Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 211  (Read 2187 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 211
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline Guest 2k

யானைக் கட்டி நிலத்தை உழுது,
போரடித்து, போர் புரிந்த
பொன்னாட்டில்
வீரமும் வீட்டு வாசற்படியில்
சம்மணமிட்டு விளையாடும்
வீரமே மானமென கொள்ளும்
எம்குலவேந்தனின் மாண்பென்ன

சிங்கமும், வேங்கையும் காடுகளில் வாழ்வதென சொல்லிச் சென்றவர் யார்
மீசை முறுக்கினில் ஆயிரம் கோடி
வேங்கைகளின் உறுமல்களை
பொதிந்து,
போரென்றால் முன்னிற்கும்
வீரமென்ற குலத்தொழிலை கொண்ட
இப்பெருவேந்தனின் பாங்கென்ன

கடலென திரண்டு நிற்கும் காலாட்படையும்,
அதில் அலையென மேல்ழும்பி நிற்கும்
குதிரைப்படையும்,
கரிய மலைக்குன்றுகளாய்
அணிவகுத்து நிற்கும் யானைபடையுமாய்
என
ஏக இறைவனும் பயம் கொள்ளும்
படை பலம் கொண்டவன்
பொங்கும் அலைகளுக்கும் அடங்காதவன்
பெருகியோடும் காட்டாற்றை போன்றவன்
கண்களின் கூர் பார்வையில்
நூறுகோடி எரிமலை கக்கும் அனல்
கொண்ட கோமகனின் மாட்சிமையென்ன

திருபுறம்பயமும், தக்கோலமும்
காந்தளூரும், வேங்கியும், கலிங்கமும்
ஈழமும், கடாரமும்
வென்று,
பாரில் உயர்ந்து, பனிவரை மேலெழுந்து,
குருதிக் கறையில் சரித்திரம் எழுதும்
இவ்வேளினை தூக்கும்
வீரம் செறிந்த பெருமகனின்
கம்பீர புஜங்களின் ஆகிருதியன்ன

இமயமென்னும் வெற்பை அடக்கி
ஆழி கடந்து கொடி நாட்டி
கடாரத்தை கைக்கொண்டு
பேராண்மையும், பெருவொழுக்கமும் பேணி,
சிறுமை எதிர்த்து,
விழித்த கண் இமைக்காமல் போர் புரிந்து
புறமுதுகு வெறுத்து, விழுப்புண்ணில் மகிழ்ந்து
வீரத்தையும் மானத்தையும்
இருகண் என கொள்ளும்
இப்பெருந்தலைவனின் திண்மைதானென்ன?

திண்ணிய நெஞ்சமும்,
அறநெறியும், போர் ஒழுக்கமும்,
மற உணர்வும்,
அந்நியரிடம் சிரம் தாழாது,
வீரமெனும் விதையென வித்திட்டு
சென்ற வீரமன்னர்கள் வாழ்ந்த
பொற்பூமியில் இன்று,
அநீதிகளும், அக்கிரமங்களும் தலைவிரித்து ஆடும்
அரசியலுக்கு தான் அடிமையாய் போனதென்ன ?

பாலன்றி வீரம் ஊட்டி வளர்த்த
இம்மண்ணின்
மாமன்னர்களின் நெஞ்சுரமும்,
வீரத்தலைவனின் தீரமும்
கோப்பெருமகனின் அஞ்சா திண்மையும்,
முன்வைத்த காலை பின் வைக்காத
மறவர் குல வழி வந்த,
பகைவர் தலைதமை கொய்து
காலடியில் வீழ்த்தும்
வித்து இன்னும் மிச்சமிருக்கும்
வீரமரபினன் தமிழன்
எவனோ ஒருவனின் காலடியில்
வீழ்வானென்று நினைக்காதே!
« Last Edit: March 04, 2019, 03:40:39 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
புழுதிபறக்கும்
நிலத்தில்
பிளிறும் ஓசை
கேட்டால்
சுற்றி இருப்பவனுக்கு
குலை நடுங்கும்

பிணம் தின்னி கழுகுகள்
வட்டமிட தொடங்கிவிடும்

கடும்பகையோ
பெருங்கனவோ
பேராசையோ
போர் என்று வந்துவிட்டான்
நிமிடத்தில்
முடிந்துவிடும் வாழ்விது
என அறியா மானிடன்

கையில் வாள் இருப்பினும்
என் முன் வர தயங்குகிறான்

அவனை கொல்ல
விருப்பமில்லை
எனக்கும்

இருந்தும்

என்மேல் அமர்ந்திருக்கும்
என் அரசன்,
எனக்கு உணவு கொடுத்த
என் ஊர் மக்கள்
என் கிராமம் , என் நாடு
துண்டாடப்படுகையில்
சினம் என்னை ஆட்கொள்கிறது

போரில்
எங்கிருந்தோ
ஒருவன்
அம்பெய்கிறான்,
 
பின்னாலிருந்து
ஈட்டிக்கொண்டு
என்னை தாக்குகிறான்
இன்னொருவன்

வலி இருந்தும் 
கையில் சிக்கும்
எதிரிநாட்டு வீரனை
காற்றில் பறக்கவிட்டு
ஓடுகிறேன்

போர் முடிந்து
என் மன்னவன்
வெற்றிபெற வேண்டுமென

வெற்றி பெற்று
கோட்டையினுள்
செல்ல
மன்னவன் மேல்
மலர்தூவி
வாழ்த்தும்
மங்கையர்
நாணம் காண
வேணும்மென்ற
கனவோடு

பொன்னிற
நெற்றிப்பட்டமனிந்த
துதிக்கை வீசி
பெருங்காதுகள் கொண்ட
எனக்கொரு
பெயருண்டு

அன்புக்கு கட்டுப்பட்டு
அடங்கிநிற்கும்
வேறெதற்கும்
அடங்காத
திமிர்கொண்ட
"பட்டத்துயானை"

****ஜோக்கர் ****
« Last Edit: March 05, 2019, 01:23:18 AM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline AvanthiKa

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 59
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
தோல்வியை பரிசளிக்கும்
தோள்தினவு கொண்டவன் நான்
தேன்மொழி தேவதையின்
வியூகத்தில் சிக்குண்டேன்
எதிரியின் கோட்டை மதில்
எளிதில் தகதகர்த்தவன் நான் உன்
எதிப்படும் வேளையிலே
முற்றுகைக்குள்ளானேன் .
வாள்வீசி வேலெறிந்து
வெறியுடன்போராடியவன் உன்
விழி பேசும் மொழியறிந்து
வெள்ளைக்கொடி ஏந்திவிட்டேன் .
யுத்தக்களம் புகுந்து
ரத்தக்கடல் நீந்தியவன் உன்
சத்தமில்லா புன்னகையில்
சரணாகதி அடைந்துவிட்டேன்.!
அடுத்து அந்த காதலில் அவளுடைய கண்ணில் பதில் இதோ
இரவு பூக்கள் கதிரவனை வரவேற்கும் தருணம்..!
தென்றலின் தூறல்களில் நம் மனதோ மகிழம் பூக்களாய்
உன் அருகாமையில் என் யூகப்பயணங்களின் வானிலை
உன் நெருக்கங்களும் நெருடல்களும் என் புதுஉலகப்
பூக்கட்டில் பூத்த வசந்த மலர்கள்
இடைஇடையே நம் உறவுரையாடல்கள்.,
படர்ந்து ஓய்ந்த மழையின் வானிலைகளாய்
உன் செல்ல முத்தங்கள்.! எதுவரை போவதென்றே
புரியாத நம் அன்பில்
சஅற்றே குழம்பித்தான் போனது பாதைகளும்.!
கடக்கும் நொடிகள் ஒவொன்றிலும்
உன்  நெறுக்கங்கள் வேண்டியே பயணிக்க என்னும் என் மனம்,
பிரிய மனம்மில்லாமல் உன் இமைகள் என்னை அணைத்துக்கொண்ட
நிமிடங்களில் தோற்றேனடா உன்னிடம் ..
என் கரம்பற்றி வாழ் ஏந்தி எனைப்பார்த்த உன் ஒற்றைப்
பார்வைகளில் தொலைத்தேன் என்னையும் என் மனதையும் ..!
பட்டத்து யானை மீது வாழ் ஏந்தி எனைப்பார்க்கும் உன் பார்வையில் வீழ்த்தேனடா என் வீரா..!by ungal AVANTHIKA
« Last Edit: March 05, 2019, 06:54:16 PM by MysteRy »

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..

