81
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 392
« Last post by Vethanisha on December 24, 2025, 01:50:49 PM »ஆதி முதல் அந்தம் வரை
வெறும் புழு என்றதும்
முகம் சுளிக்கும் உலகிடம்
பிம்பமாய் எனை காட்டுவேன்
என் வாழ்வின் தொடக்கத்தில்
எனக்கான உணவை நானே தேடி
எனக்கான இடத்தை நானே தேடி
எனக்கான வலியை நானே பொறுத்து
எனக்கான விதியை நானே விதைத்து
பொறுமையை வலிமையாய் கொண்டு
உருவக்கேலியை உடைத்தெறிந்து
வெறும் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டி
வான்தொட்ட பிறையாய்
உளி கண்ட சிற்பமாய்
பருவங்கள் கடந்து
காயங்கள் பொறுத்து
விதிகள் தகர்த்து
நான் உருவாக்கிய என்னை
மெய் சிலிர்க்க பார்க்கிறேன்
கண்களில் நீரோடு!
இன்று !
நானோ பட்டாம் பூச்சி
பெயரைக் கூறும் போதே
மனதில் எத்துணை மகிழ்ச்சி
வண்ணத்துக்கு உவமையாய்
அதிசயத்திற்கு உவமையாய்
அழகிற்கு உவமையாய்
ஆசைக்கு உவமையாய்
நம்பிக்கையின் அடையாளமாய்
ஆச்சிரியத்தின் வெளிப்பாடாய்
சுதந்திரத்தின் அடையாளமாய்
மென்மையின் வெளிப்பாடாய்
இயற்கையின் அதிசயமாய்
மறுபிறப்பின் உத்தேசமாய்
ஆன்மீகத்தின் உள் உணர்வாய்
மாற்றத்தின் அதிபதியாய்
வலி பொறுத்த
வண்ணத்துப்பூச்சியாய்
சிறகடித்து பார்க்கிறேன் !
பறக்கிறேன் !
வாழும் காலம் கொஞ்சம் தான்
எனினும் நான் கற்றுக்கொடுக்கும்
வாழ்க்கை பாடமோ
அளப்பரியது - உந்தன்
ஆதி முதல் அந்தம் வரை

Recent Posts


