Author Topic: இனிப்பு வகை  (Read 13208 times)

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
இனிப்பு வகை
« on: July 13, 2011, 04:49:32 PM »
பால்கோவா / திரட்டுப் பால்

தேவையான பொருள்கள்:

கெட்டியான பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 4, 5
பச்சைக் கற்பூரம்.


செய்முறை:

காலையில் கறந்த பாலை மாலையில், அல்லது மாலையில் கறந்த பாலை மறுநாள் காலையோ (பாக்கெட் பாலை அப்படியே உபயோகிக்கலாம்.) செய்யலாம். கெட்டியான பாலை அடி கனமான வாணலியில் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் காய்ச்ச ஆரம்பிக்கவும்.
காய்ந்ததும் பொங்கி வழிய விடாமல், அடிப் பிடிக்காமல், நிதானமான தீயில் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் இறுகி வற்ற ஆரம்பிக்கும்போது அடுப்பை சிம்’மில் வைத்து, அடிப்பிடிக்காமல் விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
நன்கு வற்றியதும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரையும் கரைந்து சேரும்வரை கிளறவும்.
சிறிதளவு மட்டுமே ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* பாக்கெட் பாலாக இல்லாமல் கறந்த பாலாக இருந்தாலே மிகவும் ருசியாக இருக்கும்.

* கொஞ்சம் மேலே சொன்னபடி பழைய பாலாக இருந்தால் கிளறும்போது தானாகவே திரிதிரியாக வரும். புதிய பாலாக இருந்து, திரியாவிட்டால் சில சொட்டுகள் தயிர்விட்டால் சற்று திரிந்த மாதிரி வரும்.

* நல்ல க்ரீம் உள்ள பாலில் செய்தால், கிளறியதும் தானே நெய்யை கக்கும். அப்படி இல்லாமல் கையால் எடுத்துப் பார்த்து, கொஞ்சம் ஒட்டினால், மேலும் 2 அல்லது 3 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும்.

* அடிப்பிடிக்காமலோ அதிகம் பொங்காமலோ இருக்க ஒரு நாணயத்தை அல்லது கோலிக் குண்டைப் போடலாம் என்று சொல்கிறார்கள். நான் போடவில்லை. நான்-ஸ்டிக்கில் செய்தேன்.

* பால்கோவா இறக்கும்போது சற்று தளர்வாக இருப்பது போல் பார்த்து இறக்கினால், ஆறியதும் இன்னும் இறுகி சரியான பதத்தில் இருக்கும். இறக்கும்போதே சரியான பதத்தில் இருந்தால், ஆறியதும் மிகவும் கெட்டியாகி உதிர ஆரம்பித்துவிடும். புகைப்படத்தில் இருப்பது இப்பொழுதுதான்அரை மணி நேரம் முன்னால், இறக்கியதும் எடுத்தது. [இந்த கோவாவை மட்டும் வைத்துக் கொண்டே இன்னும் சில இனிப்பு வகைகள் செய்யலாம். அவை அப்புறம்...]

* பொதுவாகவே இந்த மாதிரி பாலில் செய்யும் இனிப்புகளை சீக்கிரம் தீர்த்துவிடுவது அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பது நல்லது.

* சர்க்கரைக்குப் பதில் வெல்லம் போட்டுக் கிளறலாம். திரட்டுப் பால் என்று பெயர். உண்மையில் இதுவே ஸ்ரீவில்லிபுத்தூரில் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. எங்கள் வீட்டுத் திருமணங்களில் அதிகம் உபயோகிப்பார்கள். எவ்வளவு வெல்லம் என்று முதலிலேயே சரியாகச் சொல்ல வரவில்லை. பால் இறுகியதும் விழுது எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வெல்லாம் போட்டால் சரியாக இருக்கும் என்று அங்கே சொன்னார்கள். இருக்கிறது.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #1 on: July 13, 2011, 04:51:39 PM »
பருப்பு போளி

மைதா - 2 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - அரை கப்
நெய் - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 1 கப்
துறுவிய தே‌ங்கா‌ய் - 1 க‌ப்
துளா‌க்‌கிய வெல்லம் - 1 1/4 கப்
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

செ‌ய்யு‌ம் முறை

மைதா மாவுட‌ன் மஞ்சள் தூள், உப்பு சே‌ர்‌த்து கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி‌க்கு மாவு ‌பிசைவது போ‌ல் ‌பிசை‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

மாவு ‌பிசையு‌ம் போதே அதனுட‌ன் நல்லெண்ணெய் சேர்த்து ‌பிசை‌ந்து அரை ம‌ணி நேர‌ம் மூடி வை‌க்கவு‌ம்.

