Author Topic: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)  (Read 3391 times)

Offline gab

Aadi Perukku (ஆடிப்பெருக்கு)
« on: October 28, 2012, 10:53:12 PM »
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
A.M. Raja - இசை: ஏ.எம். ராஜா
ஆண்டு: 1962



அன்னையின் அருளே வா வா வா
அன்னையின் அருளே வா வா வா
ஆடிப் பெருக்கே வா வா வா
அன்னையின் அருளே வா வா வா
பொன்னிப் புனலே வா வா வா
பொங்கும் பாலே வா வா வா

அன்னையின் அருளே வா வா வா

குடகில் ஊற்றுக் கண்ணாகி
குலத்தைக் காக்கும் பெண்ணாகி
குடகில் ஊற்றுக் கண்ணாகி
குலத்தைக் காக்கும் பெண்ணாகி
கண்ணன் பாடி அணை தாண்டி
கார்முகில் வண்ணனை வலம் வந்து

அன்னையின் அருளே வா வா வா

திருவாய் மொழியாம் நாலாயிரமும்
தேனாய்ப் பெருகும் தமிழே வா
திருவாய் மொழியாம் நாலாயிரமும்
தேனாய்ப் பெருகும் தமிழே வா
திருமால் தனக்கே மாலையாகி
திருவரங்கம் தனை வலம் வரும் தாயே

அன்னையின் அருளே வா வா வா

கட்டிக் கரும்பின் சுவையும் நீ
கம்பன் கவிதை நயமும் நீ
கட்டிக் கரும்பின் சுவையும் நீ
கம்பன் கவிதை நயமும் நீ
முத்துத் தாண்டவர் பாடலிலே
முழங்கும் பக்திப் பெருக்கும் நீ

வான் பொய்த்தாலும் தான் பொய்யா
வற்றாக் கருணை காவேரி
வான் பொய்த்தாலும் தான் பொய்யா
வற்றாக் கருணை காவேரி
வளநாடாக்கும் தாயே நீ
வாழிய வாழிய பல்லாண்டு

Offline gab

Re: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)
« Reply #1 on: October 28, 2012, 10:56:49 PM »
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
ஆண்டு: 1962



இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா?
குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே
குலமகள் நாணம் மறந்திருந்தேனே
குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே
குலமகள் நாணம் மறந்திருந்தேனே
பறவையைப் போலே பறந்திருந்தேனே
பருவத்தின் மேன்மை உணர்ந்து கொண்டேனே

இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
 இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
 இது தான் உலகமா?

உண்மையில் பொய்யும் உறைவது கண்டேன்
நன்மையில் தீமை நிறைவது கண்டேன்
உண்மையில் பொய்யும் உறைவது கண்டேன்
நன்மையில் தீமை நிறைவது கண்டேன்
உள்ள்த்தில் ஏதோ மலர்வதைக் கண்டேன்
உறவின் மேன்மை பிரிவில் கண்டேன்

இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?

Offline gab

Re: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)
« Reply #2 on: October 28, 2012, 10:58:02 PM »
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
ஆண்டு: 1962



கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் இரு
காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை முடித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்

கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் காட்டி மறைத்தார்

பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே
மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே

கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்

Offline gab

Re: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)
« Reply #3 on: October 28, 2012, 10:59:16 PM »
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
ஆண்டு: 1962


காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா? - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? - அந்தக்
கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா? - பொங்கும்
விழி நீரை அணை போடவா?
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா? - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார்

பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - ஏழை
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார் - என்ற
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா? - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் கொஞ்சு்ம்
மொழி பேசி வலைவீசுவார் - தன்னை
எளிதாக விலை பேசுவார் - என்ற
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா? - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

மணவாழ்வு மலராத மலராகுமா?
மனதாசை விளையாத பயிராகுமா?
உருவான உயர் அன்பு பறிபோகுமா?
உயிர் வாழ்வு புவி மீது சுமையாகுமா? சுமையாகுமா?

