Author Topic: கால்களை பராமரிப்பது எப்படி?  (Read 3381 times)

Offline kanmani

கால்களை பராமரிப்பது எப்படி?

இப்போது கால்களுக்கான பாராமரிப்பையும், பெடிக்யூர் பற்றி பார்ப்போம். கால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின் ட்ரையாகறதாலதான் வருதுன்னு சொல்றாங்க. எதுவாக இருந்தாலும் இது போக்க முடியாத விஷயமில்லை. வீட்டில் செருப்பு அணிய பிடிக்காதவர்கள், அதிக எடை உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்டவேலை செய்பவர்கள் என்று எல்லாருக்குமே இது பொது சொத்தாக இருக்கிறது.

முதலில் இந்த வெடிப்புகளை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம். ரெகுலரான பெடிக்யூர் மிக அவசியம். பெடிக்யூர் ஆரம்பிக்கும் முன்பே எப்போதும் கால் நகங்களை ஷேப் செய்து விடுவது நல்லது. நம் ஊரில் பலரும் ஒட்ட வெட்டிவிடுவதுதான் வழி வழியாக செய்வது. ஆனால் காலில் நகங்கள் வளர்த்தால் அழகாக இருக்கும். காலில் நகங்கள் வளர்க்கும்போது எப்போதும் ஸ்கொயர் ஷேப்பையே கடைபிடித்தால் நன்றாக இருக்கும். என்னடா இது மெனிக்யூர், பெடிக்யூர்னு அலுத்துக்கிட்டால் இது அந்த காலத்திலிருந்து எல்லாரும் தினமுமே செஞ்சுட்டு இருந்த விஷயங்கள்னு சொன்னா ஆச்சரியமாதான் இருக்கும்.

பீர்க்கை நாறிலிருந்து, ப்யூமிஸ் ஸ்டோன் வரை பாட்டி காலங்களிலிருந்து ஸ்க்ரப் செய்யவென்றே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்த காலத்து பாத்ரூம்களில் கால்களை தேய்க்கவென்றே சின்னதாக சொர சொரப்பான கல் வைத்து கட்டியிருப்பார்கள். இந்த கல்லிற்கு பதிலாக நாம ஸ்க்ரப்பர் உபயோகிக்கிறோம். அவ்வளவே. கால்களுக்கு இப்படி ரெகுலரான ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் (அந்த காலத்தில் தேங்காய் எண்ணெய்) செய்வதன் மூலம் பித்த வெடிப்புகளை நீக்கிவிடலாம்.

முதலில் நெயில் பாலீஷை ரிமூவ் செய்து, நகங்களை வெட்டி, பைல் செய்துக் கொள்ள வேண்டும். கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால்தான் ஸ்க்ரப்பிங் செய்வது எளிது. கடினமான தோல்களை எளிதில் நீக்கலாம். அந்த காலம் போல இப்போது நம்மால அதிக நேரம் செலவழித்து, துணியெல்லாம் துவைத்துப் பிறகு குளிப்பதற்கு நேரம் இல்லை. அவசியமும் இல்லை. அதனால் கால்கள் நெடுநேரம் தண்ணீரில் ஊறுவதற்கு வாய்ப்பில்லை. இதற்கு மாற்றாகத்தான் பெடிக்யூர் என்ற பெயரில் கால்களை நெடுநேரம் சுடுதண்ணீரில் ஊறவைத்து பிறகு தேய்க்கிறார்கள். அதனால் வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய நினைப்பவர்கள், அதற்காக தலைகுளிக்கும் நாளை தேர்ந்தெடுத்தால் நல்லது. நாம் குளித்துமுடிக்கும்போது நமது கால்கள் தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். சளித் தொந்தரவு, சைனஸ் உள்ளவர்கள் ஒரு பக்கெட் சுடு தண்ணீரில் லிக்விட் சோப் ஊற்றி அதில் கால்களை ஊறவைக்கலாம்.

கால்களை தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள Foot Scrubber விற்கிறார்கள். இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ஸ்க்ரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு இதுவே சிறந்தது. மற்றவர்கள் Pumice Stone உபயோகிக்கலாம். Pedi Egg என்று உள்ளதையும் கூட ஸ்க்ரப் செய்ய உபயோகிக்கலாம். ஆனால் ஈரமான கால்களுக்கு சரிவராது.

