11
« Last post by MysteRy on Today at 08:26:10 AM »
12
« Last post by MysteRy on Today at 08:25:35 AM »
13
« Last post by MysteRy on Today at 08:24:58 AM »
14
« Last post by MysteRy on Today at 08:22:43 AM »

பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகங்கள், வயிறு, வாய் ஆகிய இடங்களில் உள்ள புற்றுநோய்க்கு இக்காயின் மருத்துவப்பண்புகள் சிறந்த மருந்தாக விளங்குகின்றன. இக்காயில் காணப்படும் ஐசோதியோசையனைட் பொருளானது புற்றுச்செல்களின் வளர்ச்சியினை தடைசெய்கிறது.
முள்ளங்கியில் உள்ள விட்டமின் சி, ஃபோலிக் அமிலம், ஆந்தோசையனைன் மற்றும் நச்சினை நீக்கும் பண்பு ஆகியவை புற்றுநோய் வராமலும், புற்றுநோய் உள்ள இடங்களுக்கு தீர்வாகவும் உள்ளன.
முள்ளங்கி வெண்குட்ட நோய்க்கு தீர்வாக உள்ளது. முள்ளங்கியின் விதைகள் பொடிக்கப்பட்டு வினிகர், இஞ்சி சாறு மற்றும் பசுவின் கோமியம் ஆகியவற்றில் ஊறவைக்கப்பட்டு பின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவப்படுகின்றன. வெண்குட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கியை உண்டும் நிவாரணம் பெறலாம்.
முள்ளங்கியானது சளி மற்றும் ஒவ்வாமையினால் மூக்கு, தொண்டை, காற்றுக்குழாய் மற்றும் நுரையீரல் ஆகிய இடங்களில் ஏற்படும் பாதிப்புக்களை நீக்குகிறது. இக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் சுவாச பாதையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
முள்ளங்கியில் உள்ள விட்டமின் சி, பாஸ்பரஸ், துத்தநாகம், பி விட்டமின் தொகுப்புக்கள் ஆகியவை சருமப்பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முள்ளங்கியில் உள்ள நீர்சத்தானது சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது. முள்ளங்கியின் தொற்றுநோய் தடுக்கும் பண்பானது சருமம் உலர்தல், வெடிப்பு, பிளவுகள் ஆகியவை ஏற்படாமல் சருமத்தினைப் பாதுகாக்கிறது.
முள்ளங்கியின் நமைச்சலை எதிர்க்கும் பண்பானது பூச்சி கடி மற்றும் தேனீ கொட்டு ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாகும். முள்ளங்கி சாற்றினை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வலி, வீக்கம் ஆகியவற்றை போக்கும்.
முள்ளங்கியில் உள்ள ஐசோஃப்லேவேன்கள் தைராய்டு சுரப்பில் வீக்கத்தினை உண்டாக்கும் தன்மை உடையது. எனவே இதனை தைராய்டு சுரப்பி குறைபாடுகள் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம்.
15
« Last post by MysteRy on Today at 08:20:26 AM »
16
« Last post by MysteRy on Today at 08:19:48 AM »
17
« Last post by MysteRy on Today at 08:19:09 AM »
18
« Last post by MysteRy on Today at 08:18:31 AM »
19
« Last post by MysteRy on Today at 08:17:52 AM »
20
« Last post by MysteRy on Today at 08:17:16 AM »