சனைகுணம் பெருகிப்போனதாலா
பிறரை வதைக்கும் வட்டிக்கு
வட்டிபோட்டு வாங்குகிறது

அறிவு அளவுக்குமேல் வளர்ந்தாலா
அழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டே போகிறது

இன்னும்

வினாக்கள் விளைந்துகொண்டேதான்
இருக்கிறது        இருந்தாலும்
இதற்காவது விடை கிடைக்குமா என்ற
ஆதங்கத்துடன் விடை பெறுகிறேன்...!!!

Offline Yousuf

Re: நான் ரசித்த கவிதைகள்...!!!
« Reply #7 on: July 15, 2011, 05:48:19 PM »
சிந்தாதே…இரத்தத்தை…’சிந்தி’!


மனிதா..மனிதா…
இதைக் கேள்‍- நீ
மண்ணில் பரவிய‌
கதை கேள்!

காடுகள் மலைகள்
கடற்கரை வெளிகள்
கடந்தன உந்தன் கால்கள்…
நாடுகள் என்னும்
கோடுகள் இல்லா
நானிலம் செய்ததுன் கைகள்…

அலைகளைப் போல‌
அலைந்து திரிந்தாய்
மலைகளைக் குடைந்து
குடியும் இருந்தாய்

விலங்குகளை நீ
வேட்டையாடினாய்
உன்னையும் அவைகள்
வேட்டையாடின

ஞாலக் களத்தில்
காலக் கலத்தில்
நீள வளர்ந்தது
நின் பயணம்…

த‌னி ம‌ர‌மொன்று
தோப்பாய் ஆன‌தே
ம‌னித‌ ச‌ரித்திர‌க்
கோப்பாய் ஆன‌து

ப‌ன்னூறாயிர‌ம்
ஆண்டு ப‌ர‌ப்பில்
ப‌திந்திருக்கின்ற‌ன‌
உன் ப‌ய‌ண‌ச் சுவ‌டிக‌ள்…
முன்னேறும் உன் அடிச்சுவ‌டுக‌ளில்
முளை விடுகின்ற‌ன‌
புதுமை விதைக‌ள்…

துளியாய் தொட‌ங்கி
க‌ட‌லாய் விரிந்த‌
ம‌னிதா..!ம‌னிதா..!
இதைக் கேள்‍- நீ
ம‌ண்ணில் ப‌ர‌விய‌
க‌தை கேள்

நீ
வில‌ங்கிலிருந்து
விளைந்த‌வ‌ன‌ல்ல‌
குர‌ங்கிலிருந்தும்
குதித்த‌வ‌ன‌ல்ல‌.

அனுமான‌ங்க‌ள்
ம‌ட்டும் அல்ல‌
அறிவுக்கான‌ அடையாள‌ங்க‌ள்
அனுமான‌ங்க‌ளை
மெய்யென‌க் கொண்டால்
அறிவிய‌ல் துறைக்கே
அவ‌மான‌ங்க‌ள்

உட‌லில் ஓடும் ர‌த்த‌ம்
அதில் கேள்
உற‌ங்கா உண்மையின் ச‌த்த‌ம்

இல்லை ம‌னித‌ரில் பேத‌ம்
இல்லை ம‌னித‌ரில் சாதி
என்ப‌தே இர‌த்த‌ம் கூறிடும் சேதி

நாம் அனைவ‌ரும்
ஒரு த‌ந்தை ம‌க்க‌ள்
இதை உண‌ர்ந்தால் உல‌கில்
ஒழிந்திடும் சிக்க‌ல்

இறைமை ம‌றுத்து ம‌னித‌ம் ப‌டித்த‌ல்
வெளிச்ச‌ம் அவித்து விழித்த‌ல் போல
தொன்மையின் ப‌ய‌ண‌ம்
தொட‌ர்கிற‌ ம‌னிதா…
உண்மை இல‌க்கை
உண‌ர்ந்தாயா நீ…?

வேத‌ வெளிச்ச‌ம் கொண்டு
ஆத‌மின் ம‌க‌னே
அறிவைத் தேடு…

இன‌மும் இட‌மும்
மொழியும் குல‌மும்
இன்னும் நீளும்
பிரிவினை யாவும்
மாயைக‌ள் என்று
ம‌னிதா உண‌ர்க‌!

ம‌க‌த்துவ‌ ம‌னிதா
அக‌த்தினில் எழுக‌
ச‌க‌த்தினில் இறையின்
சாட்சி் ப‌க‌ர்க‌!

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: நான் ரசித்த கவிதைகள்...!!!
« Reply #8 on: July 17, 2011, 10:29:54 AM »
* இனி வரும் நாள்கள் **

அழகு தமிழ் வாராது
அம்மா என்றும் பேசாது
அருமையாய் சொல்லும்
மம்மி டாடி

அத்தை மாமா தெரியாது
பாங்கும் பரிவும் காட்டாது
போகிற போக்கில் சொல்லிப் போகும்
அங்க்கிள் ஆன்ட்டி

நிலா பார்த்து
சோறூட்டலில்லை
நித்தம் ஒரு சண்டையிட்டு
தெருவிலோர் ஆட்டமில்லை
ஆனால் உண்டு
வன்முறை தூண்டுமோர்
வீடியோகேம் விளையாட்டு

கண்முன்னே தொலையுதிந்த
மழலை உலகம்
மீட்டிட ஒருவழி வேணும்
இனிவரும் நாளில்..