Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
உழைக்கின்ற மக்கட்க்கு
உணவுக்கு வழியில்லை
பிழைப்பென்று
வந்தவர்க்கு
உவந்தளிக்க
மனதில்லை
வாழ்கின்ற போதே
மனிதம்
சாகின்றதையோ ...

ஊன் உருகி
உயிர் கருகி
உனக்கும் எனக்குமாய்
உழைத்தவர் இன்று
உயர்
குரலுக்கு அடிமையாகி
உதைக்கின்ற
வீணரிடம்
உணர்விழந்து
உயிர் துறந்து கிடக்கிறார் ..

அடக்குவது
அவர்கள் பலம்
எதிர்த்து
அழிந்து போவது
எங்கள் வரம்
படைத்திடட இறைவனே
உன் பார பட்ஷத்தில்
பலியாகி போவது
உழைக்கின்ற வர்க்கமன்றோ ...

மானிடத்தின்
பிறழ்வுதனில்
மதிப்பிழந்து கிடப்பதெங்கள்
மாமனிதம்..
சா வரினும்
எங்களினம்
சாதத்தில் கைவைக்க
வாழ்வுருகி
வருந்தி உழைத்தோர்
தோள் தடவி
துணை நிற்க
தூய உள்ளம் ஏதுமில்லை ...

அடிமைகளாய் வாழ்ந்தவர்
கையில் அதிகாரம் அமைந்துவிட்டால்
அதன் கீழ் வாழ்பவரும்
அடிமைகள் தானென்பார்..
வாழ்வதட்கே போராடடம்
எனும் பொழுது
வீழ்ந்ததட்கு
போராடி ஜெயிப்பதெங்கே ..

92
மனம்நிறை வன்மமும்
குருதியில் வெறுப்புமென   
நியாயம் பேசுவதாக
போலியானதோர் அவதாரத்தோடு  சுற்றிவருகிறார்கள் விஷம் கலந்த புன்னகைக்கு சொந்தக்காரர்கள்...

தேசபக்தர்கள் என்றும்,
நடுநிலைகள் என்றும்,
மதம் சார்ந்து யோசிக்கவே முடியாதபடி பிழைப்பிற்க்கே நேரமில்லாத பரப்பானவர் போன்றும்,
அண்டை நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களின் மீது அனுதாபம் கொண்டவர் போன்றும்...
பல முகமூடிகளுடன்
சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும்   உலா வருகின்றன
"எங்களை பார்த்து பயப்பட தேவையில்லை"
என சொல்லிக்கொண்டே குரல்வளைகளை குறிவைக்கும்
குருதி வெறிகொண்ட ஓநாய்கள்.

ஆட்சியதிகாரத்தின் சாய்வு நாற்காலிகளில் குரூர பார்வையோடு இவர்கள் ஒய்யாரமாய் சாய்ந்தாடுகையில்
துரோகத்தின் இருள் சூழ்ந்துக்கொள்கிறது எம்மை..

முன்தேதியிட்ட கொலைவாள்கள் தலைகளுக்கு மேலாக
தொங்கத் துவங்குகையில்
'வாழ்தல் எனும் பண்பு கட்டுக்கதையோ??. '
எனும் ஐயம் சூழ்ந்துக்கொள்கிறது..

விரலுயர்த்தி குரலெழுப்பி
வாழ்தலின் சத்தியக் கூறுகளுக்காய்
சமர் செய்கிறாய்..

உன் ஒற்றை விரலின் உறுதியில்
முளைத்து துளிர்க்கிறது
நம்பிக்கையெனும் விருட்சம்...
93
கதைகள் / Re: சவாலே சமாளி !!!
« Last post by SweeTie on October 19, 2020, 08:25:39 PM »

 
(தொடற்சி ........_)

  "நிம்மி  என்ன பதிலையே காணோம்"   என்றான் மோகன்
" என்னிடம்   பதில் இல்லை " என்றேன்
“அப்படி என்ன நடக்காத விஷயத்தை கேட்டுவிட்டேன், அப்படியானால்   இப்போ நேரடியாகவே   கேட்கிறேன்   என்னை திருமணம் செய்துகொள்கிறாயா" என்றான்
எனக்கு மயக்கமே வந்துவிட்டது.   
" என்னது  உங்களையா"   என்றேன்.
" ஏன்  நான் உனக்கு ஏற்றவன் இல்லையா?"
" மோகன்  நடக்கிற விஷயமாக பேசுங்கள்.  நீங்கள் வாழவேண்டியவர்."  என்றேன்.
" வாழ்வதற்காவே தான்   கேட்கிறேன்:"  என்றான். 
 