கடலை‌ப் பரு‌ப்பை ந‌‌ன்கு வேக வை‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வேகவை‌த்த கடலை‌ப் பரு‌ப்பு, துரு‌விய தே‌ங்கா‌ய், வெ‌ல்ல‌ம், ஏல‌க்கா‌ய் சே‌ர்‌த்து‌ ‌மி‌க்‌‌ஸி‌யி‌ல் போ‌ட்டு அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக ‌விட‌க் கூடாது. கெ‌‌ட்டியாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌ப்போது ச‌ப்பா‌த்‌தி மாவை ‌‌சி‌றிய அள‌வி‌ல் ‌திர‌ட்டி அத‌ன் ‌மீது பூரண‌த்தை ஒரு உரு‌ண்டை ‌பிடி‌த்து வை‌க்கவு‌ம். ‌பி‌ன்ன‌ர் ச‌ப்பா‌த்‌தி மாவோடு சே‌ர்‌த்து ‌மீ‌ண்டு‌ம் அதனை உரு‌ண்டையாக மா‌ற்றவு‌ம்.


webdunia photo   WD
த‌ற்போது பூ‌ரி‌க் க‌ல்‌லி‌ன் ‌மீது எ‌ண்ணெ‌ய் தட‌வி இ‌ந்த உரு‌‌ண்டையை ச‌ப்பா‌த்‌தி போல ‌திர‌ட்டவு‌ம்.

அதனை தோசை‌க் க‌ல்‌லி‌ல் போ‌ட்டு சு‌ற்‌றி நெ‌ய் ‌வி‌ட்டு ‌பொ‌ன்‌னிறமாக வரு‌ம் வரை வேக ‌வி‌ட்டு எடு‌க்கவு‌ம்.

சுட‌ச் சுட பரு‌ப்பு‌ப் போ‌ளி‌த் தயா‌ர். உடனே‌ப் ப‌ரிமாறு‌‌ங்க‌ள். பாரா‌ட்டு‌க்களை‌ப் பெறு‌ங்க‌ள்.


கு‌றி‌ப்புக‌ள் : சு‌ட்ட‌ப் போ‌ளி‌களை ஒ‌ன்ற‌ன் ‌மீது ஒ‌ன்றாக வை‌க்க வே‌ண்டா‌ம். அகலமான த‌ட்டி‌ல் வை‌த்து ஆற ‌விடவு‌ம். ‌ அரைத்த கடலை மாவு தளர்த்தியாக இருந்தால் வெறும் வாணலியில் போட்டு கிளறி சிறிது கெட்டிப்பட்டதும் இறக்கவும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #2 on: July 13, 2011, 04:53:47 PM »
கோதுமைப் பாயாசம்

சம்பா கோதுமை ரவை முக்கால் ஆழாக்கு
நாட்டுச் சர்க்கரை முக்கால் ஆழாக்கு
பால் - 500 மில்லி லிட்டர்
முந்திரி - தேவையான அளவு
நெய் - சிறிதளவு
ஏலக்காய் - பத்து
கேசரிப் பவுடர் - சிறிதளவு
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து நெய்விட்டு நன்கு காய்ந்ததும் முந்திரியை ஒடித்து வறுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் கோதுமை ரவையை போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு ஆழாக்கு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் ரவையைக் கொட்டி கிளறிவிடவும்.

ரவை நன்கு கலந்ததும் பாலை ஊற்றி இரண்டு கொதி வந்தபிறகு சர்க்கரையைப் போட்டு பதினைந்து நிமிடம் கொதிக்க விடவும்.

பாயாசம் தண்ணீராக இருந்தால் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவைக் கரைத்துவிட்டு இரண்டு கொதி வந்ததும்,

கற்பூரம் பொடித்துப் போட்டு, அதன்பின்னர் கேசரி பவுடரைக் கரைத்து ஊற்றவும்.

பின்னர் ஏலக்காயை உரித்துப் பொடி செய்து போட்டு, முந்திரியைச் சேர்த்து இறக்கவும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #3 on: July 13, 2011, 04:54:57 PM »
ஆப்பிள் ஐஸிங் கேக்

தேவையான பொருட்கள்:

1/2 கிலோ ஆப்பிள்
500 கிராம் மைதா
375 கிராம் வெண்ணெய்
200 கிராம் ஐஸிங் சர்க்கரை
50 கிராம் மில்க் மெய்ட்
50 மிலி பால்
100 கிராம் சர்க்கரை
5 கிராம் பட்டைத்தூள்
100 கிராம் பிரெட் தூள்

செய்முறை:

வெண்ணெய், சர்க்கரை, மில்க்மெய்ட், பால் அனைத்தையும் கலந்து இதனுடன் மைதாமாவு சேர்த்து வைக்கவும்.

