FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on May 18, 2020, 09:17:04 PM

Title: நான் காணும் கனவு
Post by: thamilan on May 18, 2020, 09:17:04 PM
பேனாவை ஆயுதமாக
பிரகடனப்படுத்தியவனே
உன் கவிதைகள்
காகிதங்களில் கசங்கவில்லை
ஆயுதங்களாக அணிவகுத்தன

பாரதியே
உன்னைப்போல எனக்கும்
பல கனவுகள் இருக்கின்றன

எல்லைகளில்
முள்வேலியை பிடிங்கி எரிந்து விட்டு
ஆப்பிள் மரங்கள் நடவேண்டும்
என்பதும் எனது ஒரு கனவு

காஸ்மீரில்
நிறத்தில் கூட சிவப்பு வேண்டாம்
வெள்ளை ரோஜாக்களை மட்டும்
விளைவிக்க வேண்டும் என்பது
எனது மற்றொரு கனவு

துப்பாக்கிகளை தூர எறிந்துவிட்டு
பேராயுதத்தை புதைத்து வைத்தால்
மனிதம் முழிக்கும் என்பது
இன்னொரு கனவு

நதிகளை இணைத்து
மாநில கேடுகளை அழித்தால்
பாலைவனத்தில் பயிர் செய்யலாம் என்பது
நெடுநாள் கனவு

செவ்வாய் கிரகத்தைப் பற்றி
சிந்திப்பவர் எல்லாம்
இந்தியாவின் வளர்ச்சி பார்த்து
வியர்ப்பில் விழி உயர்த்தும்
காலம் வரும் என்றொரு
காலம் காலமாக
நான் காணும் கனவு