அகமும் புறமும் வாழ்வென கண்டார்
ஆதி மண்ணிலே அறம் பாடியும் கொன்றார்
வீரமும்  தீரமும் வாழ்வென கொண்டு
வெற்றிகளை குவித்த மறவர்தான் !

ஆற்றுப்படையும் குறிஞ்சிப்பாட்டும் முல்லையும்
மதுரை காஞ்சி ,பட்டினப்பாலை மலைபடுகடாம் என
பத்துப்பாட்டும் எட்டு தொகையும் எடுத்துக்கூறும்
போரின் புற ஒழுக்கங்கள் !

வெட்சியும் கரந்தையும்  வஞ்சியும் காஞ்சியும்
நொச்சியும் உழிஞையும் தும்பையும் சூட்டி
முப்போர் கருவிகள் வாள் , வேல் ,வில்லும்
நால் வகை படையும் சூழ

பீலி அணிந்து மாலை சூடி கண் திரள் நோன்
களிறு ஏறி காழ் திருத்தி  நெய் அணிந்து
கடியுடைவியல் காத்திருந்த தினவெடுத்த தோள்கள்
விழுப்புண்கள் கண்ட வீரர்கள்

ஆவும் மக்களும் பெண்டிரும் சிறு குழவிகளும்
புதல்வரை பெறாதவரும் சிவன்  அடியார்களும்
தக்கார் உறைவிடங்கள் தகுந்த  போக்கியும்
உயிர் நீத்தலும் உயிர் வேட்டலும் காண்!

வாரணம்  ஆயிரம் கண்ட மாவீரனுக்கு
நடு கல்லும்  முடி புனைதலும் நிகழ்த்த
மறக்குடி  வீரம் காட்டி காலங்கள்
வென்ற வெற்றி சங்கு ஊதுவோம் !
« Last Edit: March 04, 2019, 04:38:31 PM by RishiKa »

Offline Thinking

  • Newbie
  • *
  • Posts: 5
  • Total likes: 11
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
பட்டத்து யானையின் மீதினில் பறி ஏறிய அரசன்   
ஆர்ப்பரிக்கும் வாள்    கழுத்தினில் வெற்றி மாலை    
களம் எங்கும் வெற்றிக் குருதி நிறைந்த இடம்   
எல்லையை விரிவாக்க அல்லது எல்லையை காக்க
உயிரை வாங்கிய போர்.

தாய் நாட்டை தர மறுத்து உயிர் மரித்த போர்
வென்ற அரசின் வெற்றி களிப்பில் ஓசை இழந்த ஓலங்கள்
தமிழனின் வாழ் ஏனோ முதுகில் குத்தியதும் இல்லை
குத்து வாங்கியதும் இல்லை

கறிக்கடை வாசலில் காத்திருக்கும் நாய்களை போலே 
அரசியல் ஆதாயத்திற்காக நிகழ்த்தப்படும் போர்!
நேர்மையற்ற போர் முறைகள் நெறி தவறிய போர் களங்கள்
வீர வாளின் எழுச்சி சரிந்த உடலின் நீட்சி!

அரசனின் வெற்றியில் மறைந்த அழுகைகள்
போர்க்களத்தின் நடுவிலே பிணம் தேடும் சொந்தம்
வெற்றியின் அடையாளாமாய் செல்வத்தில் இழப்பீடு
ஈடில்லா மக்களுக்கு இழப்பீடு செய்யும் அரசு!
« Last Edit: March 04, 2019, 06:31:00 PM by Thinking »

Offline Dong லீ

கதை கதையாய் ஒரு   உரைநடை கவிதை 

இன்று

பால் வாக்கரின் கவிதை முயற்சி

சலனமில்லா என் அறையில்
 சத்தமில்லா முன் இரவில்
ஓவியத்தை உயிராக்கும் முயற்சியில் மூழ்கியிருந்த என் எழுதுகோலில்
திடீரென்று ஒரு நடுக்கம்

படபடத்தது என் இதயம் !
சற்று குனிந்தால்
வாய்வழி வெளிவந்திடுமோ
என் இதயம் !!
கவலையுடன் கேப்(GAB)  இடம் செல்ல
அவர் கூறிய என் வரலாற்றை
நம் வரலாற்றை கேட்டு
 அதிர்ந்து நின்றேன் 


அன்று

[(பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒர் காட்சி

கதாபாத்திரங்கள்

 1.பாண்டியநாட்டு இளவரசி சிக்கு தேவி 2.பாண்டியநாட்டு மன்னன் (சிக்கு தேவியின் அண்ணன் )பால் பாண்டியன்
3.பாண்டியநாட்டு மருத்துவர் வயதில் மூத்தவர் கபாலீஸ்வர முனிவர்
4.சோழநாட்டு இளவரசி சம்யுக்தா
 5.சோழநாட்டு மன்னன் (சம்யுக்தாவின் அண்ணன்) சொக்கலிங்க சோழன்)]

சிக்கு தேவியின் குமுறல்

சிங்கமென வீற்றிருக்கும் மன்னா
பார் போற்றும் அண்ணா - உம்
வெற்றிகளை உளமார போற்றியவள் இன்றுனை போர் வேண்டாமென மன்றாடுகிறேன்
காரணம் நீ அறிவாய்
அண்டை நாட்டு இளவரசி
என் தோழி சம்யுக்தா
அவளிடம் போர் புரிவது
என்னுயிரை கொல்வதற்கு சமானம்

பால் பாண்டியனின் புலம்பல்

அறிவேன் தேவியே
 உனைப்போல் யானும்
 உடைந்துள்ளேன்
சொக்கலிங்க சோழன் என் தோழன்
நட்பா நாட்டு மக்களின் நலனா
குழம்புகிறேன் நானும்
நம் தமிழினத்திற்குள்
நாமே போரிட்டு
தமிழையும் சில காலங்களில்
 தொலைக்க காத்திருக்கிறோம் 

கபாலீஸ்வர முனிவரின் ஆறுதல்

அரசே !!
போர் காலத்தின் கட்டாயம்
கவலையை விடுத்து
களம் காணுங்கள்
 


இன்று

 கேப்(GAB)  யின் எழுச்சி

 நண்பா பால் வாக்கர்
கேள் இந்த கபாலீஸ்வர முனிவனின் எழுச்சியை

நீயே பால் பாண்டியன்
 உன் ஆணையிற்கிணங்கி
பல நூறாண்டுகளுக்கு முன்
மருத்துவ புரட்சி புரிந்தேன்

 நம் தமிழ் மன்னர்கள்
இளவரசிகள் ராணிகள்
 மரபணுக்களை சேமித்து
மீண்டும் உயிர்ப்பிக்கும்
 தொழில்நுட்பத்தை உருவாக்கினேன்

தமிழையும் தமிழினத்தையும் காக்கும் பொருட்டு

இந்த நூற்றாண்டில்
 தமிழும் தமிழனும்
படும் துன்பங்களை கண்டு
என்னை முதலில் உயிர்ப்பித்தேன்
 தமிழை காக்க
நண்பர்கள் தமிழ் இணையதளம் உருவாக்கினேன்

ஓவியம் நிகழ்ச்சிக்கான ஓவியத்தில் உன்னையும் அறியாமல்
உன் முன் ஜென்ம நிழற்படத்தை வழங்கிவிட்டாய் -ஆதலால்
நம் வரலாற்றை உனக்கு தெரிவிக்கும்
காலம் வந்துவிட்டது

தினம் தினம் அரசர்
 அரசிகளை உயிர்ப்பித்தேன்
 இணையதளத்தின் உறுப்பினர்களாக்கினேன் நம் உறுப்பினர்கள் அனைவரும்
தமிழ் மண்ணின் அரசர் அரசிகள்
 (அவர்களுக்கே தெரியாது ) 
 அரசர் அரசிகளுக்கு  உரிய நேரத்தில் உண்மைகளை விளக்குவேன்

