Author Topic: ~ நெல் சாகுபடி தொடங்கப்பட்ட வரலாறு !!! ~  (Read 2882 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218362
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நெல் சாகுபடி தொடங்கப்பட்ட வரலாறு !!!



உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இருவகை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.

ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின.

இந்தியாவில் அவ்வையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில் , விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும்.

ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 - 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 - 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன.

ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது .

ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது. 1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள்,மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்னாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.