Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 245  (Read 2195 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 245
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline SweeTie

இதயத்தில்  குடிகொண்ட தேவதையே  .. நீ
என்னை விட்டு சென்றாயோ   
காலமெல்லாம்  என்னோடு சேர்ந்திருப்பேன் என்றவளே   
இன்று காற்றோடு  காற்றாகி  மறைந்தாயோ   
உருவமாய்    என் உயிரோடு  என்றும் இணைந்தவளே
இன்று  சட்டத்தினுள்  ஓவியமாயானாயோ 

கண்களை இறுக மூடி  துயில்கொள்ள முனைகின்றேன்
விடாமல்  என் விழிமடலில்  நிற்கின்றாய்
உண்ணும்  கவழங்கள்  கீழ்நோக்கி போகவில்லை
உருக்குலைந்த   என் தேகம்   உருமாறிப் போய்விடுமா
பலித்திடுமா உன் சாபம்    பதறுகிறேன்
துடிக்கின்றேன்   உன்னுடனே வந்துவிட...

 வற்றிய  நதியிலே   இரைதேடும்   பறவைபோல் 
வாடி  நான்  சோர்கையிலே     வந்து குதித்தவள் நீ
என்னை  பற்றியே  சுற்றியே  படர்ந்தவளும்  நீதானே
 உராயும் என்  காதல்  கணைகளை    அள்ளியே  அணைத்து
இன்பத்தின்  உச்சியில்   இறுக்கி  அனைத்தவேளை 
என்னையே   நான்  மறந்த நாட்களவை

அன்பே... சகியே....அன்பையும்  அள்ளித் தெளித்து
ஆறுதலும்   சொல்லும்  என் அழகு  சொரூபினி  நீ
காதலும்    கண்டேன்  ஊடலும்  கொண்டேன்   
சாதலே   வந்தபோதும்     சகியே நீ போதுமென்றேன் 
ஆயிரம்  அழகியர்   அடுக்கடுக்காய்  வந்தபோதும்
கண்ணே  உனை  நிரப்ப   பாரினில்   யாருமில்லை 

நிழல் படத்தில்  நீ இருக்க  நின் நிழலாய் நானிருக்க
நினைவுகளைத் தாங்கி  நான் நிர்க்கதியாய் தவிக்க
நம்மவர்  செய்வினையா?  இல்லை  முன்னவர் ஊழ்வினையா?
நித்தமும்  நீர்த்திவலை   சிந்துகின்றேன்    உன் பிரிவால்
நர்த்தகியே    நீ வேண்டும்  நான் வாழ 
எனைக்  கூட்டிச் சென்றுவிடு. 
 

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
என் இதயத்தில் வாழும்
கனவு தேவதையே...
நான் தினம் தினம்
வலை வீசி தேடும்
என் ஆசை நாயகியே...
உருவம் , பேர் ,ஊர்
கூட தெரியாதவளே
உன்னை உருவமைக்கும்
உரிமையை எனக்கு
கொடுத்தவளே...

நான் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது
என் விலா எலும்பிலிருந்து
எனக்கு துணைவியாக
உருவாக்கப் பட்டவளே...
உன்னைப் படைத்தவரின்
பாதம் பணிந்து
என்னை தரை மட்டிலுமாய் தாழ்த்தி
அவர் பரிசுத்த நாமத்தை
உயர்த்த வைத்த
என் சாரோனின் ரோஜாவே...
என் இருதயத்திற்கு ஏற்றவளே...

நீ எப்படிப்பட்டவளாய்
இருக்க வேண்டும் என்று
என் வாலிப பருவத்திலிருந்தே
கற்பனை உலகத்தில் எழுதி...
வரைந்தும் வைத்திருக்கிறேன்
என் அழகிய சித்திரை பெண்ணே...

