Author Topic: Aada Vantha Deivam (ஆட வந்த தெய்வம்)  (Read 3122 times)

Offline gab

Aada Vantha Deivam (ஆட வந்த தெய்வம்)
« on: October 28, 2012, 10:47:11 PM »
திரைப்படம்: ஆட வந்த தெய்வம்
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1960

ஆ... ஆ... ஆ.......
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே ஆ..
பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே
ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்து துள்ளிடவே
பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே
ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்து துள்ளிடவே
முழு நிலவென அழகு மலரென முகம் காட்டியே பருவ மங்கை வடிவாய்

கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்

வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல்
வாசமலரும் அன்பினாலே தேனைத் தந்தது போல்
வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல்
வாசமலரும் அன்பினாலே தேனைத் தந்தது போல்
கனி மொழியுடன் கருணை விழியுடன் களிப்பூட்டவே கலைஞான வடிவாய்

கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்

Offline gab

Re: Aada Vantha Deivam (ஆட வந்த தெய்வம்)
« Reply #1 on: October 28, 2012, 10:48:56 PM »
திரைப்படம்: ஆட வந்த தெய்வம்
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1960

ஆசை கொண்டேன் அமுதமே
ஆசை கொண்டேன் அமுதமே - என்
அன்பே ஆடும் தெய்வமே - நான்
ஆசை கொண்டேன் அமுதமே - என்
அன்பே ஆடும் தெய்வமே - நான்
ஆசை கொண்டேன் அமுதமே
அசைந்து வரும் அருவி இசை பாட ஆ..ஆ..
அசைந்து வரும் அருவி இசை பாட
அலைகளெல்லாம் அதற்குத் தாளம் போட
அசைந்து வரும் அருவி இசை பாட
அலைகளெல்லாம் அதற்குத் தாளம் போட
ஆனந்தத் திருநடனம் நீ ஆட
ஆனந்தத் திருநடனம் நீ ஆட - அந்த
அற்புதக் காட்சியில் என் மனம் கலந்தாட

ஆசை கொண்டேன் அமுதமே

இதழ்க் கடைப் புன்னகையில் மின்னலின் இழையோட
இருவிழியில் சந்திர சூரியர் உறவாட
இதழ்க் கடைப் புன்னகையில் மின்னலின் இழையோட
இருவிழியில் சந்திர சூரியர் உறவாட
பதமலர்த் தாமரைகள் பயந்தாட
பதமலர்த் தாமரைகள் பயந்தாட தில்லைப்
பதிவளர்க் கலையரசே நீ ஆட நான் பாட

ஆசை கொண்டேன் அமுதமே - என்
அன்பே ஆடும் தெய்வமே - நான்
ஆசை கொண்டேன் அமுதமே

Offline gab

Re: Aada Vantha Deivam (ஆட வந்த தெய்வம்)
« Reply #2 on: October 28, 2012, 10:50:04 PM »
திரைப்படம்: ஆட வந்த தெய்வம்
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1960

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

முட்டாப் பயலே மூளை இருக்கா ஆஹஹ்ஹாங்
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு?
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு? - உன்
முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே கோண புத்தியைக் காட்டுறே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே - முகம்
சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ?
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்

கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

Offline gab

Re: Aada Vantha Deivam (ஆட வந்த தெய்வம்)
« Reply #3 on: October 28, 2012, 10:51:22 PM »
திரைப்படம்: ஆட வந்த தெய்வம்
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1960

சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும் அன்பின் அலையே
சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும் அன்பின் அலையே
சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே
சிந்தும் இசையமுதம் தென்பொதிகைத் தென்றலோ
செங்கரும்போ கனிரசமோ தேன்குயிலின் கொஞ்சலோ

சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும் அன்பின் அலையே
சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே

கண்ணே சகுந்தலையே கண்கவரும் ஓவியமே
கணமும் உனை மறவேன் என் காதல் காவியமே
மன்னவரே ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே
என் உயிரே இன்று முதல் உமக்கே தான் சொந்தமே

சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே

பெண்ணே மும்தாஜே பேரழகின் பிம்பமே
பேசும் பிறைநிலவே என் வாழ்வின் இன்பமே
என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே
எந்நாளும் அழியாது நம் காதல் சின்னமே ஆ..ஆ..

சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும் அன்பின் அலையே
சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே