Author Topic: ~ வெந்தயக் குழம்பு ~  (Read 69 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218346
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ வெந்தயக் குழம்பு ~
« on: July 09, 2016, 09:10:24 PM »
வெந்தயக் குழம்பு



தேவையான பொருட்கள் :

புளி – எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் – 3
வெல்லம், உப்பு – சுவைக்கு
வறுத்து பொடிக்க :
வெந்தயம் – 1. மேசைக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 12
பச்சரிசி – 2 மேசைக்கரண்டி

செய்முறை :

• வெந்தயம், சிகப்பு மிளகாய், பச்சரிசி மூன்றையும் தனித்தனியே வெறும் வாணலியில் நன்கு வறுத்து ஒன்றாகப் பொடி செய்து வைக்க வேண்டும்.
• புளியை ஊற வைத்து வடிகட்டி புளிக்கரைசல் 2 டம்ளர் அளவு வரும்படி கரைத்து வைக்கவும்
• பெரிய வெங்காயத்தை மிகப்பொடியாக அரிந்து வைக்க வேண்டும்.
• இதற்கு தாளிப்பும் தேவை. இல்லை. எண்ணெயும் தேவையில்லை. மிக மிக ருசியாக இருக்கும்.
• புளிக் கரைசலுடன் உப்பு, வெல்லம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைத்த பின் பொடி செய்த பொருட்களை போட்டு žபாதி வெங்காயத்தைச் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க வைத்தாலே பளபளப்பாக வந்து கெட்டிப்படும். மீதி உள்ள வெங்காயத்தை அடுப்பை அணைத்தபின் பச்சையாகப் போட்டு இறக்க வேண்டும். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்வீர்கள்.