Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227  (Read 1907 times)

Offline Forum

size=12pt]ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)[/size]

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 227
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக      வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline Guest 2k

வழிந்தோடும் கோப்பை தேநீரின்
சுவையோடு கலந்தாடுகிறது
ஞாபக சுவடுகள்
எனக்கென நீ விட்டுச் சென்றிருப்பவைகளை
அசை போட்டுக் கொள்கிறேன்
மீண்டும் ஒரு ஞாபகத்திற்கென

வீதியில் நீ இறங்கி வருகையில்
மிதிப்படும்
மஞ்சணத்தி பூக்கள்
ஜன்ம சாபல்யம் அடைந்த உற்சாகத்தில் கிறங்கி கிடக்கின்றன
தேரடி கோவிலின் தேவனகானத்தை
விஞ்சி ஒலிக்கிறது
உன்
பாத கொலுசொலிகள்


உயிர் ஊடுருவி செல்லும் மின்னலென
ஒரு ஓரப் பார்வை வீசிச் செல்கிறாய்
இது கார்காலமா என
ஒரு கணம் குழம்பி நிற்கின்றது
முகில் பொதிகள்
தென்றலென தீண்டிச் செல்லும்
உன் காதோர ஜிமிக்கிகளின்
குலுங்கலில்
இதயம் அதிர்ந்து துடிக்கிறது


கலகலக்கும் வளையொலிகளின்
ஓசையில்
சிறகடித்து பறக்கிறது
என் மனப் பட்டாம்பூச்சிகள்.
இப்பொழுது சிரித்தாயா என
சந்தேகமாக கேட்கிறேன்
மீண்டும் ஒருமுறை
கலகலத்து சிரிக்கிறது
உன் கரவளைகள்


பூமியில் இன்னும் தோண்டி எடுக்கப்படாத
இந்த வைரங்களை உன் கழுத்தணியில்
எனை முந்திக்கொண்டு
சேர்ப்பித்தவன் தான் என் முதல் எதிரி

தீண்டிடும் உன் தாவணியின் தலைப்புகள்
மன்மத பாணங்களென
உயிரை உரசி செல்கிறது.
தென்றலை விடவும் மிருதுவானது
அந்த தீண்டல் என
ஏங்கி தவிக்கின்றன
தெருவில் வீற்றிருக்கும் செவ்வரளி செடிகள்

உன்னை கண்டதும் குதித்துக்
கும்மாளமிடும் ஆற்றங்கரையின்
இரகசியம் தான் என்ன?
நீ கால் பதித்ததும்
சலசலத்தோடும் ஆறும் கூட
சலனமின்றி அதிர்ந்து நிற்கிறது.
எனை ஆட்டுவிக்கும் அழகினில்
சரணமடைந்துவிட
துடிக்கிறது என் ஒவ்வொரு நொடி பொழுதுகளும்
புல்லின் நுனி பனித்துளி போல்
நீர் முத்துகள் முத்தாடும்
கொலுசுகளணிந்த
உன் பொற்பாதம் தனை
என் கரங்களில் ஏந்துகையில்
உன் பாதங்களில்
வீழ்கிறது
எந்தன் உலகம்
« Last Edit: September 11, 2019, 06:38:57 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline யாழிசை

என்னவளின் கொலுசொலி

அன்று அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
உமது சங்கு கழுத்தில் தாலியதனை கட்டிய நான்
மெட்டி அணிவிக்கும் அத்தருணத்தில்
காண தவறவில்லை உமது கால்களுக்கு
அழகூட்டிய கொலுசுதனை...


பஞ்சு போன்ற பாதத்தை உரசி
ஊஞ்சலாடி ஒலியெழுப்பும் கொலுசே..
உன் அழகுக்கு அழகு சேர்க்கும் அந்த கால்களை
கரத்தினில் ஏந்த என்ன தவம் செய்தேனோ...

அந்த ஏழு சுவரங்களும் ஏங்கி அல்லவா போகின்றன
என்னவளின் கொலுசொலி கேட்டு ...
ஜல் ஜல் என்று ஓசை எழும்புகையில்
ஜில் ஜில் என்று மனது சில்லிடுகிறது ....

நித்தம் நித்தம் அதிகாலை வேளையில் 
அலாரம் தேவை இல்லை...
அன்பே உமது கொலுசொலி மட்டும் போதுமே ...



