Author Topic: இறைவன் என்ன தரகனா?  (Read 2884 times)

Offline தமிழன்

இறைவன் என்ன தரகனா?
« on: September 27, 2012, 11:49:35 PM »
வணிகர்கள் கப்பலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திடீரென புயல் காற்று வீசத் தொடங்கியது. கடல் கொந்தளித்து கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது.

தேடி வந்த திரவியத்தோடு தாமும் அழியப் போகிறோம் என்று தெரிந்ததும் கப்பலில் இருந்த அனைவரும் இறைவனை பிராத்திக்கத் தொடங்கினர்.

அந்தக் கப்பலில் நாத்திகன் ஒருவனும் இருந்தான். அவன் கூட மரண பயத்தில், " இறைவா! இது வரை உன்னை இல்லை என்று சொல்லி வந்தேன். அதற்காக என்னை மன்னித்டு விடு.என்னை காப்பாற்று." என கண்ணீர் வடித்தபடி பிராத்தித்தான்.

அந்தக் கப்பலில் மிகப் பெரிய வணிகன் ஒருவன் இருந்தான். வணிகம் செய்ததில் அவன் நிறைய பொருள் ஈட்டியிருந்தான். விலை உயர்ந்த வைர வைடூரியங்கள் அவனிடம் இருந்தன.

ஊரில் ஒரு அழகான அரண்மனை அவனுக்கு இருந்தது. அது அரசனின் அரண்மனையை விட அழகாக இருந்தது.

அரசனே அந்த மாளிகையை பார்த்து பொறாமைப்பட்டான்." என்ன விலையானாலும் தருகிறேன். உன் அரண்மனையை எனக்கு கொடுத்டுவிடு" என்று அரசன் பலமுறை அவனிடன் கேட்டிருந்தான்.

வணிகனோ, " அது என் செல்வத்தின் சின்னம். அதை யாருக்கும் எந்த விலைக்கும் தர மாட்டேன்" என்ரு மறுத்து விட்டான்.

இப்போதோ கப்பல் மோழ்கிக் கொண்டிருக்கிறது. தான் தேடி வந்த திரவியங்கள் அனைத்தும் அழியப் போகின்றன. ஊரில் தான் பெருமை என நினைத அரண்மனையையும் விட்டு விட்டு இறக்கப் போகிறோம். என்று நினைத்த வணிகன், "இறைவா! ஊரில் இருக்கும் அரண்மனையை உனக்கே கொடுத்டு விடுகிறேன். என்னை காப்பாற்று" என பிராத்தனை செய்தான்.

திடீரென புயல் நின்றது. கடல் அமைதியானது. கப்பலும் தப்பியது. எல்லோரும் கரை சேர்ந்தனர்.

இப்போது அந்த வணிகன் உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்வதற்குப் பதிலாக கவலைப்பட ஆரம்பித்தான்.

"உயிர் பிழைத்தால் அரண்மனையை இறைவனுக்கு கொடுப்பதாக அவசரப்பட்டு பபிராத்தனை செய்துவிட்டோமே. இப்போது அரண்மனையை இழக்க வேண்டுமே" என கவலைப்பட்டான்.

அரண்மனையை இழக்கக்கூடாது. அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என சிந்தித்தான்.

அவன் வணிக மூளையில் ஒரு யோசனை உதயமாகியது.

மறு நாள் அவன் தன் அரண்மனையை ஏலம் விடுவதாக அறிவித்தான்.அந்த நாட்டு அரசனுக்கு மட்டுமல்லாமல் அடித்த நாட்டு அரசர்களுக்கும் அறிவித்தான்.

ஏலம் விடும் நாளில் அரசர்களும், பெரும் செல்வந்தர்களும் அரண்மனையை வாங்க கூடி இருந்தனர்.

அரண்மனையை ஒட்டி இருந்த தூணில் ஒரு பூனை கட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்த அனைவரும் இது எதற்கு என யோசித்தனர்.

வணிகன் வந்தான்.

" இந்த அரண்மனையையும், இத பூனையையும் ஏலம் விடப் போகிறேன்ல் அரண்மனையின் விலை ஒரு ரூபாய். பூனையின் விலை பத்து லட்ச ரூபாய். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இரண்டையும் சேர்த்து தான் எடுக்க வேண்டும்." என்றான்.

