Author Topic: முத்தத்-தோடு  (Read 798 times)

Offline thamilan

முத்தத்-தோடு
« on: July 26, 2020, 09:28:15 PM »
உன் பார்வை மழையை
யாசிக்கும் நான் ஒரு
தாவரம்
உன் பார்வையில்
தினமும் நனைய
தா-வரம்!

அடடா
உன் வார்த்தைகளில் வழிவதென்ன
குறும்பா
உன் புன்னகையில்
நான் காண்கிறேன்
குறும்-பா

நம் காதலை தொடங்கவா
முத்தத்தோடு
உன் காதுகளில் சூட்டவா
முத்தத்-தோடு

நான் அழைத்தும்
திரும்பிப்பார்க்காமல் போனால்
உன் இதயம்
இரும்பாகாதா
என் வார்த்தையை
கேட்க மறுக்கும் உன் செவியென்ன
இரும்பா-காதா

உன் பார்வை வேறுபக்கம்
சாய்கிறதே
ஏனிப்படி?
நம் காதல் உயர்வதற்கு
உன் காதல் தான்
ஏணி-படி

காதலியே
என் கண்ணீர் துடைக்க
வருவாயா?
காதலில்
கண்ணீர் தான் என்
வருவாயா?   

Offline SweeTie

Re: முத்தத்-தோடு
« Reply #1 on: July 27, 2020, 06:06:39 AM »
பிரிமொழிச்சிலேடை யில்
பின்னிய  தமிழே!!
முத்துக்கள்  கோர்த்த
தித்திப்பான  கவிதை.

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: முத்தத்-தோடு
« Reply #2 on: July 27, 2020, 01:30:02 PM »
தமிழ்
என்றும் சுவை தரும்
"பழங்கள்" போல

தமிழனின்
கவிதையோ
போதை தருகிறது
பழங் "கள்" போல


வாழ்த்துக்கள் தமிழன்
« Last Edit: July 27, 2020, 02:07:59 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "