Author Topic: இன்றைய ராசிபலன் 11.01.2019  (Read 2568 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
இன்றைய ராசிபலன் 11.01.2019
« on: January 11, 2019, 01:11:51 PM »
இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெடு நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் செழிக்கும்.  உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.         




ரிஷபம்

ரிஷபம்:  தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் கூடுதல்  லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.



மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத் தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். 



கடகம்

கடகம்:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது  நல்லது. பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுமைத் தேவைப்படும்  நாள்.



சிம்மம்

சிம்மம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது  வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.       



கன்னி

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில்  அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். அமோகமான நாள்.


துலாம்

துலாம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோ கத்தில் மதிக்கப்படு வீர்கள். புதுமை படைக்கும் நாள்.



விருச்சிகம்

விருச்சிகம்:  சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள்.  உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். உழைப் பால் உயரும் நாள்.   



தனுசு

தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத் தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோ கத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள். 


மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உடல் நலம் சீராகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்களை மாற்று வீர்கள். வியாபாரத்தில்  எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மனநிறைவு கிட்டும் நாள்.



கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள  வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலை யையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். 



மீனம்

மீனம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும்.வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.  வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால