Author Topic: ~ சிறந்த கல்வித் தகுதி படிவங்களை(RESUME) தயாரிப்பது எப்படி? ~  (Read 1733 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218308
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிறந்த கல்வித் தகுதி படிவங்களை(RESUME) தயாரிப்பது எப்படி?



வேலைவாய்ப்பு போட்டி நிறைந்த இவ்வுலகில் நமது செயல்கள் தனியாகத் தெரியவேண்டும் .    படித்த பல பட்டதாரிகள் இருக்கும்   அரங்கில் நீங்கள்  தனியாக  கவனிக்கபட்டால்தான் வெற்றி பெற முடியும்.  உங்களது ரெசுயூம் என்று சொல்லப்படுகின்ற கல்வித் தகுதி படிவமானது வேலை தேடலின் போது  கவனிக்கப்பட வேண்டிய சிறந்த ஒன்றாகும்.  அந்த வகையில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் முதலாளிகளை  ஈர்க்கக் கூடிய முதல் விஷயமே ஒருவரது கல்வித் தகுதி படிவம்தான்  ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு நாளும்  ஆயிரக்கணக்கான கல்வித் தகுதி படிவங்களை பார்ப்பதால் சராசரியான கல்வித் தகுதி படிவங்களை  வடிகட்டுவதற்கு அவர்களுக்கு 25 நிமிடங்கள் போதும். அதனால் மற்றவர்களது   ரெசுயூம்களைக்   காட்டிலும்  உங்களது  ரெசுயூம்களில் அதிக நேரம் செலுத்தி பார்க்கும்  வகையில் செய்ய வேண்டும்.

 நம் ரெசுயூம்களை அதிகமாக ஈர்க்க வைக்கும் சில  காரணிகள்:

1. ஒரு கல்வித் தகுதி படிவத்தில்  பார்த்தவுடன் எளிதில் பெயர், முகவரி, அனுபவம்,கலவித் தகுதி  போன்றவைகள்  எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சுருக்கமாக  இருக்க வேண்டும்.

2. படிவத்தின் எழுத்துகள் அழகாகவும் வாசிப்பவர்களுக்கு எளிதாகவும் இருப்பது அவசியமே! Arial  மற்றும்  Times New Roman ஆகிய இரண்டும்  பாதுகாப்பான எழுத்துருக்களே! மேலும்  மற்ற எழுத்துருக்களான  Cambria, Calibri  மற்றும் Garamond  அல்லது  Trebuchet போன்றவைகள் 11 மற்றும் 12போன்ற அளவுகளில் இருப்பது நல்லது.

3. பட்டியலிடும் நேரங்களில் புல்லட்டுகளை அதிகமாக உபயோகிக்காமல் குறைவாக உபயோகிப்பது நல்லது.ஏனெனில் புல்லட்டுகள் வாசகர்களின் பார்வையை  கவருவதன் பொருட்டு உபயோகிக்கக் கூடியது.  அதேபோன்று இத்தாலிய  எழுத்துகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட  எழுத்துக்கள் போன்றவைகளை அதிகமாக அனைத்து  இடங்களிலும் உபயோகிக்காமல் தேவையான சில இடங்களில் மட்டும் உபயோகிப்பது சிறந்தது.  ஏனெனில் அதிகமாக உபயோகிப்பதால் அதற்கான முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் வாய்ப்புள்ளது.

4. மேலும் உங்களுக்கு பல இடங்களில் வேலை பார்த்த அனுபவங்கள் இருப்பினும்  அவையனைத்தையுமே கால  வரிசைப்படி வகைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்த துறைக்கு சம்மந்தமான அனுபவங்களை முதலில் பட்டியிலிடுவது அவசியமாகும். அதைவிட “Relavant  Experience ” என்ற தலைப்பின் அடிப்படையில்  பட்டியிலிடுவது அதைவிட  மிகச் சிறந்ததே!

5.  பெரும்பாலும் கல்வித் தகுதி படிவங்கள் படிப்பதற்கு  மிகவும் சுவாரஸ்யமாக இருந்தால் அவை மிகவும் நல்லதே! ஆகையால்  உங்கள் வாழ்க்கையின்  மிக சுவாரஸ்யமான   தகவல்களை எடுத்து அதனை கல்வித் தகுதி படிவத்தில் நிரப்புவதுகூடுதல் மதிப்பைப் பெற்றுத் தரும்! மேலும் படிவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும்  வார்த்தைகள் கண்டிப்பாக டிஜிட்டல் நுட்பத்தில் இருக்க வேண்டும்.                             உதாரணமாக  analyzed, appraised, estimated,collaborated, allocated, facilitated, forecast, motivated போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லதே ! இதுபோன்ற சில  டிப்சுகள் உங்களது கல்வித் தகுதி படிவத்தை அழகாக்க கண்டிப்பாக உதவும்.