கூடியிருந்தவர்கள்வியர்ப்போடு " என்ன பூனையின் வில பத்து லட்சமா? அர‌ண்மனையின் விலை ஒரு ரூபாயா? உனக்கென்ன பைத்தியமா?" என்று கேட்டார்கள்.

" அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.விருப்பம் இருந்தால் இரண்டையும் வாங்குங்கள். இல்லையென்றால் இடத்தை காலி செய்யுங்கள்" என்றான்.

நெடுநாளாக அந்த அரண்மனை மேல் ஆசை வைத்திருந்த அரசன் வணிகன் சொன்ன விலையை கொடுத்து அரண்மனையையும் பூனையையும் வாங்கினான்.

ஆனால் அரசனால் ஆவலை அடக்க முடியவில்லை. " அரண்மனையை ஒரு ரூபாய்க்கும் பூனையை பத்து லட்சத்துக்கும் எதற்காக விற்றாய்? இப்போதாவது சொல்" என அரசன் கேட்டான்.

வணிகன் புன்முறுவல் பூத்தபடி, " நான் கடலில் ஆபத்தில் மாட்டிக் கொண்டேன். அப்போது என்னை காப்பாற்றினால் இந்த அரண்மனையை கொடுப்பதாக இறைவனிடம் பிராத்தனை செய்து விட்டேன். அரண்மனையை இழக்க மனமில்லை. அதே நேரம் கடவுளிடம் கொடுத்த வாக்கையும் மீறக் கூடாது. அதனால் தான் இப்படி செய்தேன்"
"இப்போது அரண்மனை விற்ற காசை கோயில் உண்டியலில் போட்டு விடுவேன். பூனை விற்ற காசில் இதே போல ஒரு அரண்மனை கட்டிக் கொள்வேன்" என்றான்.

அரசன் வாயடைத்து நின்றான்.

பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனேகம் பேர் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.
இந்த பிரபஞ்சத்தை படைத்து அதை பரிபாலிக்கும் இறைவனை ஒரு தரகனாகவே நினைக்கிறார்கள்.தனக்கு எதாவது வேண்டுமென்றால் இறைவனுக்கு தரகாக எதாவது ஒன்றை கொடுத்து விட்டால் அவன் தங்களுக்கு வேண்டியதை கொடுத்து விடுவான் என்றே நினைக்கிறார்கள்.

இப்படி நினைப்பதன் மூலம் இறைவனை அவமதிக்கிறோம் என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.மேலும் இறைவன் எந்த தேவையுமற்றவன் என்பதையும், இவர்கள் தரும் எந்த பொருட்களாலும் அவனுக்கு எந்த பலனும் இல்லை என்பதை நான் உணரவில்லை.

இறைவனை இந்த காலது அரசியல்வாதிகள் போல நினைக்கிறார்கள்.ஏதவது பெற வேண்டுமென்றால் ஏதாவது தர வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஏதவது கொடுத்தால் தான் இறைவன் கொடுப்பான் என்றால் மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்?

அவனும் மனிதர்களைப் போலவே விருப்பு வெறுப்பு உடையவன் என்றால் ஏன் அவனை வணங்க வேண்டும்/

இவர்கள் மதிப்பில் இறைவன் இளிச்சவாயன். எதிபார்ப்புள்ளவன்.


Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: இறைவன் என்ன தரகனா?
« Reply #1 on: October 28, 2012, 01:03:16 PM »
nalla sonna po thamilan
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline gab

Re: இறைவன் என்ன தரகனா?
« Reply #2 on: October 28, 2012, 01:07:58 PM »
நல்ல ஒரு உதாரணத்தோடு கூடிய அறிவுரை கவிதை . இறைவனுக்கு கொடுப்பது , உண்டியலில் இடுவது என்பது ஏழைகளை போய் சேர வேண்டும் என வகுத்த ஒரு பழக்க வழக்கம். அதை சரியாக புரிந்து கொள்ளாத மக்கள் அநேகம் பேர் . நல்ல பதிவு தமிழன்.
« Last Edit: October 28, 2012, 01:09:38 PM by gab »