FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 24, 2016, 08:36:20 AM

Title: ~ சத்தான பாலக் சப்பாத்தி ~
Post by: MysteRy on March 24, 2016, 08:36:20 AM
சத்தான பாலக் சப்பாத்தி

(https://fbcdn-photos-h-a.akamaihd.net/hphotos-ak-xpl1/v/t1.0-0/s480x480/12523995_1548849972079139_2206818763857787094_n.jpg?oh=dc62ac655100135c9caccb5d2505643b&oe=57985BC8&__gda__=1468836973_c61e1fc6060ce2f18434fad70b37175d)

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய், நெய் கலவை – தேவையான அளவு.

அரைக்க:

பசலைக்கீரை (பாலக்) – ஒரு கட்டு,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – ஒரு துண்டு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

* பசலைக்கீரையை சுத்தம் செய்து கழுவி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.
* விசிலைத் தூக்கி பிரஷரை வெளியேற்றிவிட்டு, குக்கரைத் திறந்து ஆறியதும், அவற்றை நன்கு அரைத்து அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து, வழக்கம் போல சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள்.
* சுவையான சத்தான பாலக் சப்பாத்தி ரெடி.