Offline gab

Re: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)
« Reply #4 on: October 28, 2012, 11:00:46 PM »
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடியவர்: பி. சுசீலா, ஏஅ.எம். ராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
ஆண்டு: 1962


மலையில் பிறவா சிறு தென்றல்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது? பெண்
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே
பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

உழுவார் விதை விதைப்பார் உச்சி வெயில் தனில் நிற்பார்
ஊர் ஊராய் சுமை சுமந்து ஓடி விலை கூறிடுவார்
எழுவார் உதிக்கு முன்னே இருட்டிய பின் வந்திடுவார்
இப்பாடு பட்டுலகில் இருப்பதன் காரணம் என்ன?

வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது
வாழ நினைப்பது பெண்ணாலே
வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது பெண்ணாலே
வானமளந்த ஞானிகளும் தன்னை மறந்தது பெண்ணாலே
தன்னை மறந்தது பெண்ணாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பூத்துக் குலுங்கி நிற்கும் பொற்கொடியே ஆனாலும்
காற்றில் வீழ்காமல் காப்பாற்றும் துணை யாரோ?
கொம்பில்லாமல் கொடி படர்ந்தா குப்பை மேட்டில் நிற்படுமே
அன்பெனும் கொடி தான் படர்வதற்கே ஆணே துணையாய் வேணுமம்மா
ஆணே துணையாய் வேணுமம்மா

ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

காசி நகர் வீதியிலே கடனுக்கு மனைவி தன்னை
பேசி விலைக்கு விற்ற பெரிய மனிதன் யாரோ?
அரிச்சந்திரன்
அடையாள மோதிரம் தான் ஆற்றில் விழுந்த உடன்
அழகு சகுந்தலையை யாரடி நீ என்றதாரோ?
துஷ்யந்தன்
காரிருளில் கானகத்தில் காதலியைக் கைவிட்டு
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
நளச் சக்கரவர்த்தி

பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பேறு பெற்றவன் ஆண்பிள்ளை

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெண்ணை நம்பிக் கெட்டவர்கள் பேர் தெரிந்தால் சொல்லட்டும்
காட்டுக்கு இராமன் போனதற்கு கைகேயி தானே காரணமாம்
இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டால் இதுவும் கேட்டிட மாட்டாளா?

மாதவியாலே கோவலனார் மதுரை சந்தியில் மாளல்லையா?
கண்ணகியாலே கோவலனார் கதையே காவியமாகல்லையா?
கதையே காவியமாகல்லையா?

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

ஏசு, காந்தி மஹான், புத்தரைப் போல்
இது வரை பெண்களில் இருந்ததுண்டோ?
ஏசு, காந்தி மகான், புத்தரையும்
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஏசு காந்தி புத்தரையும் ஈன்றது எங்கள் பெண் குலமே

Offline gab

Re: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)
« Reply #5 on: October 28, 2012, 11:04:30 PM »
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
ஆண்டு: 1962



புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது?
முடிவேது முடிவேது?
முடிந்தபின் உலகம் நமக்கேது?
முடிந்ததை நினைத்தால் பயனேது?
ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
திருமணமாகி ஒரு மனமாகும்
திருமணமாகி ஒரு மனமாகும்
பெண்மனம் தாய்மையை தினம் தேடும்

வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது?

பெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்
பிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
பெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்
பிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
வளர்ந்தவர் வாழ்வில் கொடுப்பதை மறந்தார்
வளர்ந்தவர் வாழ்வில் கொடுப்பதை மறந்தார்
ஒரு பிடி சாம்பலில் முடிவானார்

வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது?
முடிவேது முடிவேது?
முடிந்த பின் உலகம் நமக்கேது?
முடிந்ததை நினைத்தால் பயனேது?

Offline gab

Re: Aadi Perukku (ஆடிப்பெருக்கு)
« Reply #6 on: October 28, 2012, 11:06:00 PM »
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடியவர்: ஏ.எம். ராஜா, பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
ஆண்டு: 1962



தனிமையிலே தனிமையிலே
இனிமை காண முடியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா? - அதைச்
சொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா?
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா? - அதைச்
சொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா?
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா?
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா? - வெறும்
மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா? தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங்
கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங்
கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை - நாம்
காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி
படையுடனே பவனி வரும் காவலனும்
பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி
படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் - இந்த
அவனி எல்லாம் போற்றும் ஆண்டவானாயினும் தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?