Author Topic: அண்ணன் தம்பி பாசம்  (Read 1077 times)

Offline சிநேகிதன்

அண்ணன் தம்பி பாசம்
« on: January 28, 2013, 11:54:34 PM »

அண்ணனும் தம்பியும் ஒரே கட்டிலில் தூங்கிக்
கொண்டிருந்தனர்.

திடீரென தம்பி எழுந்து தூங்கிக் கொண்டிருக்கிற அண்ணனைப் பார்த்தபடி இருந்தவன்
மீண்டும் தூங்கி விட்டான்.

திடீரென அண்ணன் விழித்துக் கொண்டு தம்பியைப் பார்த்தான். அவன் ஆழ்ந்து தூங்கிக்
கொண்டிருந்தான். அவன் அழகை ரசித்தபடி இருந்தான். இவனும் தூங்கி விட்டான்.

இப்படி ஒருவர் தூங்கும் போது ஒருவர் விழித்துப் பார்த்ததைக் கண்ட பக்தன் ஒருவன்
இறைவனைக் கேட்டான்.

"இறைவா! ஒருவர் மாற்றி ஒருவர் விழித்துக் கொள்கிறார்களே! இருவரும் சேர்ந்தாற்
போல் விழித்துக் கொள்ளக் கூடாதா?"

இறைவன் பதில் சொன்னான்;

"கூடாது. இருவரும் சேர்ந்தாற் போல் விழித்துக் கொள்ளாத வரையில்தான்
இருவருக்கிடையே பாசம் இருக்கும்!".