       “நிம்மி   நான் மிகவும் நன்றாக  யோசித்துதான்   இந்த முடிவுக்கு  வந்தேன்
இருவரும்  காதலர்களாக  இருந்தோம்  ஒரு காலம்.     .திருமணம் செய்ய தவறி விட்டோம். ஆனால்  இன்னும் உன் நினைவுகள் என் கூடவே .இருக்கின்றன.    வேறு  யாரையும்   கட்டிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை  மனசுக்குள்   ஒருத்தியுடன்  வாழ்ந்துகொண்டு   வெளியில்   மற்றவர்களுக்காக  வேறொருத்தியுடன்    வாழ்வதில்  எனக்கு  இஷ்டமில்லை.   அதனாலேயே நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.    உனக்கு பிடித்தால்  எனக்கு  பிடித்தவளுடன்   வாழ்ந்துவிட்டு போகிறேன்.    இல்லையென்றால்  இப்படியே  இருந்துவிட்டு போகிறேன்”    என்றான். 

           என் காதுகளையே என்னால் நம்பமுடியவில்லை .  என்  உடம்பில்   ஒரு பதற்றம்   தெரிந்தது.  பதற்றம் என்பதை விட  குற்ற உணர்வு என்றுகூட சொல்லலாம்.  இப்படியும் ஆண்கள்   இருப்பார்களா?       ஆண்களைப்பற்றிய  என் தப்பான  அபிப்பிராயம்   என்னை குத்திக்காட்டியது. 
   
        ‘ சில நேரங்களில்   மற்றவர்களை  சந்தோசப்படுத்துவதற்காக   சில தப்பான முடிவுகளை  எடுத்து  நம்மை நாமே  சீரழித்துவிடுகிறோம் .   நமது வாழ்க்கை யை  நாம்தான் வா.ழவேண்டும். மற்றவர் நம்  வாழ்க்கையை  வாழ  அனுமதித்தால்  ஆபத்து நமக்குத்தான்' எங்கோ  படித்த வரிகள் என் ஞாபகத்தில் வந்தன 
 
எங்கிருந்தோ வந்த விஜி   போனை பறித்து  பேச தொடஙிவிட்டான் 
"அங்கிள்  ஏன் நீங்க வரல  நாங்க மிஸ் பண்றோம்"
"அம்மாவிடம்தான்  கேட்கவேண்டும் "  என்றான் மோகன்
விஜியிடம்  இருந்த போனை  பறித்து  நான்  பேசலானேன்.   
"மோகன்  அவர்கள் குழந்தைகள்.  எதற்கு   அவனிடம்  இதெல்லாம் " என்றேன்.
சரி சரி   குழந்தைகளோடு  பேசி   ஒரு முடிவுக்கு வாங்க "  மோகன்  போனை வைக்கும்  சத்தம்   கேட்டது.  அவனது குரலில்  ஒரு ஏக்கம்  தெரிந்தது .


      இந்த   கைத்தொலைபேசி   ஒரு தொல்லைபேசியாகி விட்டது.  மனதுக்குள் திட்டிக்கொண்டேன் . மோகன்  கூறிய  வார்த்தைகள்  என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.  அப்படியானால் மோகன் இன்னும்  என்னை காதலிக்கிறானா?   எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஏன் எனக்கும்தான்  அவனை  மறக்க முடியவில்லையே!      இருந்தாலும்   இப்பொது   நான்  இரண்டு குழந்தைகளுக்கு   தாய்.   அத்துடன் ஒரு விதவை.    இதையெல்லாவற்றையும் தாண்டி  மோகன் என்மீது  அதே  காதலுடன்  இருக்கிறானென்றால்    ........என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.   முன்னர் இருந்த காதலைவிட   இன்னும்   பல  மடங்கு   அவன்மேல்  மதிப்பு  அதிகரித்தது.    பிள்ளைகள்  பெறுவதற்காகவே  திருமணம் செய்த  தங்கராசுவை விட    மற்றவன் பிள்ளைகளை  தனது  பிள்ளைகளாக  வளர்க்க முன் வந்த  மோகன்   பல படிகள்  உயரத்தில்  நிற்பதை   எண்ணி   என் கண்களில்   ஆனந்த கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.      கடவுள் எதிரே  வந்தது போல்  உணர்ந்தேன். 
   
  அன்று  தூங்கும்போது   குழந்தைகளிடம்  " நாம  ஒரு புதிய  அப்பா  வாங்குவோமா"  என்று கேட்டேன்
"வேணாம் வேணாம்"  என்று கத்தினார்கள்     எனக்கு   திக்   என்றாகி விட்டது
  குழந்தைகளுக்கு   பிடிக்கவில்லைபோல்  தெரிகிறது.    அப்படியானால்    எனக்கும்   வேண்டாம்.   எனக்கு அவர்கள் வாழ்க்கைதான் முக்கியம்      என்று நினைத்தேன்   .  ஆனால்  அவர்களின்   அடுத்த    கோரிக்கை  என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
" அம்மா  மோகன்   அங்கிளை  வாங்குவோமே " என்றான்  விஜி. எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
" எங்களுக்கு  அவரதான் பிடிச்சிருக்கு:  என்றார்கள்.
மோகன்  என் பிள்ளைகள் மனதில்  குடியேறிவிட்டான்  என்பதை நினைக்கும்போது எனக்கு சந்தோசம் இரட்டிப்பாகியது.   விடிந்ததும் மோகனுக்கு  ஒரு அதிர்ச்சி கொடுக்கவேண்டும் .  அன்று சுகமான தூக்கம் தழுவிக்கொண்டது.