அதுவரை உன் கவிதையில் இந்த உண்மைகளை உளறிவிடாதே நண்பா

 

« Last Edit: March 04, 2019, 08:41:50 PM by Dong லீ »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
ராஜா ராஜா சோழன்

தஞ்சை மண்ணில்
பாய்ந்தோடும் 
காவேரி  தாய் பெற்ற  புலியே!
காலத்தை கடந்து
விவரிக்க முடியாத விஞ்ஞானி நீ
கணிக்கவே இயலாத  மெய் ஞானி   நீ
சூறாவளியின் சதை வடிவம் நீ
புதியதோர் எழுச்சியின் எரிமலை நீ
நிலநடுக்கத்தின் தூதுவன் நீ
ஒரு காரியம் ஆற்றுவதிலும்
அதே காரியம் சாதிப்பதிலும் 
கைதேர்ந்தவன் நீ
ஆயிரம் ஆண்டுகளுக்கு  ஒருமுறை
தோன்றும் அதிசிய பிறவி நீ
ஒரு குவளைக்குள் வங்க கடல் ததும்பும் அளவிற்கு
அறிவாற்றல் கொண்டவன் நீ

பலநூறு ஆண்டுக்கு முன்பே
ஆலோசனைக்கு குந்தவையிடம் 
செவி சாய்த்து
பெண்ணியத்தை நிலை நாட்டியவர்

ஈழத்தை கைப்பற்ற
நீ கட்டமைத்த வியூகம்
மெய்சிலிர்க்க வைக்கிறது
சேர பாண்டியனை 
வென்று
மும்முடிச்சோழனாய் திகழ்ந்த
உன் திறனை என்னவென்று  சொல்ல!

பகைவர் நடுங்கும்
யானை படை
குதிரை படை
காலாட் படை 
லட்சக்கணக்கான போர்வீரர்களை
கொண்ட உன் படையை
எதிர்த்து நிற்க யாருக்கு உண்டு துணிச்சல்
வீரத்தின் பிறப்பிடமே  ....

திருமறை திருவாசகத்துக்கு
புத்தம்புதியதாய்  பொழிவு   கொடுத்த 
தமிழ் வள்ளலே...
நீ  தமிழ் மீது கொண்ட
காதல் தான் எத்தனை...

இன்றும் வியப்பில் ஆழ்த்தும்
தஞ்சை பெரியகோவிலின்
பெருமையை எப்படி சொல்ல ?
அதை வர்ணிக்க தமிழ் மொழியில் சொற்கள் உண்டோ ?
இன்றும் என்றும்  உன் புகழ் பாடும் தூண்கள் இருக்க
உன் தடையதை அழிக்க எந்த கொம்பனுக்கும் தைரியம் உண்டோ ?
தஞ்சை கோபுரம் மட்டுமல்ல
போரில் உன் தலையும் தரைதொட்டதில்லை

இன்றும் மர்மமாய்
இருக்கும் உன் மரணம்...
பிரிந்ததோ  உன் உயிர் மட்டுமே
உன் புகழல்ல
உயிர் வாழும் உன் புகழுகு
மேலும் ஒரு மகுடமாய்
உயிரூட்ட  உயிரெழுத்துகளில்
ஒரு மாலை தொடுக்கிறேன்

மிர்தம் கொட்டும் தமிழ்மொழிக்கு அரிய செல்வம் !
ர்த்திகையை கையாள தெரிந்த வித்தகன் !
ன்பம் பரவும் வெற்றிகளை குவித்தவன்   !
ன்றவர்களுக்கு புகழ் சேர்க்க உத்தமபுத்திரனாய் பிறந்தவன்  !
லகமே மெச்சும் வரலாற்றை உடையவன்  !
ழ்வினை நூல்களுக்கு புத்துயிர் கொடுத்த பிரமன்   !
ண்குணன் என்று மக்களால் வணங்கப்படுபவன்   !
டணை  புரிந்து செயல்படும் செயல்தலைவன்  !
யம்  இல்லா ஆளுமை கொண்டவன்  !
ள்ளியர்  என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவன்  !
ரளவை  உலகில் புரட்சிகளை விளைத்தவன்  !
வியம்  இல்லா புதுமைப்பித்தன்  !

