Author Topic: பற்றுப் போடு…​ பறக்கும் தலைவலி  (Read 1734 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

பற்றுப் போடு…​ பறக்கும் தலைவலி


வயது 55.​ ஏறக்குறைய முப்பது ஆண்டுகாலமாக தலைவலியால் அவதிப்படுகிறேன்.​ தலைவலி விட்டுவிட்டு வரும்.​ ஒரு பக்கமாக வலிக்கும்.​ தலையின் பின்புறம் சிலநேரங்களில் வலிக்கும்.​ பலமுறை தலைவலியைத் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளேன்.​ தலைக்குக் குளித்தாலும்,​​ குளிர்ந்த பானங்கள் குடித்தாலும்,​​ அதிக வெயில்,​​ மழைக்காலம் என அனைத்துத் தட்பவெப்பக் காலங்களிலும் தலைவலியால் அவதிப்படுகிறேன்.​ இதை எப்படிக் குணப்படுத்துவது?

தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.​ தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்தவுடன் அல்லது குளிர்ந்த பானங்களைக் குடித்தவுடன் தலைவலி வருவதாக இருந்தால்,​​ அது தலையைச் சார்ந்த “தர்ப்பகம்’ எனும் கபதோஷத்தின் சீற்றத்தினால் விளைந்ததாகக் கருதலாம்.​ இந்தக் கபதோஷத்தின் தாக்கம் கூடினால்,​​ தலையில் நீர்க்கோர்வை,​​ நீர் முட்டல்,​​ கண்ணீர் கசிதல்,​​ லேசான காய்ச்சல் போன்றவை தென்படும்.​ அதற்கு ரேவல் சீனிக் கிழங்கு 100 கிராம்,வேப்பம் விதை 40 கிராம்,​​ சதகுப்பை 20 கிராம்,​​ சோம்பு 20 கிராம்,​​ கருஞ்சீரகம் 20 கிராம் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து,​​ ஒன்றாக இடித்துச் சூர்ணம் செய்து,​​ சிறு கண் சல்லடையில் சலித்துக் கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

சுமார் 1-2 டீ ஸ்பூன் சூரணத்தைத் தண்ணீரில் குழப்பி இரும்பு அல்லது ஸ்டீல் கரண்டியிலிட்டு,​​ இளந்தீயில் சூடாக்கி,​​ பொறுக்கும் சூட்டில் நெற்றி,​​ நெற்றிப் பொட்டு முழுவதும் தோல் மூடும்படியான கனத்திற்குப் பற்றுப் போடவும்.​ ஒரு நாளைக்கு இரண்டு தடவை போடலாம்.​ மண்டை நீரை வற்ற வைத்துத் தலைவலியைக் குறைத்துவிடும்.

அதிக வெயில்,​​ ரத்த அழுத்தம் அதிகமிருத்தல்,​​ உடல் சூட்டினால் அதிகத் தலைவலி,​​ கடும்காய்ச்சலால் ஏற்படும் தலைவலி,​​ கிறுகிறுப்பினால் ஏற்படும் தலைவலி போன்றவை தனி பித்த தோஷத்தின் கெடுதியினால் ஏற்படுகிறது.​ அதற்கு நெல்லிக்காய் பச்சையாக இருந்தால் காய்களை நசுக்கிக் கொட்டைகளை நீக்கிவிட்டு மிளகாய் அரைக்காத அம்மியில் துவையல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.​ நெல்லிக்காய் உலர்ந்த வற்றலை ​(நெல்லிமுள்ளி),​​ நெல்லிக்காய் போல அரைத்தும் பயன்படுத்தலாம்.​ சுமார் ஒரு பெரிய நெல்லிக்கனியளவு எடுத்துக்கொண்டு,​​ அரைத்த சந்தனம் நெல்லித் துவையலில் பாதியளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.​ நெற்றியிலும்,​​ உச்சந்தலையிலும் சுமார் புளியங் கொட்டை கனம் பற்றுப் போடவும்.​ பச்சைக் கற்பூரம் சுமார் 2-3 அரிசி எடை சேர்ப்பது விசேஷம்.

வாயு தோஷத்தின் தனி ஆதிக்கத்தினால் ஏற்படும் தலைவலியில்,​​ வாசனைக் கோஷ்டம் அல்லது வெண்கோஷ்டம் சுமார் கட்டைவிரல் கனத்திற்குக் கெட்டியாக ஒரு துண்டம் எடுத்து,​​ கல்லில் வைத்துச் சிறிது தண்ணீர் விட்டரைத்து எடுத்த விழுது இரண்டு மூன்று சுண்டைக்காயளவு,​​ நெற்றிப் பொட்டுப் பக்கத்தில் பற்றுப் போடவும்.​ வாயுதோஷத்தின் தனி ஆதிக்கத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி,​​ மாற்றி மாற்றி,​​ விட்டுவிட்டு ஏற்படும் தலைவலிகளுக்குச் சிறந்த கைகண்ட மருந்து.​ இதைச் சுடவைத்தும் சுட வைக்காமலும் செüகர்யம்போல் பூசலாம்.

ஆக எந்தெந்த நிலைகளில் தோஷங்களில் சீற்றத்திற்கு ஏற்ப,​​ மேலுள்ள பூச்சு மருந்துகளை உபயோகித்து நீங்கள் குணம் பெறலாம்.​ ஆயுர்வேத மருந்துகளில் தசமூலரஸôயனம்,​​ அகஸ்திய ரஸôயனம் போன்ற சிறந்த மருந்துகளில் எது உங்களுக்கு உகந்ததோ,​​ அதை ஆயுர்வேத மருத்துவரின் கூற்றுப்படி இரவில் படுக்கப் போகும் முன்பு ​ சாப்பிடவும்.