Author Topic: புதியவகை உணவுகள்  (Read 3122 times)

Offline kanmani

புதியவகை உணவுகள்
« on: July 13, 2011, 11:08:48 PM »
ப்ரெட் அடை
தேவையானவை

பிரெட் துண்டுகள் - 10
இட்லி அரிசி - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


செய்முறை

•இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி கொள்ளவும்.
•அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரெட் சேர்த்து அரைக்கவும்.
•இதில் உப்பு சேர்த்துக் கலந்து, அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
•தோசைக்கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
« Last Edit: July 13, 2011, 11:35:19 PM by kanmani »

Offline kanmani

Re: புதியவகை உணவுகள்
« Reply #1 on: July 13, 2011, 11:44:37 PM »

 
சேமியா தோசை
தேவையானவை

சேமியா - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
மோர் - 2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
காரட், முட்டைகோஸ், குடை மிளகாய், பாலக் - 1 கப் (எல்லாம் சேர்த்து பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் + மிளகு தூள் - 1/4 tsp
இஞ்சி - ஒரு அங்குல துண்டு (துருவியது)
சீரகம் - 1 tsp
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - ஒரு பிடி


செய்முறை

•சேமியா மற்றும் மாவை மோரு மாவிற்கு தேவையான உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
•எண்ணெய் காய்ந்ததும் சீரகம் போட்டு பொரியவிட்டு, கருவேப்பிலை பெருங்காயம் சேர்க்கவும்.
•பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
•வெங்காயம் சிறிது வதங்கியதும் எல்லா காயையும் சேர்த்து வதக்கவும்.
•மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி காய் வெந்ததும் மாவில் கொட்டி கலக்கவும்.
•தோசையாக வார்த்தெடுக்கவும்.
•எல்லா வகையான சட்னியும் இதற்க்கு பொருந்தும். வெறும் வெண்ணை வைத்துக் கூட சாப்பிடலாம்.


Note:
மோர் இல்லையென்றால் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளலாம். இந்த தோசையை கரைத்தவுடனே தோசையாக வார்தேடுக்கலாம்.



Offline kanmani

Re: புதியவகை உணவுகள்
« Reply #2 on: July 19, 2011, 04:44:36 PM »
சிக்கன் தோசை

தேவையான பொருட்கள்:


கோழிக்கறி - 200 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டி விழுது - 2 டீ ஸ்பூன்
காரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீ­ர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.
* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.
* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.
« Last Edit: July 19, 2011, 04:51:39 PM by kanmani »

Offline kanmani

Re: புதியவகை உணவுகள்
« Reply #3 on: July 19, 2011, 07:15:29 PM »
ஃப்ளோட்டிங் பொட்டட்டோதேவையான பொருட்கள்:-[/color]உருளைக்கிழங்கு (மீடியம் சைஸ்) - அரை கிலோ.[/color]
பச்சைப் பட்டாணி - 200 கிராம்உப்பு - தேவைக்கேற்பமைதா - 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் - பொரித்து எடுக்க.

கிரேவி செய்ய:-
தக்காளி - அரை கிலோஉப்பு - தேவைக்கேற்ப,காரப்பொடி - 1 டீஸ்பூன்சர்க்கரை - 1 சிட்டிகை.


மசாலா தயாரிக்க:-

வெங்காயம் - 3பச்சைமிளகாய் - 3இஞ்சி - 1 துண்டுகொத்தமல்லி - சிறிது
[/b][/color]

செய்முறை:-
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும், தக்காளிப் பழத்தைச் சூடான நீரில் போட்டு, தோலை உரித்து, மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்திருக்கவும்.உருளைக்கிழங்கை உப்பு போட்டு, பதமாக உடைந்துவிடாமல் வேகவிடவும், வெந்தவுடன் தோல் நீக்கவும், பட்டாணியை சிறிது உப்புப் போட்டு வேகவைக்கவும்.மைதாவை சிறிது நீர் சேர்த்து, பேஸ்ட்போல் ஆக்கவும். பிறகு உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அதன் நடுவே உள்பக்கப் பகுதியை ஒரு ஸ்பூனால் தோண்டி, கிண்ணம் போல செய்துகொள்ளவும்.பின், துளை செய்த இடத்தில் வேகவைத்த பட்டாணியைக் கொஞ்சம் வைத்து அடைக்கவும். இரண்டு பாகங்களையும் கொஞ்சம் மைதா பேஸ்ட்டை எடுத்துத் தடவிப் பொருத்திவிடவும். அதேபோல், எல்லாக் கிழங்குகளையும் அடைத்து எடுத்துக் கொள்ளவும். ஸ்டஃப் செய்த கிழங்குகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.அரைத்து எடுத்த மசாலாவை, மிதமான தீயில் வதக்கவும், இதில் தக்காளி விழுதை சேர்க்கவும். அத்துடன் உப்பு, காரப்பொடி, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.இதில் பொரித்தெடுத்த உருளைக்கிழங்குகளைச் சேர்க்கவும். பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இது ஒரு சத்தான சைட் டிஷ். சப்பாத்தி, பூரி, பரோட்டாவுக்கு ஏற்றது.
[/b][/color]