Author Topic: இறைவா......  (Read 449 times)

Offline இளஞ்செழியன்

இறைவா......
« on: May 02, 2019, 03:32:54 PM »

யானைகளின் தேசத்தில் பிளிரல் சப்தம்
நிலைத்துப்போனது
சதா துப்பாக்கிகள் துப்பிய
தோட்டாக்களைத்தின்று ஒரு சமூகம் மூர்ச்சையானது..
.
யாழ் பல்கலைக்கழகத்தின்
ஸ்வரக்கம்பிகள் அறுந்துகிடக்கிறது...
யார் யாரோ அரியணைகளை
அமைதியைச்சாெல்லி ஏறினார்கள்
ஆணவத்தின் உச்சத்தைத்தொட்டபோது
ஆட்களையே அறுத்துப்பலிகொண்டார்கள்..
.
எங்கோ ஏதோ ஒரு தேசத்தில்
யாரோ ஒருவனின் மூர்க்கமான
வரலாற்றுப்பிழைக்கு
இங்கே வந்து யாதுமறியா
பிஞ்சு நெஞ்சங்களை
பிய்த்தெறிவதில் என்ன நியாயமோ
இது யாருக்காகவென்பதை
உலகமறியத்தருவாய் இறைவா..
.
அமைதியை போதிக்கும் மார்கத்தில்
அரக்கர்களுக்கென்ன தேவை இறைவா..
அமைதியான சனங்களின்மீது
அத்துமீறச்சொன்னாயா இறைவா...
.
அநியாயமாய் செய்யப்படும் ஒரு கொலை
மனிதகுல முழுமையையும் கொல்வதற்குச்சமம் என அநியாயக்காரர்களை வேதத்தால்
அடித்தாயே இறைவா...
அநியாயக்காரர்களை அழிக்காமல்
அநியாயம் எப்படி தீரும் இறைவா..
.
எதைச்சொல்லி என்ன ஆறுதல்
கூறிவிட இயலும்
வார்த்தைகளின்றி வழி தெரியாமல்
விழி பிதுங்கி நிற்கிறது என் சமூகம் இறைவா..
.சந்தேகித்து சந்தேகித்து
வாழ்ககையே சந்தேகத்தால்
சூழந்து நிற்கிறது இறைவா...
.
நட்பும் இல்லை நாடும் இல்லை
நாட்டமும் இல்லை என
அநாதைகளாக்கப்பட்ட மக்களின் முன்
அநாதைகளாய் நிற்கிறது இறைவா...
.
கண்ணெட்டும் தூரம்வரை கார்பபரேட் உலகம்
எல்லைகளில்லாத பயங்கரவாத உலகம்
இல்லாது போகிறது மனிதநேய உலகம்
யாருக்கும் யாருக்குமான
சண்டையில் களங்களும் களிகளும்
நாங்களாய் இருக்கிறோம்...
.
என்று தணியுமோ இந்த
அநியாயக்காரர்களின் இரத்த வெறி
அன்றுதான் உலகம் உன்னுடையதாகும்
என்னுடையதாகும் எங்களுடையதாகும்....
.
அநியாயக்காரர்களை
எங்களைவிட்டும் அந்நியப்படுத்திவிடு இறைவா...
அமைதியான வாழ்க்கையை
அனைவருக்கும் அளித்துவிடு இறைவா...
பிழைகளோடு ஆனவன்...

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: இறைவா......
« Reply #1 on: May 03, 2019, 11:22:52 AM »
யுத்த வடுக்கள்
மறைய முன்னே
இன்னுமோர் தாக்குதல்

என்ன பாவம் பண்ணோம்
இலங்கையில் பிறந்தது
தப்புனு தானோ என்று நினைக்க தோணுது

எங்கேயோ இழந்த இடத்துக்கு
எங்க நாட்டில இதனை உயிர் பலி
தினம் தினம் உயிர் துறக்கும்
உறவுகள்

அமைதிக்கு ஒரு இறைவன் இருத்தால்
அமைதியை அருளட்டும்

அருமை கவி நண்பா