FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on December 20, 2012, 01:15:00 AM

Title: தமிழ்ப் பழமொழிகள் - Tamil Proverbs- (பொருள் விளக்கம் )
Post by: Global Angel on December 20, 2012, 01:15:00 AM

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

ஒருவரது மனநிலையை அவரது முகத்தில் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் எந்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மனிதருக்கு முகபாவங்கள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும்.
Title: Re: தமிழ்ப் பழமொழிகள் - Tamil Proverbs- (பொருள் விளக்கம் )
Post by: Global Angel on December 20, 2012, 01:16:32 AM
அகல உழுகிறதை விட ஆழ உழு.


நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடப்பட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.

மேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழிப்பு.

அதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.

இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.
Title: Re: தமிழ்ப் பழமொழிகள் - Tamil Proverbs- (பொருள் விளக்கம் )
Post by: Evil on January 16, 2019, 08:56:57 PM
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பொருள்
உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.

"உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்."
Title: Re: தமிழ்ப் பழமொழிகள் - Tamil Proverbs- (பொருள் விளக்கம் )
Post by: Evil on January 16, 2019, 09:37:27 PM
சட்டி சுட்டதும், கை விட்டதும்.

பொருள் :ஏண்டா அடுப்பில் இருந்த மண் கலையத்தை இறக்கும்போது கீழே போட்டாய் என்றால், சட்டி சுட்டுவிட்டது என்றதுபோல.

தமிழ் விளக்கம்
ஒரு நொண்டிச் சாக்கைக் குறித்துச் சொன்னது.