Author Topic: அவன் !  (Read 827 times)

Offline ஆதிரை

  • Newbie
  • *
  • Posts: 2
  • Total likes: 5
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அவன் !
« on: October 24, 2019, 09:36:41 PM »

அவன் !
நான் பிறந்த போது வரம் வழங்க வந்தான் !

என் வாழ்வில் எப்போதும்
உடன் நீ இருக்க வேண்டும்  என்றேன் !
அது போதும் எனக்கு என்றேன் !
 
அனைத்தும் உனக்கு கிடைக்கும் ...
ஒன்றை தவிர என்றான் !
பரவாயில்லை என்றேன் !அப்போது மகிழ்ச்சியுடன் !

நான் பிறந்த போது என் விதியை அமைத்தான் !
தவழ்ந்த போது தாவி பிடித்தான் !
நின்ற போது சக்தியை கொடுத்தான் !
உண்ண உணவு கொடுத்தான் !
உடுக்க ஆடை தந்தான் !
வசிக்க உறைவிடம்  அமைத்தான் !
அன்பான பெற்றோராய் அமர்த்தினான் !
கற்க கல்வி கொடுத்தான் !
கலைகள் பழக ஞானம் வழங்கினான் !
ஊர் மெச்சும் புகழ் தந்தான் !
உற்றார் மெச்சும் அழகு தந்தான் !
தன்னை அறியும்  அறிவை தந்தான் !
பழகும் பண்பு தந்தான் !
பார்க்கும் விழிகளில் கலை தந்தான் !
வாழ்க்கை மாற்றம் தந்தான் !
ஏற்றம் இறக்கம் தந்தான் !
கோடிகளில் புரள வைத்தான் !
தெருக்கோடியில் நின்றிடவும் வைத்தான் !
 
அனைத்தும் அவன் வழங்கினான் !
ஒன்றை தவிர !
மகிழ்ச்சி வரம் !
மகிழ்ச்சி வரம் கிடையாது என்பதை
அன்று அவன் சொல்லவில்லை !

இன்று நான் உணர்ந்து கொண்டேன் !
ஆனாலும் அவன் இருக்கின்றான் !
என்றும் என்னுடன் !
அது போதும் எனக்கு !

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: அவன் !
« Reply #1 on: October 28, 2019, 08:30:37 PM »
உறவே, உலகில் படைக்க பட்ட ஒவ்வொரு உயிரும் சோதனைக்காகவே படைக்க பட்டிருக்கின்றன,
இதில் நாமும் சோதனைக்கு உள்ளாக்க பாடுவதில் எந்த ஆச்சார்யமும் இல்லை.
படைக்க பட்ட ஒவ்வொரு உயிருக்கும் உறவாய் இருப்பவன் படைத்தவனே...