Author Topic: முகம் பொலிவு பெற…  (Read 1681 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
முகம் பொலிவு பெற…
« on: July 26, 2011, 02:45:11 PM »
முகம் பொலிவு பெற…



*அரை டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறுடன், சிறிது பால் சேர்த்து, அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து அரைமணி நேரம் வைக்கவும். பிறகு, இதை இரவு படுப்பதற்கு முன், முகத்தில் நன்றாகப் பூசிவிடவும். காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் நீங்களே வியக்கும்படி உங்கள் முகம் பொலிவு பெறும்.

* நன்றாக பழுத்த தக்காளியில் சாறெடுத்து, முகத்தில் பூசி அரைமணி நேரம் உலரவிடவும். பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர, முகம் சிறிது சிறிதாக, நல்ல நிறத்தை அடையும். முகம் மட்டுமின்றி, கழுத்து, கை ஆகிய இடங்களிலும் தடவலாம். இவ்வாறு செய்தால், வெயிலால் ஏற்படும் கருமை குறையும்.

* வெள்ளரிக்காய் சாறெடுத்து முகத்தில் தடவி 20 நிமிடம் உலரவிட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளபளப்பு பெறும். தோலின் ஆரோக்கியத்திற்கு வெள்ளரிக்காய் மிகச் சிறந்த டானிக்.

* பாதாமை அரைத்து பால் ஏட்டுடன் சேர்த்து, சில துளிகள் பன்னீர்விட்டு முகத்தில் தடவ வேண்டும். அரைமணி நேரம் உலரவிட்டு, பின் கழுவினால், முகம் பளிச்சென்று ஆகிவிடும். இதைத்தொடர்ந்து செய்து வந்தால், முகச்சுருக்கம் என்றால் என்னவென்று கேட்பீர்கள்.

*தயிர் கூட மிகச் சிறந்த அழகு சாதனம் தான். முகத்தில் தயிரை தொடர்ந்து தடவி வர, முகம் பிரகாசமாக இருக்கும். கடலைமாவுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி அரைமணி நேரம் உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகம் பொலிவு பெறும்.

* வறண்ட சருமம் மற்றும் முகச்சுருக்கம் உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் பார்லி பவுடர், அரை ஸ்பூன் வெள்ளரி ஜூஸ், ஐந்து துளி தேன் ஆகியவற்றை கலந்து தடவினால், தோலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். தோலும் மிருதுவாகும்.

* முகம் வறட்சியாகக் காணப்படுகிறதா? பால் ஏட்டில் சில துளி எலுமிச்சம் பழச்சாறு கலந்து, முகத்தில் தடவி, உலர்ந்ததும் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்கள் செய்து வர வறட்சி மறையும்.

* பால் அல்லது வெண்ணெயை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்த்து, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின், சிறிதளவு கடலைமாவு, அரிசிமாவு, பன்னீர், ஆரஞ்சு ஜூஸ் சில துளிகள் சேர்த்து முகத்தில் தடவி அரைமணி கழித்து கழுவ முகம் பளபளக்கும்.

* பைனாப்பிள் ஜூஸ் உடன் சிறிது கிளிசரின் சேர்த்து அரை மணி நேரம் உலர விட வேண்டும். பின், முகத்தை கழுவினால் வெயில் காரணமாக முகத்தில் ஏற்படும் கருமை நீங்கும்