Author Topic: Life is like drawing without an eraser  (Read 2309 times)

Offline Anu

Life is like drawing without an eraser
« on: May 14, 2012, 09:58:04 AM »
பென்சில் : ஸாரி
ரப்பர் : ஸாரி எதுக்கு? நீ ஒன்றும் தப்பி ஏதும் பண்ணவில்லையே?
பென்சில் ; இல்லை. நான் எப்பல்லாம் தப்பு பண்ணிகிறேனோ அப்பவெல்லாம் நீ வந்து அழித்து விடுகிறாய். எனது தவறை எல்லாம் மறைய செய்யும் போது நீயும் சிறிதுசிறிதாக கரைய தொடங்குகிறாய். என்னால் நீ காயப்படுவதினால்தான் நான் ஸாரி சொல்லுகிறேன்.
ரப்பர் : அது உண்மைதான். ஆனால் அது பற்றி எனக்கு கவலையில்லை. நான் பிறந்ததே அதற்குதான். நீ எப்போது எல்லாம் தவறு செய்கிறாயோ அப்போது எல்லாம் உனக்கு உதவுவதற்க்காகத்தான் நான் பிறந்தேன். எனக்கு தெரியும் ஒரு நாள் நான் தேந்தே அழிந்து போய்விடுவேன். நீயும் எனக்கு மாற்றாக புதிய ஓன்றை கொண்டு வந்துவிடுவாய்.  எனக்கு என் கடமையை செய்வதில் சந்தோஷமே அதனால் கவலைப்படுவதை நிறுத்தி கொள். நீ கவலைப்படுவதை பார்க்கும் போது எனக்கு மிக கஷ்டமாக இருக்கிறது என்று சொன்னது.





என்னங்க நான் என்ன பென்சில் ரப்பர் கதையையா உங்ககிட்ட சொன்னேனு நினைச்சா அது தப்புங்க. நான் சொன்னது உறவின் கதைங்க. ரப்பர்தாங்க பெற்றோர்கள் பென்சில்கள் எல்லாம் குழந்தைங்க...

பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து ,அவர்கள் செய்யும் தவறுகளை சரி செய்து திருத்தி வாழ்கையை பிரகாசிக்க செய்து பிரகாசம் குறைந்து போய்விடுகிறார்கள். ஆனால் குழந்தைகள் புதிய வாழ்க்கை துணையை கைபிடித்து வாழ்க்கையை தொடருகின்றனர். அதை கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள் பெற்றோர்கள், அவர்களுக்கு வேண்டியது எல்லாம் பிள்ளைகள் வாழ்வு நலமுடன் இருப்பதுதான்.