Author Topic: 'பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...  (Read 2483 times)

Offline kanmani

USB என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். Universal Serial Bus என்பதின் குறுக்கமே USB ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.
pen-drive useful tips
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட்டா? என கேட்கிறீர்களா?
ஆம்.. பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகாமல் பாதுகாக்கலாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும். சாதாரண கோப்புகள் என்றால் பரவாயில்லை. முக்கியமான மதிப்புமிக்க கோப்புகளாக இருப்பின் பாதுகாப்பு அவசியம்தானே..?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப் பார்ப்போம்.

அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity

இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

    மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளுங்கள்.
    பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும் Autorun.inf  ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
    அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புகளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்கள் பென்டிரைவை திறந்து பயன்படுத்தலாம்.

ரல் வழி பாஸ்வேர்ட் அமைக்க
தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் பென்டிரைவைப் பற்றிப் பார்த்துவிடுவோம். அமெரிக்க டாலர்களில் 50$ பெறுமானமுள்ள இந்த பென்டிரைவானது நம்முடைய குரலைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் அமைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பத்தின் அடுத்தபடி ஆகும். கீழ்க்கண்ட வீடியோவில் இந்த பென்டிரைவைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் எப்படி அமைப்பது என தெளிவாக விளக்கியுள்ளனர்.

பிளாப்பி(Floppy) கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தில் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb கள். இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ.. அந்தளவுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவைதான். பயந்துவிடாதீர்கள். இதற்கு கொஞ்சம் நன்றி உணர்வு அதிகம். அதாவது யாரிடமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொள்ளும். உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் அற்புதமான ஒரு செயலைச் செய்துவிடும். இவற்றைத் தடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.

Offline kanmani

2இன்றைய இடுகையில் பென்டிரைவ் வைரஸ் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாகிறது அல்லவா? இதற்கு தீர்வு தரும் ஒரு சில மென்பொருள் இருக்கின்றன. அவைகளைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்பு ஒரு சில பென்டிரைவ்களை Format செய்ய முயலும்போது அவற்றை பார்மேட் செய்ய முடியாது. பார்மேட் செய்யவியலாத பென்டிரைவ்களை பார்மேட் செய்யும் ஒரு எளிய வழிமுறையைப் பார்ப்போம். எல்லோருக்கும் தெரிந்த வழிமுறை பென்டிரைவ் device icon மீது ரைட் கிளிக் செய்து Format என்பதை கிளி32
0க் செய்வது. இவ்வாறான வழியில் பார்மட் செய்ய முடியவில்லை எனில் ்கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

பென்டிரைவ் பார்மட் செய்ய(Easy way to Format  pen drive)

    உங்கள் கணினியில் Start==>Run==>கிளிக் செய்யுங்கள்.
    தோன்றும் விண்டோவில் cmd எனத் தட்டச்சிட்டு command prompt விண்டோவை திறக்கச் செய்யுங்கள்.
    prompt விண்டோவில் format/x G: என தட்டச்சிடவும். இதில் G என்பது உங்கள் பென்டிரைவைக் குறிக்கும் எழுத்தாகும். உங்கள் பென்டிரைவ்வை குறிக்கும் எழுத்து எதுவோ அதை குறிப்பிடவும். இப்போது இயக்கத்திற்கு தயார் Ready என தகவல் காட்டும்.
    இப்போது Enter கொடுங்கள்.
    இப்போது பங்கீடு நடக்கும். மீண்டும் Enter கொடுங்கள்.
    அவ்வளவுதான்..இப்போது உங்கள் பென்டிரைவ் பார்மேட் செய்யப்பட்டுவிடும்.


மற்றொரு முறையும் இருக்கிறது. இதற்கு ஒரு சிறிய மென்பொருளை தரவிறக்கிப் பயன்படுத்த வேண்டும். மென்பொருளின் பெயர் unlocker என்பதாகும். இந்த மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு mycomputer திறந்து அதில் உங்கள் பென்டிரைவ் incon(G:) மீது ரைட் கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Unlocker என்பது தோன்றும். இதை கிளிக் செய்து லாக் செய்யப்பட்ட கோப்புகளை அழித்துவிடலாம். பிறகு உங்கள் பென்டிரைவை எளிதாக பார்மட் செய்து விடலாம். 


Unlocker தரவிறக்க சுட்டி: DOWNLOAD UNLOCKER LATEST VERSION

USB Gaurdian என்ற இந்த மென்பொருள் பயப்படுத்த எளிமையானது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் பென்டிரைவில் கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இம்மென்பொருளின் மூலம் முக்கியமான கோப்புகளை பூட்டி(lock) வைத்துகொள்ளும் வசதியும் உள்ளது.


மென்பொருளை DOWNLOAD செய்ய

Panda USB Vaccination Tool - பாண்டா யு.எஸ்.பி. வேக்சினேஷன் என்ற இம்மென்பொருள் பாண்டா நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இம்மென்பொருளை கணினியில் நிறுவினால் பென்டிரைவினில் இருக்கிற autorun.inf என்ற கோப்பை இயங்காதவாறு தடை செய்கிறது. இதனால் கணனியில் பென்டிரைவை இணைக்கும்போது தானாக இயங்கும் வசதி தடைசெய்யப்படுகிறது. இதன் மூலம் கணினியில் வைரஸ் பரவுவது தடுக்கப்படுகிறது.



மென்பொருளை DOWNLOAD செய்ய

USB Write Protector என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தியும் பென்டிரைவை பாதுகாக்க முடியும். இதில் உங்கள் பென்டிரைவில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே முடியும். மற்றவர்களால் பென்டிரைவில் இருக்கும் கோப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதாவது கோப்புகளை எடிட் செய்யவோ, திருத்தம் செய்யவோ முடியாது.


இம்மென்பொருளை Download செய்ய:

USB Firewall என்ற இம்மென்பொருள் பயன்படுத்துவதன் மூலம் பென்டிரைவிலிருந்து வைரஸ் கணினிக்கு பரவுவது தடுக்கப்படுகிறது.

இமென்பொருளை டவுன்லோட் செய்ய..

Autorun Virus Remover 3.1 என்ற இம்மென்பொருள் பென்டிரைவ் மூலம் வைரஸ் வருவதை தடுக்கிறது. உங்கள் பென்டிரைவை கணினியில் இணைத்தவுடனேயே இம்மென்பொருள் தானாகவே அதை Scan செய்கிறது. autorun.inf virus, trojans, மற்றும் worms போன்ற தீங்கிழைக்கும் நச்சுநிரல்கள் இருந்தால் உடனே அவற்றை நீக்கிவிடுகிறது.