Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on October 10, 2025, 08:39:41 AM »
92
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on October 10, 2025, 08:39:06 AM »
93
ஆன்மீகம் - Spiritual / Re: MORNING PRAYER ✝️ 🙏
« Last post by MysteRy on October 10, 2025, 08:38:29 AM »
94

மடிகு இசைக்கு கட்டுண்டுதான் பாம்பு படம் எடுத்து ஆடுகிறதா? நம்மில் பலருக்கு மகுடி இசையை கேட்டுதான் பாம்பு படம் எடுக்கிறதா என்று சந்தேகம் இருக்கலாம். மகுடி இசை புன்னாகவராளி என்ற ராகத்தில் இருந்தாலும், இப்படி சந்தேகப்பட்டு வேறு விளக்கம் தேடுவதற்கு மற்றொரு காரணம் பாம்பிற்கு நமக்கு இருப்பதைப் போல வெளிப்படையாக இல்லை. அப்படியானால் பாம்பு எவ்வாறு மகுடி இசையைக் கேட்டு ஆடுகிறது?. அதைத்தான் பாம்புச் செவி என்பார்களோ? ஒருவேளை மகுடியை ஊதுவதால் இல்லாமல், அந்த சாக்கில் பாம்பாட்டி அப்படி இப்படி மகுடியை ஆட்டுவதை கண்ணால் பார்த்து பாம்பு ஆடுகிறதோ. ஆனால் இது பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

மேலே சொன்ன அனைத்தையும் தூக்கியடிப்பது போல பாம்பிற்கு செவி உண்டு என்கின்றனர் விஞ்ஞானிகள். அமெரிக்க பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் இரை நகர்வதை பாம்பு தன் காதால் கேட்டுதான் துரத்திப் பிடிக்கிறது என்று ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்கள். பாம்பிற்கு வெளியே தெரிகிறாற் போல காது மடல்தான் இல்லை. ஆனால் நம் உள்நாக்கு போல, அதற்கு உட்-காது உண்டாம். இந்த உட்காதுடன் பாம்பின் தாடைக்கு எலும்புத் தொடர்பே இருக்கிறதாம். பாம்பின் தாடை நுண்ணியதாக அதிர்கையில், ஸ்டேப்ஸ் என்னும் எலும்பு அதிரும், இந்த அதிர்ச்சியை அதன் மூளை கேட்கிறது. ஸ்டேப்ஸ் என்னும் எலும்பு நம் காதிலும் உண்டு. (உடம்பிலேயே மிகச் சிறிய எலும்பு) நமக்கு அது காற்றின் அழுத்த மாற்றங்களை, அதிர்வுகளை உணர்கிறது. பாம்பு நிலத்தில் ஊர்கையில் தூரத்தில் எலி ஓடினால் போதுமாம். அந்த நுண்ணிய அதிர்வுகளை கூட தாடை, உணர்ந்து, தானும் ஆடி தன்னுடன் ஸ்டேப்ஸையும் ஆட்டி எலியை மாட்டி விடுமாம். மண் தரையாக இருந்தால் இன்னமும் உத்தமம். எலி முதல் எது நகர்ந்தாலும் அது குளத்தில் கல் போட்டால் பரவுவது போல நொடிக்கு 50 மீட்டர் வேகத்தில் அதிர்வுகளை மண்ணில் பரப்பும் (இந்த வேகம் மாறுபடும், ஒப்பிட்டு கொள்ள காற்றில் ஒலி அலைகளின் வேகம் நொடிக்கு 330 மீட்டர்). அந்த அதிர்வுகளின் வீச்சு மிகவும் குறைவானது. ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பாகம். ஆனாலும் அது பாம்பிற்கு கேட்குமாம். பாம்புச் செவி என்று சரியாகத்தான் சொன்னார்கள்.

