FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: ஸ்ருதி on November 18, 2012, 06:35:44 PM

Title: Kadal (கடல் )
Post by: ஸ்ருதி on November 18, 2012, 06:35:44 PM
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

சரணம்-1

பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு

காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?

சரணம்-2

ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?