ஆப்பிள் தோல் நீக்கி பொடியாக நறுக்கி அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். ஆப்பிள் சாஃப்டாகிவிடும்.

பிரெட் தூள் சேர்த்து பிசையவும். அந்தக் கலவையை அரை செமீ தடிமனாகும் வரை உருட்டவும்.

வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி இந்த மாவை வைத்து அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும்.

இதன் மேல் 10 ‌கிராம் மில்க் மெய்டை பரவலாக சேர்த்து, 180 டிகிரி சென்டிகிரேடில் 25 நிமிடத்துக்கு பேக் செய்யவும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #4 on: July 13, 2011, 04:55:53 PM »
பொரிவிளாங்காய் உருண்டை

தேவையானவை:

கடலைப் பருப்பு - ஆழாக்கு
பயற்றம் பருப்பு - ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - கால் ஆழாக்கு
சம்பா கோதுமை - ஆழாக்கு
அரிசி - முக்கால் ஆழாக்கு
தேங்காய் மூடி - ஒன்று
சுக்கு - சிறு துண்டு
ஏலக்காய் - பதினைந்து
நெய் - ஒரு கரண்டி
வெல்லம் (தூள் செய்தது) - ஐந்து ஆழாக்கு

செய்முறை:

தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு ஏலக்காயை உரித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து பருப்புகள், கோதுமை, அரிசி, தேங்காய்த் துண்டுகள் எல்லாவற்றையும் வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

சுக்கை லேசாக சுட்டுப் பொடி செய்தும், ஏலக்காயையும் பொடி செய்தும் சேர்க்கவும்.

தூள் செய்த வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சூடாக்கி இளம் பாகு பதத்தில் வந்ததும், மாவைக் கொட்டி கம்பால் கிளறி விடவும்.

நன்கு கலந்ததும், கை பொறுக்கும் சூட்டில் கையளவு மாவை எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இதில் வறுத்த வறுகடலைப் பருப்பும், முந்திரிப் பருப்பும் கூட போட்டுப் பிடிக்கலாம். மேலும் சுவையாக இருக்கும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #5 on: July 13, 2011, 04:57:04 PM »
இ‌னி‌ப்பு அப்பம்

தேவையான‌வை:

புழுங்கல் அரிசி - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - இர‌ண்டேகா‌ல் கப்
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கலரிசியைக் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வை‌த்து ந‌ன்றாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கி கரைந்தபின் வடிக‌ட்டி நன்றாக ஆறிய பிறகு கோதுமை மாவுடன் கலக்கவும்.

இதை அரைத்த புழுங்கலரிசி மாவுடன் சேர்த்து பதமாகக் கரைக்கவும்.
(பஜ்ஜி மாவு பக்குவத்திற்கு)

ஒரு சிறிய வாணலியில் 2 அங்குலத்திற்கு நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சிறிய நெல்லிக்காயளவு புளியைப் போட்டு கருத்ததும் எடுத்துவிடவும். (இப்படி செய்வதால் எண்ணெய் பொங்காமல் இருக்கும்)

ஒரு சிறிய கரண்டியால் மாவை எடுத்து சூடான எண்ணெயில் விடவும். ண்ணெயில் மாவு ஊற்றியதும் முதலில் அடியில் தங்கி, மேலே மிதந்து வரும்.

திருப்பி விட்டு வெந்ததும் எடுத்து எண்ணெய் வடிவதற்காக ஒரு வலை தட்டில் வைக்கவும். (மெத்தென்று இருக்கும் போதே எடுக்கவும். அதிகம் கரகரப்பாக விட வேண்டாம்)

ஒரு பேப்பரின் மேல் வைத்து அதிக எண்ணெய் உறிஞ்சப்பட்டதும் ஒரு அகலத்தட்டில் பரவலாக வைக்கவும்.

நன்றாக ஆறியதும் டப்பாவில் எடுத்து வைக்கலாம் (சூடாக இருக்கும்போது டப்பாவில் அடுக்கினால் ஒட்டிக் கொள்ளும்). இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #6 on: July 13, 2011, 04:58:06 PM »
வாழைப்பழ பாயாசம்

தேவையானவை:

பழுத்த மலை வாழைப்பழம் - 4
சர்க்கரை - 100 கிராம்
முற்றிய தேங்காய் - 1
ஏலக்காய் - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
பேரிச்சம் பழம் - 6

செய்முறை:

வாழைப்பழங்களின் தோலை உரித்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

முந்திரிப் பருப்பு, பேரிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

தேங்காயைத் துருவி அரைத்து, அதில் சிறிதளவு நீர் விட்டு பால் எடுத்துக்கொண்டு அதில் சர்க்கரை போட்டு கலந்து வைக்கவும்.

