Author Topic: முதலும் கடைசியும்  (Read 2097 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
முதலும் கடைசியும்
« on: November 25, 2011, 05:33:13 AM »
முதலும் கடைசியும்


பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் மத்திய வர்க்கமென்றாலும் வறுமையின் கையில் கிடந்து அவதியுறும் மக்களாக இருந்தாலும் மிகவும் அல்லலுறும் சமயங்கள் மாதத்தின் கடைசிவாரமும் மாதத்தின் முதல் வாரமும்,

மாதத்தின் இறுதி வாரம் வரவுக்கு ஏற்றார் போல எப்படி செலவுகளை சமாளிப்பது என்று மண்டையை உடைத்துக்கொண்டு திட்டமிடுவதுடன் எஞ்சியுள்ள நாட்களை எப்படி சமாளிப்பது என்பது வரையில் திட்டம் வகுத்தே மண்டையிலிருக்கும் முடி உதிர்ந்துவிடும், அல்லது இருக்கும் சில முடியும் காலத்திற்கு முன்பே வெளுத்துவிடும்.

மாதத்தில் இரண்டு வாரம் இப்படியே போனால் எஞ்சியுள்ள வாரங்களில் மட்டும் என்ன வாழ்ந்துவிடப் போகிறது, இப்போதெல்லாம் கிரடிட்கார்டுகளில் பணம் கடன் வாங்குவதற்கு யாரும் தயாரில்லை அல்லது கடன் கொடுக்க ஆளில்லை என்று விட்டுவிடலாம்(?). அப்படியே கிரடிட்கார்டுகளில் பணம் வாங்கினாலும் வட்டியுடன் திருப்பி செலுத்தத் முடிந்தால் மட்டுமே அதைப்பற்றி நினைக்க வேண்டும் என்பது ஒருபுறம் அலாரம் அடிப்பது போல் நினைக்கவே 'திக்' என்று இருக்க, எப்படிதான் சமாளிப்பது என்று திக்கித்திணறும் மத்திய மற்றும் அடித்தட்டு மக்களின் நிலையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

வரவுக்கும் செலவிற்கும் சரியாக போனால் கூட பரவாயில்லை, வரவைவிட செலவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனால் எந்த வரவை வைத்து சமாளிப்பது, ஒருநாளை கழிப்பதே பெரும் சோதனையாகிப் போகும் எஞ்சியுள்ள நிலைக்குத்தள்ளப்படும் போது , கண்ணில் பட்டதையும் கைக்கு கிடைப்பதையும் சுருட்டிக்கொள்ள துணிவும் தைரியமும் தானே வந்துவிடும் போல் இருக்கிறது,

சராசரி வாழ்க்கை நடத்துவதற்கு வரவு போதாமல் போவது என்பது ஒருபுறம் இருக்க, மத்திய மற்றும் அடிதட்டிலிருப்பவர்களுக்கு மிகவும் வசதிகள் நிறைந்த வாழ்க்கையை அடைந்துவிட வேண்டும் என்ற பேராசையின் காரணமாக எப்படியாவது எந்த வழியிலாவது பணத்தை அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கம் பெருகி வருவதற்கான அடையாளமாக;

நாளுக்கு நாள் பெருகிவரும் கொள்ளை ஜேப்படி திருடர்கள், பகல் கொள்ளை, கொலை, ஆள் கடத்தல், மோசடி, சீட்டு கம்பனிகளில் மோசடி என்று யோசிக்க இயலாத அளவுக்கு உயர்ந்துகொண்டே போகும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள். போலீசினாலும் சட்டத்தினாலும் கட்டுப்படுத்த கூடிய அளவிற்கு எண்ணிக்கை இருந்துவிட்டால் பிரச்சினையில்லை, திடீர் திடீரென்று உருவாகும் புதிய திருடர்களின் திட்டங்கள் கொள்ளைகள் மோசடிகள் என்று கட்டுப்பாட்டையும் மீறி நடக்கும் பல சம்பவங்கள் நம்மை திகிலடையச் செய்கிறதென்னவோ உண்மை