Author Topic: சாமுத்திரிகா லட்சணம்  (Read 4856 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சாமுத்திரிகா லட்சணம்
« on: March 15, 2012, 04:56:40 PM »
சாமுத்திரிகா லட்சணம்
சாமுத்ரிகா சாத்திரம்



உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறுவது இந்த சாத்திரம்

அடிப்படை

 தான் எப்படிப்பட்டவன்; தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்விகளுக்கு விடை அறிய எண்ணும் மனித வேட்கையின் விளைவுகளாக எழுந்த சந்தைச் சாத்திரங்கள் பல. அவற்றில் சிலவற்றிற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களும் வானவியல் அறிவின் அடிப்படைகளும் இருந்தன. கைரேகை சாத்திரம், ஜாதகம், எண் சோதிடம், கௌளி சாத்திரம், மச்ச சாத்திரம், அதிர்ஷ்டக் கற்கள் போன்றவை அவற்றில் சில. இந்த வகை சாத்திரங்களில் ஒன்று தான் சாமுத்ரிகா சாத்திரம்.
 


அழிவு

 மேற்கத்திய வகை அறிவியல் வளர்ச்சிக்கு, எந்தக் கண்டுபிடிப்பையும் புத்தகபூர்வமாக்கிப் பரவலாக்கும் பாணி அடிப்படை. ஆனால் கீழை நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிஞர்கள் தாம் ஆய்ந்து அறிந்தவற்றைப் பொதுவாக்காமல் தம்முடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு மட்டுமே சொல்லித் தந்து மறையும் வழக்கம் இருந்தது. அதனாலேயே காலப்போக்கில் அடிப்படையும் ஆழமும் தனித் தன்மையும் இழந்து மறைந்துபோன பழமை வாய்ந்த இந்தியக் கலைகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதிகம். சாமுத்ரிகா சாத்திரம் அவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
 

சாமுத்ரிகா சாத்திரம்

 உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
 இந்த சாத்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும்.
 

இந்த சாத்திரத்துக்கு இன்றைய தேதியில் எந்த வித அறிவியல் பூர்வ ஆய்வுகளின் பின்னணித் துணையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்களில் அழகன் எப்படி இருக்க வேண்டும்; பெண்களில் சிறந்த அழகி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் எப்படிப்பட்ட அவயவங்கள் இருந்தால் அந்த ஆண் அல்லது பெண்ணின் இயல்புகள் எப்படி இருக்கும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது.
 


ஆண் பெண் வகைகள்

 மூவகை ஆண்கள் (முயல், காளை, குதிரை), மூவகைப் பெண்கள் (மான், பெட்டை, யானை), நான்கு சாதிப் பெண்கள் (பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி) போன்ற வகைப்பாடுகள் பிரபலமாக அறியப்பட்டவை. எந்த வகை ஆண்கள் எந்த வகைப் பெண்களை மணந்தால் இல்வாழ்க்கை சிறப்புற அமையும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்வோர் இப்போது இல்லை.
 

சில உதாரண லட்சணங்கள்
 


ஆண்

 ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும், மிகுந்த அதிகாரங்களை உடையவராகவும் இருப்பார்கள். சற்றே நீலம் பாய்ந்த நாக்கினைப் பெற்றிருப்பது உத்தமம்; அவர்கள் திரண்ட ஐசுவரியங்களைப் பெற்றிருப்பார்கள். குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்க சிந்தை உடையவர்களாக இருப்பார்கள்.
 
பெண்

 சங்கு போன்ற கழுத்தினை உடைய பெண்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தருவார்கள். மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள். கண்புருவங்கள் வில்லைப் போல் வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் ஒருகுறையும் அற்ற சுகபோக வாழ்வு வாழ்வார்கள்
.