ஏலக்காய் பொடியை தேங்காயப் பாலில் போட்டு கலக்கி, அதன்பின்னர் வாழைப்பழம், முந்திரி, பேரிச்சம் பழம் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்தக் கலவையை சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் எடுத்து பரிமாறவும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #7 on: July 13, 2011, 04:59:01 PM »
மக்காச்சோள பர்ஃபி

தேவையானவை:

மக்காச்சோளம் (பச்சை) - 2 கப்
பால் - 8 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 12 மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு துண்டுகள்

செய்முறை:

நெய்யை வாணலியில் ஊற்றி சூடேறியதும் மக்காச்சோளத்தைப் போட்டு வறுத்து எடுக்கவும்.

பாலில் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் 4 கப்பாக சுண்டும் வரை வைக்கவும்.

பின்னர் அந்தப் பாலில் மக்காச்சோளத்தைச் சேர்த்து அரைக்கவும். பிறகு முந்திரிப் பருப்பு, கசகசாவையும் சேர்க்கவும்.

அதன்பிறகு தொடர்ந்து கிளறவும். தகுந்த பதம் வந்ததும் ஒரு நெய் பூசிய தட்டில் கொட்டி சமமாகப் பரப்பவும்.

சுத்தமான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கத்தியால் விருப்பமான அளவுகளில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

சத்தான மக்காச்சோள பர்ஃபி தயார். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #8 on: July 13, 2011, 05:00:12 PM »
பூசணி மிட்டாய்

தேவையானவை:

பூசணிக்காய் - 2 கிலோ
சர்க்கரை - 2 கிலோ
படிகாரம் - 40 கிராம்
ரோஸ் வாட்டர் - 2 தேக்கரண்டி

செய்முறை:

பூசணிக்காயை நீளமானத் துண்டுகளாக வெட்டி உள்ளிருக்கும் விதை நாறை அகற்றவும்.

பின்னர் தோல் சீவி சாப்பிடப் போதுமான அளவு மிட்டாய் வடிவத் துண்களாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதில் படிகாரத்தை தூளாக்கி போடவும்.

பின்னர் அதில் பூசணித் துண்டுகளைப் போட்டு அடுப்பிலேற்றி வேக வைக்கவும்.

வெந்த பின்னர் பூசணித் துண்டுகளை தண்ணீர் விட்டு நன்கு கழுவவும்.

அதன்பின்னர் சர்க்கரைப் பாகு காய்ச்சி அதில் கழுவிய பூசணித் துண்டுகளைப் போடவும்.

பின்னர் மீண்டும் அடுப்பில் வைத்து பாகு கெட்டியானதும் இறக்கி ரோஸ் வாட்டர் தெளிக்கவும்.

அவ்வளவுதான், குழந்தைகளுக்குப் பிடித்த சுவையான பூசணி மிட்டாய் தயார்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #9 on: July 13, 2011, 05:01:52 PM »
கோதுமை அதிரசம்

தேவையானப் பொருட்கள்:

கோதுமை மாவு - 4 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - 2 கப்
தண்ணிர் - 1 கப்
நெய் - போதுமான அளவு
கிஸ்மிஸ் - விருப்பத்திற்கு ஏற்ப

செய்முறை:

சர்க்கரை அல்லது வெல்லத்தூளுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும்.

காய்ச்சிய பாகை கோதுமை மாவில் சேர்த்து நன்கு பிசையவும். கிஸ்மிஸ் போதுமான அளவு சேர்க்கவும்.

பிசைந்த மாவை உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய்யை விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்னர் உருண்டைகளை தட்டையாகத் தட்டி நெய்யில் போட்டு புரட்டி புரட்டி நன்கு வேக வைக்கவும்.

வித்தியாசமான கோதுமை அதிரசம் தயார்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #10 on: July 13, 2011, 05:03:11 PM »
கோதுமை லட்டு


தேவையானப் பொருட்கள்:

கோதுமை மாவு - 4 கப்
நெய் - ஒன்றரை கப்
வெல்லம் தூள் செய்தது - இரண்டரை கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
கசகசா - 4 மேசைக்கரண்டி
பொரிப்பதற்குத் நெய் போதுமான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் நெய் சேர்த்து நன்கு பிசையவும். பிசைவதற்கு நெய்யுடன் போதுமான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை உருண்டைகாளகப் பிடிக்கவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து உருண்டைகளை பொன்னிறத்தில் வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த உருண்டைகளை கிரைண்டரில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும்.

வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி, அதில் அரைத்த மாவு, மற்றப் பொருட்களைப் போட்டு நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.

அவ்வளவுதான் சத்தான கோதுமை லட்டு தயார்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #11 on: July 13, 2011, 05:04:10 PM »
இ‌னி‌ப்பு பப்ஸ்

தேவையானவை

மைதா மாவு - 150 கிராம்
தேங்காய் (துருவியது) - 1 கப்
சர்க்கரை - 50 கிராம்
ஏலக்காய் - 6
நெய் (அல்லது) டால்டா - 2 டேபிள் ஸ்பூன்

செ‌ய்யு‌ம் முறை

மைதாமா‌வி‌ல் ‌சி‌றிது நெய்விட்டு த‌ண்‌ணீ‌ர் சே‌ர்‌த்து சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைய வேண்டும்.

சிறிய உருண்டைகளாகச் செய்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவிச் சர்க்கரையும் ஏலக்காயும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உருண்டைகளாகச் சப்பாத்தி இடுவது போல் வட்டமாக இட்டுக் கொண்டு நடுவில் இனிப்பை வைத்து பப்ஸ் செய்யும் அச்சால் வடிவம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நெய்யைக் காய வைத்து ஒவ்வொன்றாகப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

பிறகு அடுக்கி வைக்கும்பொழுது ஒவ்வொன்றின் மேலும் வண்ணத் தேங்காய்ப் பூவைத் தூவி வைத்தால் அழகாக இருக்கும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #12 on: July 13, 2011, 05:05:06 PM »
அவல் லட்டு

தேவையானப் பொருட்கள்:

அவல் - 1 கப்
பொட்டுக் கடலை - 1 கப்
முந்திரி - 6
திராட்சை - 2
ஏலப்பொடி
பால் சிறிதளவு
நெய் - 4 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
சர்க்கரை தேவைக்கேற்ப

செய்முறை:

அவல், பொட்டுக் கடலையை தனித்தனியே ஒரு வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

சர்க்கரையையும் பொடி செய்து கொள்ள வேண்டும்.

வாணலியில் சிறிது நெய்விட்டு, முந்திரி, தேங்காய்த் துருவல், திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் இவை அனைத்தையும் போட்டு ஏலப்பொடியை சேர்த்து, பால், நெய் விட்டு நன்கு கிளறி லட்டுகளாகப் பிடிக்கவும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #13 on: July 13, 2011, 05:06:07 PM »
கடலைப் பருப்பு சுழியம்

தேவையானப் பொருட்கள்:

கடலைப் பருப்பு - 1/4 கிலோ
தேங்காய் துறுவல் - 1 கப்
வெல்லம் சுவைக்கேற்ப
மைதா மாவு தேவைக் கேற்ப
ஏலப்பொடி
உப்பு

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை நீர் ஊற்றி பதமாக வேக வைக்கவும்.

பிறகு நீரை கடிகட்டி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும்.

பின்னர் அதில் தேங்காய் துறுவல், வெல்லம், ஏலப்பொடி, உப்பு முதலியவற்றை போட்டு கையால் கலக்கவும்.

அதன்பின்னர் இக்கவலவையை ஒரு வாணலியில் இட்டு சூடுபடுத்த வேண்டும்.

கலவை கெட்டியாக வரும்போது இறக்கி சிறு சிறு உருண்டடைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் மைதாவை தண்ணீர் விட்டு கரைத்து, அதில் பிடித்து வைத்துள்ள கடலைப்பருப்புக் கலவை உருண்டைகளை பஜ்ஜி போடுவது போல் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: இனிப்பு வகை
« Reply #14 on: July 13, 2011, 05:07:40 PM »
ரவை பணியாரம்

தேவையானவை:

ரவை - 1 ஆழாக்கு (வறுத்தது)
சர்க்கரை - 1 ஆழாக்கு
மைதா - 1 ஆழாக்கு
ஏலப்பொடி
உப்பு
சமையல் சோடா 1 சிட்டிகை
முந்திரி பொடி செய்தது

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தோசை மாவு பதம் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

பின்னர் 3 மணி முதல் 4 மணி வரை நன்றாக ஊறவைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிய கரண்டியில் கலவையை எடுத்துப் பொரிக்கவும்.