Author Topic: என் உயிர் நீ  (Read 459 times)

Offline இளஞ்செழியன்

என் உயிர் நீ
« on: April 21, 2019, 03:35:55 AM »

நின்னடி படிகையில்
முழுமைகொண்டு
பெருமிதமேறி
இலகுவாகும் உயிர்
பற்றிக்கொள்ளும்
ஒரு உவகையன்றி
வேறேதும் வேண்டி நிற்பதில்லை
என் சரணடைதல்

கூடாகும் உன்னில்
கூடடையும் கொடுப்பினையை
மறத்து போதல்
மரணித்துப்போதலின
குறைந்ததுமன்றே

உயிருணரும் சுமை குறைத்திடவேண்டியேனும்
நின்னையே சரணடையட்டும்
இவ்வுயிர்...
பிழைகளோடு ஆனவன்...