இதில் மற்றொரு பிரமிப்பு இருக்கிறது. நாம் காற்றில் ஒலி அதிர்வுகளை அரை நொடி, அரைக்கால் நொடி தாமதத்தில் ஒரு காதிலும் அடுத்த காதிலும் விழுவதை வைத்து சத்தம் வரும் திசையை உணர்ந்து திரும்பி, சரேல் என்று வரும் வாகனங்களில் மோதாமல் தப்பி விலகுவோம். மனித மிருக, பறவை இனங்கள் அனைத்தும் இப்படி செய்வதையும் பாம்பு நிலத்தில் தாடை பதித்து, மெதுவான வீச்சியிலிருந்தும் சத்தத்தின் திசையை ஊற்றை, இரையை கண்டு பிடித்துவிடுமாம். மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவுகளை பார்க்கையில், காது இருந்தாலும் ஊர்கையில் தான் பாம்பின் செவி நில அதிர்வுகளை உணர்கிறது என்று தெரிகிறது. தலையை நிலத்திலிருந்து தூக்கிவிட்டால் பாம்பிற்கு இந்த காது பயனற்று போய்விடுகிறது. அதனால் காற்றில் வரும் மகுடி இசையை அதனால் கேட்க முடியாது என்று கருதலாம். பாம்பாட்டியும் நிலத்தில் உட்கார்ந்து முதலில் காலால் தரையை தட்டி ஊறும் பாம்பின் காதில் விழுவார். சரேல் என்று நிமிர்ந்து பார்க்கையில் மகுடி ஊதி ஆட்டுவார். பாம்பு படமெடுத்து தொடரும். அது படமெடுப்பது தான் கண்ணால் கண்ட எதிரியை (மகுடியோ மூடியோ நாமோ எதுவாயினும்) தற்காப்பிற்காக பயமுறுத்தி தன்னை நெருங்க விடாமல் செய்வதற்கு. ஆகையால் கட்டுரையின் முதலில் நாம் ஊகித்த காரணம் சரிதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.
95

தேங்காய் சிவனின் மூல சக்தியாக உள்ளது. தேங்காயில் உள்ள முக்கண்களின் வழியே பஞ்சபூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்துள்ளது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

கோவில் விக்கிரகத்தின்முன் தேங்காய் உடைக்கும்போது அந்த பஞ்சபூத சக்திகள் வெளிப்பட்டு இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது. இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது. ஒரே இடத்தில் தேங்காய் சிதறுகாய் இடும்போது அங்கெல்லாம் பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும். முச்சந்தியில் சிதறுகாய் இடும்போது அங்கே துர்சக்திகள் விரட்டியடிக்கப்படுகிறது.
96

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்?

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை..

இவ்வளவு தானா...

இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது.. இதை எப்படி ஆராய்ந்தார்கள்?. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே..

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது. இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருவது பிரம்மிப்பு. அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க..
97

இறந்தவர்களை விமர்சிக்கவோ, இகழவோ கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருக்கிறது. இருந்தாலும் தன்னுடைய 93வது வயதில் இயற்கை எய்திய ராபர்ட் ஆட்லரை விமர்சனத்தின் சாயல் இல்லாமல் குறிப்பிட முடியாது.

இன்னும் சிலரோ சபித்தபடியே தான் அவரைப்பற்றி பேசுவார்கள். ஆனாலும் அந்த சபித்தல் கூட ஒருவித பாராட்டாகவே அமைவதை மறுப்பதற்கில்லை. வெறுப்பாக இல்லாமல் அவரது கண்டுபிடிப்பின் தாக்கத்தை அங்கீகரிக்கக்கூடிய சான்றிதழாகவே இத்தகைய சபித்தலையும் கருத வேண்டியிருக்கிறது.

ஆட்லரைப்பற்றி சொல்லாமல் அவரது கண்டுபிடிப்பை குறிப்பிட்டு விட்டால், இந்த பீடிகைக்கான அவசியம் உடனே புரிந்துவிடும். ஆட்லர் புகழ்பெற்ற கண்டு பிடிப்பாளர் என்று சொல்ல முடியா விட்டாலும் அவருடைய கண்டு பிடிப்பு மிகவும் புகழ் பெற்றது. நம் ஒவ்வொருவர் கையிலும் இருப்பது. வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மனதுக்குள் இருக்கும் மந்திரக் கோலாகவே நாம் நினைத்துக் கொண்டிருப்பது.

வெவ்வேறு உலகத்தில் நினைத்த மாத்திரத்தில் சஞ்சரிப் பது போல விரும்பியவுடன் சானல் விட்டு சானல் தாவ வழி செய்யும் ரிடோட் கண்ட்ரோல் தான் அந்த கண்டுபிடிப்பு. ஜெனித் எலக்ட்ரானிக் கார்ப்பரே ஷன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1956ம் ஆண்டு ஆட்லர் ரிமோட் கண்ட் ரோலை உலகுக்கு அறிமுகம் செய்து டிவி நிகழ்ச்சிகளை இஷ்டம்போல மாற்றிக்கொள்வ தற்கான வழியையும் காண்பித்து வைத்தார். பௌதீகத்தில் இளம் வயதிலேயே டாக்டர் பட்டம் பெற்ற ஆட்லர், மிகுந்த ஈடு பாட்டோடு அறிவி யல் சார்ந்த ஆய்வில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவர். அதன் பலன்தான் இந்த கண்டுபிடிப்பு.