இன்று உன் வருகைக்காக
வழி மேல் விழி வைத்துக்
காத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை நினைத்த
நாட்களை விட
உன்னை தேடி
அலைந்து திரிந்த
வருடங்களே
அதிகமாக உருண்டோடியது

வயது முதிர்ந்தவனாக
இருந்த தருணத்தில்
முகம் தெரியாதவளாக...
அறிமுகமே இல்லாதவளாக...
இதயம்.... இதயம்... மட்டும்
பேசும் இணையத்தளத்தில்
இணைந்தவளே...
நினைத்து கூட பார்க்கவில்லை
உன்னை இங்கு சந்திப்பேன்னென்று

நான் நினைத்ததற்கும்
மேலாக வந்தவளே...
என்ன அழகு...
எத்தனை அழகு...
முத்து முத்தாய்
நீ பேசிய வரிகள்
என் இதயத்தில் நதியாய்
பாய்ந்து ஓடுகிறது

உன்னோடு பேசிய நாட்களை
தோரணையாக பின்னி
உன் இதயத்தின்
மொத்த அழகையும்
முத்தமிட்டு ரசிக்க வைத்தவளே...
முதல் முறையாக தொலைபேசியில்
நீ பேசிய
உன் அழகிய குரல்லோசையில்
விழ வைத்தவளே...
முகமே காட்டாமல்
முகம் மூடி போட்டு
கண்ணாமூச்சி ஆடியவளே...
மீண்டும் மீண்டும்
ஓயாமல் உன்னிடம்
பேச வைத்தவளே...

நான் தவமின்றி கிடைத்த வரமே...
காதலர் தினத்தில் பிறந்த
என் காதல் ரோஜாவாய்
என் இதயத்தில் பூத்தவளே...
உன் அழகிய கண்களால்
பேசும் வார்த்தைகளுக்கு
அர்த்தம் கண்டுபிடித்த நேரத்தில்
நீ கொடுத்த முகவரியை
இன்று தொலைத்து விட்டு
தேடுகிறேன் 
என்னவளே...

என் காதலியே...
காதல் தந்த வலியே...
என் காதலின் பொக்கிஷ சாலையில்
நீ நடந்த பாதச் சுவடை
தேடி அலைகிறேன்
என் சித்திரத்தில்
சித்திரையாக வந்தவளே...
உண்மையான காதலை
புரிய வைத்தவளே...
உன் முகத்தை
என் இதயத்தில்
ஆழமாக பதித்தவளே...
என்னை அதிகம் நேசித்தவளே...
என்னுயிரில் கலந்தவளே...
நீ இல்லாத ஒரு வாழ்க்கையை
என்னால் நினைத்துக் கூட
பார்க்க முடியாது என்றாலும்
நம்மை பிரித்து வைத்து
வேடிக்கை பார்க்கிறது
இந்த உலகம்

நான் பார்த்துப் பார்த்து
செதுக்கி வைத்த
என் அழகிய சிலையே...
என் காதல் கதையை
கவிதையாக பின்னி
உனக்காகவே
நீ பார்க்க வேண்டும்
என்பதற்காகவவே
எழுதுகின்றேன்
வருவாயா....
என் உயிர் பிரிந்து
என்னுடல்
மண்ணுக்கு போவதற்குள்
அதுவரை
என் இதயத்தில் வரைந்த
உன் உருவத்தை
என்னுடைய சித்திரை பெண்ணாக
அதற்கு உயிர் கொடுத்து
நீ வரும் வரை
அனைத்துக் கொண்டிருப்பேன்

என்றும் அன்புடன்,

உன் இதய துடிப்பு

J❤️S❤️B
« Last Edit: October 05, 2020, 11:46:16 PM by JsB »

Offline MoGiNi

இருள் புசிக்கும்
தனிமைகளின்
இதழ்களுக்குள்
நம் தனிமை
இங்கும் அங்குமாய் ......

அகன்ற தோள்களுக்குள்
அடங்கிவிடும்
அணைப்புக்காக நானும் ..
அழுந்துகின்ற உடலின் மீது
ஆக்கிரமிப்புக்காக நீயும்
அனுதினம் ...

தனிமைகள்
ஒவ்வாமைகளாகி
ஒரு யுகம் ஆனதாய் நினைவு ..
ஒரு முத்த ஒற்றுதலில்
முடக்கிவிடும்
மோகத்தின் விசைகள்
அடங்குவதாயில்லை ..

கை விரல்களுக்குள்
கலந்துவிடும்
உன் நினைவு
ஆயுள் ரேகைக்குள்
ஒளிந்து கொள்கிறது ..

நம் ஸ்பரிசத்துக்காய்
ரோமங்களும்
ஏக்கம் கொள்வதாய்
அடிக்கடி எழுந்து சொல்கிறது ..
தூரங்கள் தொலைத்திடும்
தொலை பேசிகள்
நம்மை தொல்லை பேசிகள் என
வர்ணிப்பதாக கனவுகள் ..

