Author Topic: எல்லா தருணங்களும் நல்ல தருணங்களே...  (Read 591 times)

Offline Guest

துயரங்களை தூக்கி வீசிவிடுகிறது
அப்பழுக்கற்ற அன்பு...
.
சதா சஞ்சலங்களால்
சலனமற்றுப்போகும் இதயத்தை
மறக்கடித்து புத்துயிரூட்டுகின்றன
பேசவைத்துவிடும் நட்பின் தருணங்கள்..
.
ஒரு அழைப்பில்
உயிர் மூச்சு அன்பில் ஒன்றிவிடுகிறது...
.
இறுக்கமான இதயங்களில்லாதபோது
யாரும் தூரமாய் இல்லை..
.
இதயங்கள் நெருக்கமாய் இருக்கும்வரை
எதுவும் பாரமில்லை..
.
வார்த்தைகளால் தொடுக்கப்படும்
அன்புச்சீண்டல்களில் ஒரு
நீண்ட பந்தம் இருக்கக்கூடும்

ஒப்பீடுகள் எப்போதேனும்
நம்மை தோல்வியுறச்செய்யுமானால்
புரிதலில் பிழை இருக்கக்கூடும்
.
பரிவின் பாஷை
கண்ணீரென்பேன் நான்
பிரிவின் பாஷையும் கண்ணீரேதான்
.
விழிகள் வெறுமனே வழிதல்
வலிகளின் ஆற்றாமை,,
.
ஒரு புன்னகை போதும்
ஒரு கோடி வழிகள் பிறக்கும்
.
கோபத்தின் விளிம்பைத்தொடும்முன்
கடந்துபோனதொரு மகிழ்ச்சியின்
தருணத்தை நினைத்துவிடல்
அகக்கண்களினூடே ஆனந்தத்தை
விதைக்கச்செய்யும்....
.
எல்லா தருணங்களும்
நல்ல தருணங்களே...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