Author Topic: சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?  (Read 2690 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

முந்தைய கேள்வி ஒன்றுக்கு “சிவன் சொத்து குலநாசம்” எனக் கூறியிருந்தீர்கள். இதனைப் படித்த வாசகர் தான் சிறிய வயதில் அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் கேட்டிருக்கிறார். அவரது கேள்வி என்னவென்றால், சிறு வயதில் சிவன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த நல்லெண்ணெய் பொட்டலத்தை வீட்டிற்கு திருடி வந்தாராம்? அதுபற்றிய எண்ணம் அடிக்கடி மனதில் தோன்றி அவரை கவலை கொள்ளச் செய்கிறது. சிவன் கோயிலில் இருந்து திருடிய குற்றத்திற்கு பரிகாரமாக என்ன செய்யலாம் எனக் கேட்டுள்ளார்.

பதில்: அந்த வாசகர் எந்தக் கோயிலில் இருந்து அந்த எண்ணெய் பொட்டலத்தைத் திருடினாரோ, அதே கோயிலுக்கு எண்ணெய் வாங்கித் தரலாம். அந்த கோயில் மூலவருக்கு அர்ச்சனையும் செய்யலாம். அதனை அவரின் பிறந்த நட்சத்திர தினத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பாக, செய்த தவறை உணர்ந்து மனம் உருகி இறைவனை பிரார்த்தித்தால் மட்டுமே அவரது பாவம் விலகும். மாறாக மேற்கூறிய பொருட்களை இறைவனுக்கு அளிப்பதால் மட்டும் பாவம் விலகாது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.