        காலை 7 மணி வரை காத்திருந்து   என் சம்மதத்தை தெரிவிக்க   போன் செய்தேன்,   போன்   "சுவிட்ச்  ஆப்"  இல்  இருந்தது.    பலமுறைகள் போன் செய்தேன்   முடியவில்லை.     எனக்கு  ஓவென்று   அழவேண்டும் போல் இருந்தது.     மோகனின்  வீட்டை  நோக்கி  ஓடினேன்.   வீட்டின் வெளி வாயிலில்    பூட்டு போடப்பட்டிருந்தது.    கடவுளே   இது என்ன சோதனை . 
பக்கத்து வீட்டில் விசாரித்தபோது     காலையில் அவன்  வீட்டை  பூட்டிவிட்டு   ஊருக்கு போவதாக   ரயில்வே  ஸ்டேஷன்   சென்றதாக கூறினார்கள்.    ஓடிச்சென்று   ரயில்வே  ஸ்டேஷனை   அடைந்தபோது   அங்கு  நின்றுகொண்டிருந்த   ரயிலில்   மோகன்   எற  ஆயத்தமாய் நிற்பதை பார்த்தேன்.   என்னையுமறியாமல்   
:"மோகன்......:”.. என்று கூச்சலிட்டபடியே   பாய்ந்து சென்று   அவனை  தடுத்து  நிறுத்தி  அவனைக் கட்டிகொண்டேன்.   ரயில் ..கூ....வென்று கூவிக்கொண்டு    புறப்பட்டு சென்றுவிட்டது.   எனக்கோ  மேல்மூச்சு  கீழ்மூச்சு  வாங்கியது.   

"மோகன்  ஏன் இப்படி செய்தீங்க"   என்று கேட்டேன் கொஞ்சம் கோபத்துடன்
"இரவு முழுவதும் உனது  கால்  வரும் வரும் என்று காத்திருந்தேன்.   வரவில்லை.  உனக்கு சம்மதம் இல்லை என்று நினைத்து    ஊருக்கே சென்றுவிடலாம்  என்று நினைத்தேன்"  என்றான்  மிகுந்த வருத்தத்துடன்
" அதுக்குள்ள   அவ்வளவு அவசரசமா .   விடிந்ததும்  என்   சம்மதத்தை   சொல்ல போன் பண்ணினேன்.  உங்கள் போன் தொடர்பில்  இருக்கவில்லை : .எவ்வளவு   பதறிப்போனேன் தெரியுமா?" என்றேன்.
மோகன் என்னை  உற்று பார்த்தபடி   நின்றான் .  அவன் கண்களில் தெரிந்தது  காதலா?  கருணையா ?  ஆதங்கமா?
"வாங்க  வீட்டுக்கு போகலாம் "  என்று அவனையும்  அழைத்துக்கொண்டு   எங்கள் வீட்டுக்கு சென்றோம்.  குழந்தைகள்   மோகன்  பெட்டியுடன்  வந்ததை கண்டதும்  ஆனந்தமாய்  துள்ளி குதித்தார்கள். 
:" அங்கிள்   இனி எங்க வீட்டுல   இருக்கட்டும் அம்மா”  என்றார்கள்.    ,மோகனின் முகத்தில் மகிழ்ச்சி  கோடுகள்  தெரிந்தன.   மனதுக்கு பிடித்தவர்கள்   உடன்  இருந்தால்    என்றுமே    மகிழ்ச்சிதான்    அதே  மகிழ்ச்சியுடன்   ரெஜிஸ்ட்ரார்    ஆபிஸ்  சென்று      பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.

                                                                        ( முற்றும் ...)   
 
94
General Wallpapers / Re: Lovely Art Illustrations by Bartosz Kosowski
« Last post by MysteRy on October 19, 2020, 08:21:29 PM »
95
General Wallpapers / Re: Lovely Art Illustrations by Bartosz Kosowski
« Last post by MysteRy on October 19, 2020, 08:20:57 PM »
96
General Wallpapers / Re: Lovely Art Illustrations by Bartosz Kosowski
« Last post by MysteRy on October 19, 2020, 08:20:23 PM »
97
General Wallpapers / Re: Lovely Art Illustrations by Bartosz Kosowski
« Last post by MysteRy on October 19, 2020, 08:19:51 PM »
98
General Wallpapers / Re: Lovely Art Illustrations by Bartosz Kosowski
« Last post by MysteRy on October 19, 2020, 08:17:16 PM »
99
General Wallpapers / Re: Lovely Art Illustrations by Bartosz Kosowski
« Last post by MysteRy on October 19, 2020, 08:15:43 PM »
100
General Wallpapers / Re: Lovely Art Illustrations by Bartosz Kosowski
« Last post by MysteRy on October 19, 2020, 08:15:15 PM »
Pages: 1 ... 8 9 [10]