ஓர் தொடுகையில்
ஓர் அணைப்பில்
ஓர் இதழ் ஒற்றுதலில்
தீர்ந்துவிடாத ஏக்கங்கள்
கொட்டிக் கிடக்கிறது ..
வழிந்து வசமிழக்கும் பொழுதெல்லாம்
வரம்பிளக்க துடிக்கும்
ஏக்கங்களுக்கு
உன் என் முத்தச் சத்தங்களே
முகவுரை ...

எங்கிருக்கிறாய்
எப்படி இருக்கிறாயென்பதான
வினாக்களை கடந்து
என்னுடன் நீ இருக்கிறாய்

உன் நினைவுகளுக்குள்
மூழ்கி தவிக்கும்
என் அந்தகாரங்கள்
உன் நிழலை புசிப்பதாக
கைகொட்டி சிரிக்கிறது

அன்று
வரைதலுக்கான
விளக்கம் யாசித்தாய்
இன்று
வாழ்தலுக்கான பதிலாக 
நான் ...
என்னோடு உன் நிழல் படம் ..

வா
ஒரு முத்த ஒற்றுதலில்
என் தனிமைக்கு
விடை கொடு அன்பே  ...
« Last Edit: October 05, 2020, 01:36:17 AM by MoGiNi »

Offline இணையத்தமிழன்

எந்தன் கனவிலே உதித்தவளே
எந்தன் மனதிலே காதலை விதைத்தாயே
எந்தன் கனவுலகின் தேவதையே
உன்னைத்தான் ஓவியமாய் படைத்தேனடி

அழகாய் பல பெண்களை பார்ப்பினும்
ஏனோ என் மனம்
உன் முகம் கண்டிட துடித்ததடி
என் கைப்பேசியையும் நாடியதடி
உந்தன் ஓவியம் கண்டிட

பிரம்மனையும் வீழ்த்திய செருக்கையும்கொண்டேனடி அன்று
உன்னை படைத்ததால் தந்த செருக்கும் உடைந்த தடி இன்று


பெண்பார்க்க வந்த தருணம்
உந்தன் மகள்
இதுதான் உங்கள் அத்தையின்
சிறுவயது புகைப்படம்
என்று காட்டியபொழுது :P :-[
                       -இணையத்தமிழன்

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline thamilan

பிரியமானவளே
நான் படிக்கச் நினைத்த   
பருவ இலக்கியம் நீ
இன்று யாரோ உன்னை படித்துக்கொண்டிருக்க
நானோ உன் ஓவியத்தையும் உன் கடிதங்களையும்
பார்த்தும் படித்தும் கொண்டுருக்கிறேன்

என் வாழ்க்கையில்
நீ கிடைக்கவில்லை
உன் ஓவியம் கிடைத்தது
அதற்கு நான் உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்

நம் காதலில்
நினைவுச் சின்னங்களாக மிஞ்சியிருப்பது
என் நினைவுகளும் உன் ஓவியமும் தான்
உன் கடிதங்கள்
வெறும்  கடிதங்கள் அல்ல
அவை யாவும் என் மனதினில் நீ
செதுக்கிய காதல் கல்வெட்டுகளேயாகும்

கடிதங்களில் நீ சிந்திய கண்ணீர் துளிகள்
இன்னும் ஈரமாகவே ஒட்டிக்கிக்கொண்டிருக்கிறது
என் இதயத்தில்
உன் எழுத்துக்களில் நான் பார்ப்பது
உன் இதயத்தை

எங்கே நீ இருந்தாலும்
என்னுடன் நீ பேசிக்கொண்டிருக்கிறாய்
இந்த ஓவியத்தின் மூலம்

காதல் என்னைக் கிழித்தது
காலம் என்னை கிழித்தது
வாழ்க்கை என்னை கிழித்தது
ஒரு நாள் மரணமும் ....   

இந்தக் கடிதங்களையும் ஓவியத்தையும்
என்றுமே  கிழிக்க மாட்டேன்
அன்பே
என்னை நானே எப்படி கிழிப்பேன்

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
இந்த
இரவின் நீட்சியில்
உன் நினைவுகளை
படரவிட்டிருக்கிறாய்...

