Author Topic: ஆரோகணம்-திரை விமர்சனம்  (Read 2076 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆரோகணம்-திரை விமர்சனம்
« on: November 07, 2012, 03:40:40 AM »


தமிழ் சினிமாவில் நடிப்பு திறமை மிக்க நடிகையாக வளம் வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், இனி திறமை மிகுந்த இயக்குநராக வலம் வரப்போகிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது 'ஆரோகணம்'.

சொல்லவந்ததை மட்டும் சொன்னால் போதும் என்று இயக்குநர் லட்சுமி நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால் தான் இந்த படத்தை ஒன்றரை மணிநேர படமாக எடுத்திருக்கிறார். ஒரு சின்ன  விஷயம் தான் ஆனால், அதற்கு திரைக்கதை அமைத்த விதமும், எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தும் காட்சிகளும் படத்தை போடடிக்காமல் நகர்த்துகிறது.

அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே போகும் விஜி, கார் விபத்து ஒன்றில் சிக்கிகொள்கிறார். இதை அறியாத அவருடைய மகனும், மகளும் அம்மாவை தேடியும் கிடைக்காமல் போக, இறுதியில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். விபத்து ஏற்பட்ட விஜிக்கு என்ன ஆனது. இறுதியில் அவர் தனது பிள்ளைகளுடன் சேர்ந்தாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் விஜி, தனது முட்டை கண்களாலே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு நடிகை இல்லை என்பது போல இவருடைய நடிப்பு அமைந்திருக்கிறது. திடீர் திடீரென்று கோவப்படும் இவருடைய செயல்கள் படம் பார்ப்பவர்களையும் பீதியடைய வைக்கிறது.

விஜியின் கணவராக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து எதார்த்தமான நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார். அதேபோல விஜியின் மகனாக நடித்திருக்கும் புதுமுக இளைஞனும், மகளாக நடித்திருக்கும் புதுமுக நடிகையும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு. ஒரு சில காட்சிகளில் வந்தாலும் வெள்ளை சுப்பையாவும் ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.

எம்.எல்.ஏ வாக வரும் ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சம்பத், உமா பத்மநாபன் என்று படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் இடம் பெறும் ஒரே ஒரு பாடலான தப்பாட்டம் பாடல் மூலம் தாளம் போட வைத்த இசையமைப்பாளர் கே, பின்னணி இசைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

உதவி இயக்குநர் அனுபவம் இல்லாமல் இப்படத்தை இயக்கியிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு பெரிய சபாஷ் சொல்லலாம். ஒரு சிறிய விஷயத்தை எடுத்துகொண்டு, அதற்கு ஒரு அழுத்தமான திரைக்கதை அமைத்து ஒரு அருமையான படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்திருக்கிறார்.

பைபோலார் டிசார்டர் என்ற நோயைப் பற்றி சொல்ல வந்த இயக்குநர் அதை மட்டும் குறிப்பிட்டு சொல்லாமல், மேலும் விஷயங்களையும் படத்தில் சொல்லிருப்பதை சபாஷ் போட வைக்கிறது.

வியாபாரம் நோக்கத்தோடு மட்டும் இல்லாமல், சமூகத்திற்கு சில விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாகியிருக்கும் 'ஆரோகணம்' படத்தை தயாரித்த மங்கி கிரியேடிவ் லேப் மற்றும் ஏவிஏ கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கும், படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கி வெளியிட்ட ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பொரேஷன் நிறுவனத்தையும் பாராட்டியாக வேண்டும்.

எதிர்ப்பார்ப்புடன் படம் நகர்ந்தாலும், சில காட்சிகளில் மூலம் டாக்குமென்டரி படம் போன்ற உணர்வை இப்படம் கொடுக்கிறது. இருப்பினும் ஹோட்டல் ஏபிசோட், எம்.எல்.ஏ வாக வரும் ஜெயப்பிரகாஷின் நடவடிக்கைகள் போன்றவை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்போடு ஏற்படுத்துவதால் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

கமர்ஷியலான விஷயங்களை டாக்குமென்டரி படமாக எடுத்துகொண்டிருக்கும் இந்த சூழலில் டாக்குமென்டரி படமாக எடுக்க கூடிய ஒரு சப்ஜக்ட்டை கமர்ஷியலாக இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.


ஜெ.சுகுமார் (டி.என்.எஸ்)