மிகவும் கடினமாக அங்கங்கே முடிச்சு போல சிலருக்கு ஸ்கின் கடினத்தன்மையுடன் இருக்கும். இவர்கள் நான் மெனிக்யூரில் சொன்ன Corn Blade வாங்கி அதனைக் கொண்டு அந்த தோல்களை சீவிவிடலாம். பிறகு பெடிக்யூர் கிட் அல்லது நெயில் கட்டரிலேயே (கொக்கிபோன்று வளைந்திருக்கும், முனை கொஞ்சம் ஷார்ப்பாக இருக்கும்) உள்ள அட்டாச்மெண்ட் கொண்டு நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை நீக்க வேண்டும். பிறகு கால்களில் சோப் தேய்த்து, கால்தேய்க்க வென்றே பிரஷ்கள் கடைகளில் விற்கும் பிரஷினைக் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இப்போது கால்களை நன்றாக துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல் தடவுங்கள். பிறகு கால்கள் உலர்ந்ததும், கைகளுக்கு சொன்ன அதே முறையில் நெயில் பாலீஷ் போடுங்கள். அவ்வளவே பெடிக்யூர்.

கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் தேய்க்கும் அத்தனை மருந்தும் படுக்கையில் பட்டு பாழாவதோடு, கால்கள் சரியாகவும் நாளாகும். கை, கால்களின் பராமரிப்பினை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் போதும். எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்க முகம் மட்டுமல்ல, கை கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது அவசியம்.

உடைகளும் கூட கை, கால்களின் ஷேப்பினை பொருத்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். கை குண்டாக இருப்பவர்கள் ஸ்லீவ் லெஸ்ஸை தவிர்ப்பதும், கால் மிக குண்டாக அல்லது மிக ஒல்லியா இருப்பவர்கள் மினி ஸ்கர்ட்டை தவிர்ப்பதும் நல்லது. கால்களில் நிற வேறுபாடு அல்லது அதிகமான கரும்புள்ளி இருப்பவர்கள் ஸ்கர்ட் அணியும்போது ஸ்டாக்கிங் போட்டுக் கொண்டால் கால்களின் குறைபாடு தெரியாது. ஸ்டாக்கிங் பிடிக்காவிட்டால் ஸ்ப்ரே பவுண்டேஷனும் கூட உபயோகிக்கலாம். கைகளுக்கும் கூட நிற வேறுபாடு இருந்தால் ஸ்ப்ரே பவுண்டேஷன் அல்லது சாதாரண பவுண்டேஷன் உபயோகிக்கலாம். அதிக நேரம் தரையில் உட்கார நேர்ந்தால் கால் முட்டி தரையில் படாமல் துணியினை விரித்து அதில் உட்காரலாம். இதனால் நிறம் மாறாமல் இருக்கும். கைகளை மேஜையில் வைத்துக் கொண்டு நெடுநேரம் கம்ப்யூட்டர் முன்பு இருப்பது கூட கை முட்டியின் நிறத்தை பாதிக்கும். இதனைப் போக்க ஆலிவ் பட்டர் அல்லது கோக்கோ பட்டரை தினமும் தடவலாம். நல்ல பலன் இருக்கும்.

கால்கள் குட்டையாக இருப்பவர்கள் லாங்க் ஸ்கர்ட் போடலாம் அல்லது புடவை கட்டும்போது நல்ல இறக்கமாக கட்டலாம். இது கால்களின் உயரத்தை அதிகமாக்கி காட்டும். கால்களுக்கு செருப்பினை தேர்ந்தெடுக்கும்போதும் மிகுந்த கவனம் தேவை. அதிகமான உயரமுள்ள செருப்புகள் அணிய விருப்பமுள்ளவர்கள், அணியும் நேரத்தையாவது குறைந்த நேரமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பென்சில் ஹீல்ஸ் உபயோகிக்கும் முன்பு நமது கால்கள் நம் எடையை நன்கு பாலன்ஸ் செய்கிறதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல தரமான ஷூக்களையே வாங்குங்கள். செருப்புகள் அணிந்து வாக்கிங் போவதைக் காட்டிலும், ஷூ அணிவதால் பாடி பாலன்ஸ் நன்கு இருக்கும். காற்றோட்டமுள்ள ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும். ஜிம்முக்கு செல்லும் பழக்கமுள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் அங்கே குளிக்கும்போது பாத்ரூம் ஸ்லிப்பர் இல்லாமல் குளிக்காதீர்கள். அதிகமாக தொற்று நோய் பரவும் இடங்கள் இவை. இப்படி கை,கால்களை கவனித்துக் கொண்டால் அழகாக மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
nice ithu rompa usefulla erukkum kanmani engammakku ithu pere4ya tholli pai nu solluvanga eni naane try pani pakuren avankaluku... ;)