தொலைநிலா
தொட்டுவிடலாம்....
சிறு
குழந்தையாய்
உனைநோக்கி
நேசித்த நகர்வுகள்...

நிலவென நீ
நினைவென நான்

நடுநிசியின்
நிசப்தங்களோடு
உன் இன்மையின்
வெறுமைப் பயணங்கள்   

ஒர் விலகுதலில்
விழித்து
அலறுகிறது மனம்..
நிமிட நகர்வுளில்
மணித்துளிகளை
விழுங்கி சிரிக்கிறாய்
விரக்தியை
பரிசளித்து..

தொடமுடியாத உன்னிடம்
சிறு குழந்தையாக
ஆவல் கொள்கிறேன்
நீ
அடையமுடியா
ஆசை என்பது
நான்
அறியாமலே
போயிருக்கக் கூடாதா...

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !

காதல் கதைகளின் முடிவு
என்றுமே சுபமாய் இருப்பதில்லை !
அது சுபமாய் இருந்தால் ....
சுவாரசியமாய் இருந்ததில்லை!
நம் காதலும் அப்படித்தான்! 

அன்று ஒரு நாள் ...
நீல நிற ஆகாயத்தின் கீழ் ...
வெண்பஞ்சு கூட்டத்தின் மத்தியில் ..
பெண்பஞ்சு உன்னை கண்டேன் ..!

மேகத்தின் அலைகளை ரசித்தபடி ..உன்
கூந்தல் அலைகளை கோதியபடி நீ
புன்னகைத்த நொடியில் ...
அந்த  பசுமை பள்ளத்தாக்கில் மிதந்தபடி
விழுந்தேன் காதலின்  பள்ளத்தாக்கில்...
அது மரணப்பள்ளத்தாக்கு என்று அறியாமல் ...

இன்று இன்னும் மீளவே முடியாத ...
தூக்கத்திற்கு நீ போனாலும்..
என் இரவுகளின் சுமையில் ..
ஒரு நீள்வட்டமாய் ஒளிர்கிறது உன் புன்னகை !
இனி ..
எங்கு நான் சென்றாலும் செல்வேன்
உன் புன்னகை கவசத்தில் துணிவாய்..

காதல் தான் என்ன   ஒரு பித்து ! அல்லது
என்ன ஒரு தெளிவு ...
ரெண்டுக்கும் நடுவில் அலைக்கழிக்க வைக்கிறாய் !
காலம் முழுதும் உடன் இருப்பேன் என்றுவிட்டு
இன்று நீயே காலமாகி போனாய் பெண்ணே !

நீயே நான் ஆகி ..நானே நீ ஆகி ..
எங்கும் உன் முகம் !
இந்த ஓவிய சட்டத்தில் புதைந்து
என்னை கொன்று கொண்டு இருக்கிறாய் !
ஒரு பாறையாய் இருந்தவனை ..
அடித்து புரட்டி போடும் ..
மாயநதியாய் நீ...

அவளின் நினைவு கடலுக்குள் மூழ்கி ..
நெருப்பு வளையங்களூடே பயணிக்கிறேன் நிதம்..
தகிக்கும் சூரியனை தலையில் சுமந்து!
நீர் பறவையின் கரைச்சலில்...
காற்றுக்கும் கால் முளைத்தது …

உன் உயிரை பிடித்து வைக்க திராணி இல்லை..
உன் ஓவியத்தை அணைத்து கொண்டு ...
ஓவியம் இங்கு உயிர் பெறாதா என்று ..
உறங்கும் ஊரில் ஓரமாய்…..
ஊளையிட்டு கொண்டு இருக்கிறேன் !
நிசப்தத்தை அவளின் கண்ணீர் குரல் 
தூங்க விடாமல்    கேவல் விடுகின்றன !
 
மரங்களின் சலனமற்ற   அமைதி ...
நொடி பொழுதில் புயல் காற்றின்
கொடூரத்தில் வீழ்ந்து விட...
பெரிய வெற்றி கொண்ட சிரிப்பாய்
சிரிக்கிறாய் நீ என் நிலை பார்த்து …

சிரித்து கொள்!
மரணத்தின் பிரிவில் தான் உனக்கு 
மகிழ்ச்சி என்றால்....
உன் இந்த தருணங்களுக்காக ....
நான் சிதைந்து ....
சிதறி போகவும் தயார் தான் !