கர்ணனோடு பிறந்த கவச குண்டலம் போல டிவியுடன் உடன் பிறந்ததாகவே ரிமோட் கண்ட்ரோல் மாறி விட்டது. ரிமோட் கண்ட்ரோல் இல்லாமல் டிவி பார்ப்பது இன்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.
சாமானியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்று ஜனநாயக பாதுகாவலர்கள் எல்லாம் வாய் கிழிய பேசுவார்கள் அல்லவா, அதனை உள்ளபடியே சாதித்துக் காட்டியது ரிமோட் கண்ட்ரோல்தான். பிடிக்காத சானலை மாற்றுவது, விளம்பரங்கள் வலை வீசும் போது தப்பித்து வேறு சேனலுக்கு ஓடுவது என உட் கார்ந்த இடத்திலிருந்தே சானல் விட்டு சானல் மாறும் சுதந் திரத்தை ரிமோட் கண்ட்ரோல் வழங்கி இருக்கிறது. இந்த சுதந்திரத்தின் காரணமாக குடும்ப உறுப்பினர்களிடையே கட்டிப்பிடித்து சண்டை போடாத குறையாக மோதல் ஏற்பட்டிருப்ப தும் ஏற்கனவே சோம்பேறிகளான நம்மை சோபாக்களிலேயே கட்டிப்போட்டிருப்பதும் இதன் பாதகமான பக்க விளைவுகளாக அமைந்து விட்டன. இடியட்பாக்ஸ் என்று இகழப்படும் டிவி முன்பாக சாய்ந்து கிடக்கும் சோம்பல் மனிதர்களான கவுச் பொட்டேட்டோ (தமிழில் சொல்வதானால், சோபா உருளைக் கிழங்கு சிந்தனையோ, செயலோ இல்லாமல் சோபாவிலேயே உரைந்து கிடக்கும் மனிதர்களுக்கு இந்த பட்டம் பொருத்தமானது தானே) மாந்தர்களை உருவாக்கி சமூகத்தை சீரழித்து விட்டதாகவும் ரிமோட் கண்ட்ரோலை பழிக்கலாம்.
அந்த காரணத்துக்காகவே அதனை கண்டுபிடித்த பிரம்மாவான ராபர்ட் ஆட்லரையும் இகழலாம். இங்கே இரண்டு ஸ்வாரசியமான விஷயங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஆட்லர் இந்த இகழ்ச்சிகளை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ரிமோட் கண்ட்ரோல் பற்றி உலகம் என்ன நினைத்தாலும் சரி ஆட்லர் அதனைப் பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் நம் கவனத்துக்கு உரியவை. ஆட்லரின் எண்ணங்களையும், ரிமோட் கண்ட்ரோல் பின்னே உள்ள சுவாரசியமான கதையையும் ரிமோட் கண்ட்ரோலை கண்டு பிடித்ததற்காக குற்ற உணர்வு வாட்டியதில்லையா என அவரிடம் கேட்கப்பட்ட நேரங்களில் அவர் சிரித்தபடி இதென்ன மடத்தனமான கேள்வி. உட்கார்ந்த இடத்திலிருந்து விரும்பிய வகையில் டிவி பார்ப்பதற்கான வழியை கண்டுபிடித்திருக்கிறேன். அதில் என்ன வருத்தம் என்று பதில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ஆட்லர், புத்தகம் படிப்பதில் பேரார்வம் கொண்ட புத்தகப்புழு. கடைசி வரை டிவி நிகழ்ச்சிகளைஅதிகம் பார்க்காத புத்தகப்பிரியராகவே அவர் இருந்ததாக ஆட்லரின் மனைவி குறிப்பிடுகிறார். இரண்டாவது விஷயம், தன்னை ஒரு பிறவி கண்டுபிடிப்பாளனாக கருதிய அவர், ரிமோட் கண்ட்ரோலை தன்னுடைய மிகச்சிறந்த படைப்பாக ஒருபோதும் கருதியதில்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கூடிய கண்டுபிடிப்புகளை உருவாக்கு வதற்கான ஆய்வில் முழு ஆர்வத் தோடு ஈடுபட்ட ஆட்லர், ரிமோட் கண்ட்ரோலை மற்றுமொரு கண்டு பிடிப்பாக பார்த்தார்.

எப்படி பார்த்தாலும், ரிமோட் கண்ட்ரோலின் வரலாறு கொஞ்சம் சுவாரசியமானது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திலிருக்கும் பொருளை இயக்கும் முறையானது, முதலில் ராணுவத்தில்தான் பயன்படுத்தப்பட்டது. உலகப்போர் காலத்தில் இத்தகைய சேவைக்கு தேவை இருந்தது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, ராணுவம் அல்லாத துறைகளி லும் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கலாயினர். 1950களில் தொலைக்காட்சியை இயக்க இந்த முறை பயன்படுமா? என முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக முதன் முதலில் உருவாக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் ஒரு சூட்கேஸ் அளவுக்கு இருந்தது என்பதை இப்போது கற்பனை செய்து பார்க்க முடியாது. அது மட்டுமல்ல, அந்த சூட்கேசுடன் தொலைக் காட்சி பெட்டிக்கு இணைக்கப் பட்டிருந்த ஒயர் மூலமே அதனை இயக்க முடிந்தது. இந்த முறையை பலர் வரவேற்றாலும், அடிக்கடி தடுக்கி விழ வேண்டியிருக்கிறது என்று குறை கூறினர். ஒயரிலிருந்து விடுவித்து ஒயர்லஸ் மூலமாக இயங்கும் பிளாஷ் மேட்டிக் என்னும் ரிமோட் கண்ட்ரோலை யூஜின் பாலி என்பவர் 1955ம் ஆண்டு கண்டுபிடித்தார். இந்த பாலி வேறு யாரும் அல்ல, ஆட்லரின் சகாதான். இவரோடு இணைந்து ரிமோட் கண்ட்ரோலை கண்டு பிடித்தவர் என்று ஆட்லர் குறிப்பிடப்படுகிறார். காரணம், இவர் உருவாக்கிய பிளாஷ்மேட்டிக் ரிமோட் கண்ட்ரோலில் இருந்த குறைகளையெல்லாம் களைந்து தற்போதைய ரிமோட் கண்ட்ரோலின் முன்வடிவத்துக்கு வித்திட்ட மாய கோலை வடிவமைத்ததுதான் ஆட்லரின் சிறப்பு. பாலியின் கண்டுபிடிப்பு போட்டோ எலக்ட்ரிக் செல்களின் அடிப்படை யில் இயங்கியது. இதன் காரணமாக சூரிய ஒளியும் அதன் செயல்பாட்டில் குறுக்கிட்டது. எனவே ரிமோட்டை இயக்க தகுந்த மாற்று வழி தேவைப்பட்டது. இந்த நிலையில் தான் ஆட்லர் பல்வேறு முறைகளை பரிசோதித்து விட்ட அல்ட்ரா சானிக் ஒலிகள் மூலம் இயங்கும் ரிமோட் கண்ட்ரோலை கண்டுபிடித்துக் கொடுத்தார்.

இந்த ரிமோட் கண்ட்ரோலில் பட்டனை அழுத்தியதுமே அதில் உள்ள சின்னஞ்சிறு சுத்தியல் முரசு அடிப்பது போல அலுமினிய முரசுகளின் மீது மோதி, ஒலிகளை உண்டாக்குகிறது. இந்த ஒலி விரைந்து சென்று டிவியில் உள்ள விசைகள் மீது பதிந்து அதனை இயக்குகிறது. அல்ட்ரா சானிக் அலைவரிசையை சேர்ந்தது என்பதால் இந்த ஒலிகள் நம் காதில் விழுவதில்லை. ஆட்லரின் ரிமோட் கண்ட்ரோலில் மற்றொரு சுவாரசியமான விஷயம். அதில் பேட்டரி கிடையாது. பின்னர் உருவான ரிமோட் கண்ட்ரோல்கள் தான் பேட்டரியால் இயங்கத் தொடங்கின.
98

'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.

`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍மையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.

எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.....

மன்னித்து மகான் ஆகுங்கள், மன நோய்களில் இருந்தும் விடுபடுங்கள்..
Pages: 1 ... 8 9 [10]