Author Topic: காட்சிப்பிழைகள்....  (Read 515 times)

Offline Guest

காட்சிப்பிழைகள்....
« on: September 14, 2018, 03:28:05 PM »
எல்லா தினங்களையும் நோக்கி
எல்லா எதிர்ப்புகளையும் கடிந்து
அறைகூவிக்கொண்டே
அதன் எச்சங்களை நான்
உடுத்திக்கொண்டேயிருக்கிறேன்....
.
கொண்டாட்டங்களில்
சேராது செயல்கள் என்பனபோல்
என்னில் பாவித்து
அழகுபடுத்திக்கொள்கிறேன்...
.
கொள்கைகளை பாதித்திடாதுவென்ற
எண்ணங்களை வலுவிழக்காமல்
கனவிலும் நினைவிலும்
நிலைநிறுத்திக்கொண்டே
இருட்டின் நிழலில் சிரித்து மகிழ்ந்து
வெளிச்சத்தில் முகம் புதைத்தழுது கொள்கிறேன்....
.
எண்ணங்களே செயல்கள்
செயல்களே எண்ணங்களல்லவே எனும்
மனம் போன போக்கில்
முங்கி முத்தெடுக்கிறேன்....
.
காட்சிப்பிழைகள் அவர்கள் கண்களில்
எண்ணப்பிழைகள் என்னிலில்லை
என்பதெல்லாம் எழுதி வைத்து
நான் ஒரு கொள்கை திரிபு செய்து
வரலாற்றாவணமாய் விட்டுச்செல்வேன்....
.
நம்பிக்கையில் இன்னும்
நான் தோற்றுவிடாதபடிக்காய்
அவ நம்பிக்கை கொள்பவர்களை
அகலத்தில் கடாசிவிடுகிறேன்....
.
நான் கொள்கை பேசும் நேரம்
என் செயல்களின் நிழல்கள் அவ்வழியே
படியாமலிருத்தலை
கவனமாய் கொள்வேன்....
.
காட்சிப்பிழைகள் உங்கள் விழிகளில்
எண்ணப்பிழைகள் என்னில் இல்லை....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