« Last Edit: October 08, 2020, 03:05:28 PM by AgNi »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 856
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
வெகுதூரத்தில் இருக்கிறாய் நீ
நம்மிடையே பல்லாயிர தூர இடைவெளி..
இருப்பினும்,
நினைவுகளில் பக்கமாய் வந்து நிற்கிறாய்.
தோள் சாய்ந்து பேசிய பேச்சுகள்
தொலைப்பேசி பேச்சுக்களாய் நின்றிருக்கிறது
மலர் முகம் பார்த்து நின்றிருந்த கணங்கள்
சட்டைப்பையில் நெஞ்சோடு
சேர்ந்திருக்கும்
புகைப்படத்தின் நினைவுகளாகிப் போனது

என் வெற்றிடங்களுடன் நான் மகிழ்ந்திருக்க வாய்ப்பளித்து
பின் நீயே அந்த வெற்றிடங்களில் நிறைகிறாய்.
சில நேரங்களில் என் வெற்றிடங்களை
நீ அறிவதில்லை.
தினமும் வருடிச் சென்ற விரல்கள்
தொலைதூரமாய் இருக்குபொழுது,
மலர்க்கூட்டங்களிடையே
வருடப்படாத ஒரு மலரைப் போல
நான் வெம்மையில் உழல்கிறேன்!

எத்தனை எதிர்பாராத சந்திப்புகள்?
எத்தனை ஆதூர அணைப்புகள்?
கைகோர்த்து நடந்த ரயில்வே தண்டவாளங்கள் இன்னும் நம்மை
நினைவில் வைத்திருக்குமா? 
தொலைதூரத்தில் இருந்து
நீ சிரிப்பதை பார்த்து ரசித்து நின்றிருக்கிறேன்.
அப்பொழுதிருந்த தூரமும் இப்பொழுதிருக்கும் தூரமும் வேறு வேறு தானே?
தனிமையின் மலர்களை சுமந்தலையும்
பாலைவனப் பறவையை போல்
உன் நினைவுகள் சுமந்து திரிகிறேன்..

ஒரு எளிய சமன்பாடு போல
தூரத்தில் இருக்கிறாய்
நெருங்கி வர வர விலகி செல்கிறது
நம்மிடையேயான தூரங்கள்.
காற்றுக் குமிழிகளாய் உடைகிறது
ஒவ்வொரு நினைவுகளும்.
திரும்பிப் பார்க்கும் கணங்கள் முடிவிலியாய் நின்றிருக்கும் கனவினை ஒத்திருக்கிறது.
தூர தேசத்தின் கனவென்பது
இதுதான் என்றறிந்திருக்கவில்லை நான்..

அத்தனை கனவுகளும் ஒன்றுசேர்த்து
ஒரு மீப்பெரும் சித்திரமாய் நிற்கிறது.
சித்திரத்தின் ஒளியென உன் கண்கள் மிளிர்கிறது.
ஒரு முறை உனை அணைத்துக் கொள்கிறேன்,
முடியாமல் சற்று நீளட்டுமே இந்த கனவு!
« Last Edit: October 05, 2020, 11:10:28 PM by Ninja »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
செடியிலிருந்து
பூ பறித்து கொடுத்து
காதல்  சொன்னதாலோ
என் காதலையும்
உன் மனதிலிருந்து
பறித்து
எரிந்து விட்டாய்

தொலைந்து போனாயோ இல்லை
என் காதல் தொல்லை என
தொலை தூரம்
போனாயோ

உன் பிரிவும் கோவமும்
உன்னை வெறுக்க வைக்கவில்லை
இன்னும் கூடுதலாய்
உன்னை நேசிக்க வைக்கிறது

பசி உணர்வதை போல
உன் நினைவுகள்
உணர்த்திவிட்டு போகிறது
உன்மீதான  என் நேசத்தை

என்
நினைவுகளிலெல்லாம்
நீயே என்னை அணைத்து,
ஆர்ப்பரித்து
கொண்டிருக்கிறாய்

ஆதலால்

புதியதாய்
சேரும் உறவை விட
தொலைந்து போன
உறவின் மேலே
நினைவுகள் மொத்தமும்
நிலை கொண்டு விடுகிறது

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "