Author Topic: காரிருள்....  (Read 440 times)

Offline இளஞ்செழியன்

காரிருள்....
« on: November 10, 2020, 11:08:16 AM »
என் உணர்வுகளுக்குள்
சலனம் இருந்ததில்லை
என்றெல்லாம்
பொய்ச் சமாதானம்
சொல்லிக் கொள்ள மாட்டேன்.
என் உணர்வுகளின் சப்த்தங்களை எப்போதும் நான் காதலிக்கிறேன்.

மனதின்
வலுவிழந்த
ஏதோ ஓர் பகுதிக்குள் தான்
இந்த இயலாமை குணம்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பதை
உணர்வுகள் ஒரு போதும்
அறியத்தராமல் இருந்ததில்லை.

நிற்க...

மெல்லிய நேசமொன்றின் மீதான
பலத்த கோபங்கள்,
என் நரம்புகளுக்குள்
பாய்ந்தோடும் பொழுதுகளில்,
நேசத்தின் நலன் கருதி
அமைதிக்குள் உரைந்து விடும் மெளனங்களின் விசும்பல்,
எனக்குள்ளேயே கேட்கத்தான் செய்கிறது.

துரோகங்களின் காய்ந்து போன நியாபகங்கள் எல்லாமும்,
இன்னும் ரத்த நாளங்களில்
அவ்வப்போது ஈரளிப்பாய் பாய்ந்து, மனதினுள் தெறித்து
கண்ணீராய் கசியத்தான் செய்கிறது.

நெஞ்சிலிருந்து நீங்கிப் போகாது
பரவிக் கிடக்கும்,
சில பழைய உறவுகளின்
துருப்பிடித்த குணங்கள்
இப்போதும் நினைவுகளாய் உள்ளாடி, அழுத்தமாய் அலுக்கான வாடையை
கிளப்பி விட்டுப் போகத்தான் செய்கிறது.

நம்பிக்கைகளின்
ஏதோ ஓர் புள்ளிக்குள்
அமைதியாய் பதுக்கி வைக்கப்பட்டு, சந்தர்ப்பம் பார்த்து
எடுத்தெறிந்து உடைக்கப்பட்ட,
மரித்த நன்னம்பிக்கைகள்
சீழ்களாய் உள்ளே
ஒழுகத்தான் செய்கிறது.

நொறுக்கப்பட்ட
எதிர்ப்பார்ப்புக்கள் எல்லாம்,
இதயத்தின்
கனத்த பகுதிக்குள் நுழைந்து,
மேலும் ரணமாய் ஏதோவொன்றை
உணர்த்திவிடத்தான் செய்கிறது.

பாழடைந்த நிமிடங்களில் எல்லாம்
இப்படி பாழாய்ப் போன
வெற்று நினைவுகள்
மெல்லக் கொல்லும் வேளைகளில்,
இதனை துரத்தியடிக்க...!
எதைச் சொல்லி
என்னை நான் சமாதானம் செய்து கொள்வேன் தெரியுமா?

நான் குறுகிக் கிடந்த
கருத்த கருவறை இருட்டை விடவா,
ஓர் இருள் சூழ்ந்த நிலை
என்னோடு பெரிதாய்
இருந்து விடப் போகிறது?
அல்லவே...? 
என்றெண்ணியபடியே
இவைகளைத் தாண்டிச் செல்கிறேன்....
பிழைகளோடு ஆனவன்...