Author Topic: ~ வெண்டைக்காய் காரகுழம்பு ~  (Read 108 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218345
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெண்டைக்காய் காரகுழம்பு



வெண்டைக்காய் -250 கிராம்
பூண்டு -5 பற்கள் கார குழம்பு
சாம்பார் பொடி — 2 ஸ்பூன்
புளி — 1 உருண்டை
வெங்காயம் — 10
தக்காளி — 1
நல்லெண்ணைய் — 3 ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு — 1 டீஸ்பூன்
வெந்தயம் — 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் — 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை —
அரைத்த தேங்காய் — 3 ஸ்பூன்
சீரகம்,மிளகு — 1 1/2 டீஸ்பூன்

* தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும்
தேங்காய்,சீரகம்,மிளகை நைசாக அரைக்கவும்
* வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயம்,பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை ,போட்டுதாளிக்கவும்
* வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்த தக்காளி போடவும்.
நன்கு வதக்கியதும் சாம்பார் பொடி,உப்புவெண்டைக்காய்போட்டுநன்குகிளரவும்
நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ஊற்றவும்.
* பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில் வைக்கவும்.இதில் மிளகு சீரகம் பொடி போட்டதினால் தனியாக தேங்காய் சேர்த்துள்ளேன்
* பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்
சுவையான வெண்டைக்காய் காரகுழம்புரெடி

குறிப்பு:

வெண்டைக்காய் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது