Author Topic: ~ கூர்க் சிக்கன் குழம்பு ~  (Read 87 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218308
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கூர்க் சிக்கன் குழம்பு



தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு….

சிக்கன் – 3/4 கிலோ
கூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
ரெட் ஒயின் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 5 (தோலுரித்து, நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
கூர்க் மசாலா பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
chicken-curry-1
 
கூர்க் மசாலா பவுடருக்கு…

மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 1 இன்ச் துண்டு
பச்சை ஏலக்காய் – 1-2

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கூர்க் மசாலா பவுடருக்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் போட்டு வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து, 1-2 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அதே நேரத்தில் மற்றொரு அடுப்பில், அகன்ற வாணலியை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிவை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, நன்கு வதக்க வேண்டும்.
பிறகு மிளகாய் தூள், கூர்க் மசாலா பவுடர் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின் வெந்து கொண்டிருக்கும் சிக்கனை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, சிக்கன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவி 15-20 மூடி வைத்தால், சூப்பரான கூர்க் சிக்கன் குழம்பு ரெடி!!!