Offline thamilan



அவளைக்  கண்டது நான்
ஒரு மழை நாளில்
குடையோடு அவளும்
மழையோடு நானும்
வந்து கொண்டிருந்தோம்
கருணையாய் வந்த காற்று
பறித்துக் கொண்டது
நான் எதிர்பார்த்தது போலவே 
அவள் குடையை

மழையில் அவள் நனைய
குளிரில் நடுங்கியது எனதுடம்பு
ஆனந்தமாக அவளை தழுவும்
மழையைக் கண்டு
உடம்பை சிலிர்த்தன
சாலையோர மரங்கள்

அழகை எல்லாம் அள்ளித்தெளித்து
பிரமன் படைத்திட்ட அழகுச் சிலையே
அஜந்தா ஓவியம் உயிர் பெற்றது
உன்னால் தானோ

ஈரமண் தரையில் பதிந்த
அவள் காலடிச் சுவடுகள்
மழைநீர் பட்டு அழிந்தாலும்
இன்னும் அழியாமல் இருக்கிறது
அவள் நினைவுச்சுவடுகள்
என் மனதில்

தலைகுனிந்து நடந்தவள்
சற்றே தலைதூக்கி
ஓரக்கண்ணால் பார்த்து
மெலிதாக சிரித்ததும்
மின்னல் வெட்டியது என்மனதில்

தலை குனிந்து நடந்தாலும்
அவள் புருவம் மட்டும் உயர்ந்தே இருந்தது
அவள் ஓரக் கண்ணால் என்னைப் பார்ப்பதை
எனக்கு அறிவித்தது
அவள் மனம் அவள் வசமில்லை
அவள் தடுமாறும் நடை
எனக்கு புரியவைத்தது
அவளை நெருங்க நெருங்க
படபடக்கும் வானத்தை விட
படபடத்தது என் மனம்

திடீரென என் கண்களுக்குள்
ஒரு தீப்பொறி
அவள் பாதம் தூக்கி வைக்கையில்
அவள் பாதத்துக்கு கீழே
கூரிய இரும்புத் துண்டொன்று

பாய்ந்து தாங்கிக் கொண்டேன்
அவள் பாதத்தை 
பாதங்களா அவை

தாஜ்மகாலை கட்டிட ஷாஜஹான்
பளிங்குக் கற்களை தேர்ந்தெடுத்தது
உன் கால்களைக் கண்டு தானோ
பட்டுப் போன்ற உன் பாதம்
தரையில் பட்டாலும்
பட்டுபோகும் என்மனம்
காயம்பட்டிருந்தால் என்னவாகும்

அன்று தொட்ட அந்த பாதத்தை
இன்னும் சுமந்து கொண்டிருக்கிறேன்
என் மனதில்
உன்பாதம் பதிந்த என்மனது
இன்னும் ஈரம் காயாமல் அப்படியே இருக்கிறது


 





Offline Thalapathi

  • Newbie
  • *
  • Posts: 7
  • Total likes: 21
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
நானோ அவளது அழகு கால்களை தீண்ட முடியாமல் திணரூகிறேன் நீயோ ஒய்யாரமாக ஒட்டி உரவாடுகிறாய்.

அவள் பட்டுப்பாதங்கள்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடிக்கும்
தாளம் போடுகிறது!

எல்லாக் கால்களிலும்
கொலுசுகள் கிணுகிணுக்கின்றன.
ஆனால் உன் கால் கொலுசு மட்டுமே
என்னுடன் பேசுகின்றன

நீ ஒரேவிதமாகவே
நடை பயில்கின்றாய் - ஆனால்
உன் கொலுசுகளோ ஏழு ஸ்சுரங்களையும்
எப்படி இசைக்கின்றன

நதி ஓட்டத்தில் நீரலைகளின்
சலசலப்பு !
மனத்தோட்டத்தில் நடந்து வரும் உன் கொலுசின்
ஜல் ஜல் !


Offline JeGaTisH

மெல்லிய மழை சாரலில்
மலர் பாதங்கள் நனையாமல்
என் கையில் தாங்கிச்  சென்றிடவே !

ஆயுள் காலம் கூட தெரியாது
அவள் பாதம் தாங்கி
என் மனதில் ஏந்திக்கொண்டேன்  !

பூமி என்ற ஒரு பொருளை மறந்தேன்
உன்னை சுமந்து செல்லும் அந்த நொடியில் !

உன்னை என்னை பிரிக்க
காற்று சதி செய்யுமோ என
பற்றி பிடித்து  படிகள் தாண்டினேன் !
வாழ்க்கை என்னும் வாசலிலாவது
உன்னை கரைசேர்க்க !

நீ பேசிய வார்த்தைகள்
என்னுடைய வலிகளுக்கு
மருந்தாக மாறியது!

மலராக உன்னை மனதில் சூடிக்கொண்டேன்
மரணித்தாலும் மனதை விட்டு அகலாது உன் நினைவு !



SINGLE சிங்கக்குட்டி ஜெகதீஷ்

காதலின் காதலி

  • Guest
அழகிய பொற்கொலுசு
என் அன்பரின் சிறந்த காதல் பரிசு
வானவில் தோரணம் கட்டி வாழ்த்துமடல் தெரிவித்த 
மாலை வேளையில்
மழைநீர் பன்னீர் தெளிக்க
சந்தனமாக மன்வாசனை மணமணக்க
கார்மேகம் இடியாக  மத்தளம் கொட்ட
மயிலின் நடனக்கச்சேரி அரங்கேற
மின்னல்கள் படம் பிடிக்க
என்னவன் என் பாதம் பற்றி
கொலுசு அணிவித்த அத்தருணம் அழகு
அவ்வேளை அவன் வதனத்தில் தோன்றிய நாணம் அழகினும் அழகு
விவாகத்திற்க்கு ஒத்திகை கண்டாயோடி என்று
என் மனம் என்னை கேலி செய்ய
புதிதாய் பூற்ற ரோஜாமலராக கண்ணம் சிவந்தேன்
பகலும் இரவும் இடைவிடாது கொலுசு என்காலுரச 
அவன்பாற்கொண்ட காதல் என்   உள்ளமுரசியது
என் கால்கள் செல்லும் வழியெல்லாம் பின்தொடர்வேனென்றவன் 
நித்தமும் என்னுடனே பயணித்தான் கொலுசாக !



-காதலின் காதலி

Offline ShaLu


என்னவளின் வருகையை
எதிரொலிக்கும் கொலுசே!
உன்னை போல அவளிடத்தில்
ஒட்டி உறவாட துடிக்கிறேன் .

என்ன தவம் செய்துவிட்டாய் நீ
என்னவளின் கால்களில்
எழில்மிகு அணிகலனாய் அலங்கரிக்க!!!
என்மனம் கிறங்கித்தான்போனது
என்னவளின்  கால்கொலுசில்

என்னவளின் பாதங்களை
என்கையில் ஏந்துகையில்
எண்ணிலடங்கா பரவசம் கொண்டேன்.
என்னவளின் அழகுக்கு முன்
ரம்பை என்ன ஊர்வசி என்ன
எட்டித்தான் நிற்கவேண்டும்.

எட்டி எட்டி நடக்கையில்
தட்டி தட்டி இதயத்தை எழுப்பியது
என்னவளின் கொலுசொலி.
இசைக்கலைஞர்களின் கீதத்தை விட
இனிமையானதாய் உணர்கிறேன்!

சற்றே பொறாமைகொள்ள செய்கிறது
என்னைவிட எப்பொழுதும்
என்னவளின் பாதங்களை
முத்தமிட்டுக் கொண்டிருப்பதால்..


என்னவளே ,
இனி ஒரு ஜென்மம் இருப்பின்
கொலுசாக அவதரிக்க  வேண்டுகிறேன்
உன்கால்களில் எந்நேரமும் குடியிருக்க !!!


Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
என் அவளின் கொலுசொலி.

உறசிச்செல்லும்,  பூங்காற்றினை உணரும் நேரமெல்லாம்,
பூக்கள் அது புத்துயிர் பெரும்.

புன்னகைக்கும்! என் இளநெஞ்சமும் ,
நாணத்துடன் சிணுங்கும்  அவளின்
கொலுசொலி கேட்டு....

அவளின் கொலுசொலிதனை  அனைவரும் 
இரைச்சலாய் என்னிய பொழுதும்,
என்னில் அதனை இசையின் இருப்பிடமாய் உணர்ந்தேன்.

இயற்கையின்  இயல்பு தனில்.

நீரோடைகளும் இசைபாடும்,
நீரோட்டங்களின் சலசலப்பின் போது.

பூங்காற்றும் புன்னகைக்கும்,
பூக்கள் அதனை உரசிச்சென்ற நொடி முதலே...


கருங்குயிலில் அது  கவிபாடும்,
கார்முகில் அதை கண்டிருப்பின்.

இயற்கையின் இன்னிசைகள், 
பலநூறு  இருப்பினும்,

என்றும் என் மனத்தோட்டத்தில்
அவளின் கொலுசொலியின் சிணுங்கல்
அதுவே என் துயிலிற்கு துணையான தாலாட்டு....

அவளுடனே பயணிக்கும் எந்தன்  சேவகி,
அவளின் பாத கொலுசு, அவளின் மௌனத்தின் போதும்
அவளிடத்திலான காதலின் கவிதை அது,
பாத கொலுசின் மெல்லிய  சிணுங்கல் .... MNA....