51
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 390
« Last post by சாக்ரடீஸ் on December 08, 2025, 10:19:37 PM »இரவு முழுக்க தூங்க
முடியாமல் தவிக்கின்றேன்
என் கண்ணீர்
தலையணையை நனைத்து
நான் செய்த பாவத்தை
எண்ணி எண்ணி
நெஞ்சு துண்டாகிறது.
அவளோ பாவம்
எத்தனை சுமை தாங்குவாள்?
எத்தனை இன்னல்களைத் சந்திப்பாள்?
நான் அவள் ரணங்களுக்கு
மருந்தாக வந்தவன்
என்று நினைத்தேன்
ஆனால்
தீராத காயத்தை தந்து
திசை தெரியாமல் நிற்கிறேன்
என் கொடுமைகளுக்கு
அவள் திருப்பித் தந்தது
பரிசுத்தமான அன்பு மட்டுமே
எந்த ஒரு எதிர்பார்ப்பும்
இல்லாத அந்த அன்பு
என்னை இரவு முழுவதும்
உயிரோடு சுட்டெரிக்கின்றது
இரவு முழுக்க தூங்க
முடியாமல் தவிக்கின்றேன்
விழிகள் மூடினால்
அவள் கண்ணீர் கடல் அலைகள்
என்னை இழுத்துச் செல்கிறது.
ஒவ்வொரு அலையும்
என் பாவத்தை அடித்துச் செல்ல
நான் மூழ்கி மூழ்கி மீள்கிறேன்.
என்ன கைமாறு செய்வேன் நான்?
என் பாவங்கள் இப்பிறவியில் அழியாதவை
ஆகவே…
இரவு முழுக்க தூங்க
முடியாமல் தவிக்கின்றேன்
அவள் கண்ணீரில் மூழ்கி
பாவம் தொலைந்து போகும் வரை
இந்த இருளோடு போராடுவேன்.
அவள் மன்னிக்காவிட்டாலும்
அவள் அன்பு என்னை மன்னிக்கும்
அதுவே போதும்...
அதுவே போதும்...

Recent Posts

.jpg)

