44
« Last post by இளஞ்செழியன் on February 12, 2021, 02:59:31 PM »
மட்டுப்படுத்திடும்
தேவைகளிராதவாறு
சுயமற்று போகிறேன்.....
எனக்கானதாகும் என்னொடியும்
இல்லாத பொழுதுகளிலும்
வாழ பழகிக்கொள்கிறேன்....
யார்க்கும் சுமையாகி
அழுத்திடாத வரம் வேண்டி
கரைந்தும் போகிறேன்......
வெளிப்படையாக யாரும்
உணர்ந்திடாதவாறு
உணர்வுகளை கட்டுப்படுத்திட முயல்கிறேன்
குறைந்தபட்சமாய் எனக்குள்ளேனும்
தலைமறைவாகிக் கொள்கிறேன்.....
என் வனங்களின் மரங்கள் வழிமறிக்கும்
உன் பாதைகளை சரிசெய்து கொள்!
உள்ளக் கிடக்கைகளுக்கேற்ப
சிறகுகளை நீட்டிடவும் சுருக்கிடவும்
சுதந்திரம் கொண்டே இரு......
கூடுடைத்து
உன் கூறுடைத்த
என் கோடுகளை
தடயங்கள் ஏதுமின்றி அழித்துக் கொள்...
என்னை குறித்த வெறுப்பு ரேகைகள்
உன் உள்ளக்கூட்டை பற்றி படரட்டும்
என பிரார்தித்துக்கொள்.....
துளி கண்ணீரும் சிந்திடாது
மௌளனமாய் .....
உனக்கான விளக்கங்கள் ஏதும்
இல்லை என்னிடம்......