உன்னை
பற்றி அறிந்து கொள்ள
அறிந்து கொள்ள
உன் மீதான ஆச்சரியம்   ...
பெருகி கொண்டே போகிறது ....
உன் சாம்ராஜ்யத்தை போல ... 
கண் மூடி ஆயிரம் வருடங்கள்
தாண்டி பயணிக்கிறேன்
உன்னை காண ...
உன் கம்பீரம் ...
உன் பேச்சு ...
உன் புன்னகை ...
உன் கருணை ...
உன் அன்பு ...
ஈகை ....           
ஆண்மை  ....
ஆளுமை  திறன்  ... 
இவை அத்தனையிலும் 
ஒரு வீரம்  ...
உன் வரலாற்றை கேட்க
ஆரம்பிக்கும் முன்னே
பிரமிக்க  தொடங்கி விட்டேன் ...
முழுவதுமாக அறிந்து
கொண்ட பின் உன்னில்
நான் தொலைந்தேன்  .... 
முதல் முறையாக
காற்றோடு கலந்துவிட்டேன்
ஒரேயொரு  நாள் ராஜா ராஜா சோழனாய்
இருப்பதாய் எண்ணி ...

ராஜா ராஜா சோழனின் மாண்பு
வாழ்க பலநூறாண்டு

தமிழர்களால் தமிழ்
தமிழால் தமிழர்கள்
என்று ஒட்டி ஒரசிக்கொண்டிருக்கும்
நமக்கு தெரியுமா
தமிழர்களின் வரலாறு ...
புதைக்கப்பட்ட தமிழனின் பெருமைகளை
தோண்டி எடுப்போம்
நம் பெருமைகளுக்கு எடுத்துக்கட்டாய்
குமரிக்கண்டமே கடலுக்குள் அமைதியாய் உறங்குவதை
நினைத்து பெருமைகொள்வோம்

வரலாற்றை அறிந்துகொள்வோம்
தமிழனாய் பெருமைப்படுவோம் .....

வாழ்க தமிழ் மொழி ...!



Offline thamilan

மானத்தை  உயிராய் நினைத்த
பெண்களை தெய்வமாக துதித்த
வீரத்தை  பெரிதென மதித்த
தானத்தை கடமையாய் மதித்த
வீரத் தமிழர்கள் வாழ்ந்த நாடு
நம் நாடு

வீரமும் விவேகமும் கொண்ட தமிழனுக்கு
வேகமும் தாகமும் அதிகம்
வீரம் ஒரு விளையாட்டு அவனுக்கு
தினவெடுத்த தோள்களும்
விம்மித்தணியும் மார்பும்
நிமிர்ந்த நடையும்
தொலைதூர பார்வையும்
அடையாளம் வீரத் தமிழனுக்கு 

கங்கை கொண்ட சோழன்
இமயம் வென்ற சேரன்
பரணியை ஆண்ட பாண்டியன்
தமிழனின் வீரத்தின் ஆணிவேர்கள் இவர்கள்

இவர்கள் மரபில் வந்த
வீரம் என்றாலே நினைவில் நிற்கும்
தமிழ் மாமன்னன் வீரன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆங்கிலேய பீரங்கிகளுக்குக்கும்
அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தியவன்
 
கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டாலும்
இன்றும் சரித்திரம் சொல்லுவது
கட்டபொம்னைத்தான்
ஜாக்சன் துரையை அல்ல


தமிழனின் சாபக்கேடோ என்னவோ
வீரன் கட்டபொம்மன் பிறந்த மண்ணில் தான்
எட்டப்பனும் பிறந்தான்
வீரன் பிரபாகரன் பிறந்த மண்ணில் தான்
கருணாவும் பிறந்தான்
தமிழனை உலகே மதித்தது
இந்த மாவீரர்களால் தான்
தமிழ் இனமே அசிங்கப்பட்டதும்
இந்த தமிழ் துரோகிகளால் தான்