Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1

விடைபெறுதல்
ஒன்று,
காத்திருப்புக்குப் பாத்திரமான
விடை பெறுதல்.
இவ்வகை விடைபெறுதல்கள்
ஏதோவோர் சந்தர்ப்பத்தில்,
மீளுதல்களை நம்பியிருக்கிறது.

இன்னொன்று,
காத்திருப்புக்களுக்கு சொந்தமில்லாத
நீடூழி விடைபெறுதல்கள்.
மறுபடியான திரும்புதல்கள் குறித்து உத்தரவாதம் இல்லாத விடைபெறுதல்கள். இனியில்லை என்பதன் பொருட்டு
ஒன்று தன்னை விட்டும் தூரமாதல்.
இது கொடூரத்தன்மை வாய்ந்ததாய்
சில மனிதர்கள் வாழ்வில்,
அமைந்து விடுகிறது.
எல்லாமே மகா துயரென்பதை
மனிதன் அப்போது உணர்கிறான்.

ஒருவன் காத்திருப்புக்குச் சொந்தமில்லாத விடைபெறுதல் ஒன்றை
பெறத் துவங்கும் போது தான்
அவனை கவலைகள் ஆற்கொள்கின்றன. அவன் தன்னைச் சார்ந்த அத்தனையிலுமிருந்து
தன்னை விடுவித்துக் கொள்ள ஆயத்தமாகிறான்.
தன் புறத்திலிருந்து பிறருக்கு வழங்கப்பட்ட சந்தோஷங்களையும்,
இன்பங்களையும் கூட,
கட்டுப்பாட்டில் வைக்கத் துவங்குகிறான்.

அப்போது அவனை
எல்லோரும் சாடுவார்கள் தான்.
ஆனால்!
அவன் வாழ்வு
சூன்யமாகிப் போனதன் விளைவை அவனால் மட்டுமல்லவா உணர முடியும்? ஏனெனில்!
அவன் மட்டும் தான் அறிவான்,
தன்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, தன்னை களிப்பில் வைத்திருந்த,
தன்னை அத்துனை காலம்
வசப்படுத்திக் கொண்டிருந்த, உயிரோட்டத்தின் வீதியில் நடந்தவன் அவன்தான் என்பதை.

அந்த உயிர்ப்பு நின்று போகின்ற போது அவன் தன் வாழ்வின் இயக்கத்தை,
அவனை அறியாமலேயே
நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.
இனியெப்படி நகர்வதென
அச்சம் கொள்ளத் தொடங்குகிறான்.
எதிலும் பிடிப்பில்லாத மனோ நிலையில் துவழ்கிறான்.
அவன் அண்டி வாழ்ந்த ஒன்று அந்நியப்பட்டுப் போவதில் உள்ள
மாபெரும் துன்பத்தினை,
வேறெதெற்கும் நிகரில்லாதவையென எண்ணுகிறான்.

அவன் அதற்காய்
துக்கம் அநுஷ்டித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தான்,
அவனைத் தேற்றும் தூயவர்கள்
அவனுக்கு தேவைப்படுகிறார்கள்.
அவனை அதிலிருந்து
மீட்டெடுக்கும் கரங்கள்,
அப்போது தான்
அவனுக்கு தேவைப்படுகிறது.

ஒருவரின் நிலையான விடைபெறுதல் ஏற்படுத்துகின்ற
மனதின் காலித்தன்மையை,
காருண்யம் நிறைந்த இன்னொருவரால் உணர முடியுமாகும் போது,
இதயத்திற்கு சமீபமாக அவர்களும் பிணைக்கப்படுவார்கள்.
ஒருவனின் ஒரு இழப்பிற்குப் பின்னர் நிகழும் பிரிதொரு கரத்தின்
அழுத்தமான பிடிமானம் என்பது சாத்தியப்படும் போது,
அவனை விடைபெற்றுச் சென்ற
பாரிய துயர் நோய்க்கு,
அப்போது அந்த புதிய கரத்தின் பற்றுதல் ஓரளவுக்கு நிவாரணியாக அமைகிறது.
அது கூட கிடைக்கப் பெறாதவர்கள் தான் நிர்க்கதியாகிப் போகிறார்கள்.
2
கவிதைகள் / கடைசி 🎭
« Last post by இளஞ்செழியன் on November 26, 2020, 11:58:03 AM »
இறுகப் பற்றிக்கொண்டிருந்த கரமொன்று வியர்வை ஈரத்துடன்,
விரல் நுனியில் உரசலை உணர்த்தி, விட்டகலும் கடைசி நொடிகள்!

துன்பங்களில் பங்கேற்று
இன்பங்களைக் கொண்டாடி,
கூடி மகிழ்ந்த, நீள் நேசமொன்றின்,
எதிர்பாரா கடைசி உரையாடல்கள்!

மட்டற்ற பேரன்பிற்கும்
அதீத உரிமைகளுக்கும்
நமக்கே நமக்கென
வரமாய் இருந்த,
ஆத்மார்த்த உரவொன்றின்
கடைசியாய் நிகழ்ந்த திடீர் இன்மை!

காலத்துக்கும் கைப்பிடித்து,
நெடுந்தூரம் வரை
கொண்டாட்டங்களை
கட்டிக்கொண்டு வாழலாம்
என நினைத்த போது...!
அவசரகதியில் நிகழ்ந்த
கடைசி வார்த்தைப் பரிமாற்றங்கள்!

இனியொரு சந்திப்பிற்கான வாய்ப்போ, பேச்சுக்களுக்கான அருகதையோ, மனம்விட்டுப் பேசி
ஆறுதலடைய முடியுமென நம்பிய மடியோ, எந்நேரமும்
அருகாமை உணர்த்துமென இருந்த அத்துப்படியான நேசமோ, இல்லையென்றாகிப் போகையில்
சொட்டும் கடைசிக் கண்ணீர்!

கடைசியாய் ஓர் சந்திப்பு,
கடைசியாய் ஓர் புன்னகை,
கடைசியாய் ஓர் தோள் சாய்தல்,
கடைசியாய் இறுகப் பற்றிய கரம், கடைசியாய் ஓர் விலகல்
கடைசியாய் ஓர் பிரியாவிடை
கடைசி வரை நெஞ்சோடு வேரூன்றி, நாளங்களில் வாழப்போகும்
அமிர்தக்காதல்!
அப்படியே...!
கடைசியாய் ஓர் மரணம்!

இப்படி இப்படி,
இந்தக் கடைசிகள் ஏற்படுத்தும்
பதட்டமும், பதபதைப்பும், பரிதாபமும்! நமக்களிக்கும்
கடினங்களுக்கும், பாசத்திற்கும், பரிவிற்கும் நிகரனாது வேறொன்றுமில்லை.

இப்படித்தான் அதீத வலிகளும்,
நிகரற்ற அன்பும்,
ஆழமான உணர்வுகளும்,
ஆன்மாவோடு ஆத்மார்த்தமாய்,
கடைசி வரை வாழும்.

எல்லாமுமே,
என்றோ!
எதிலோ!
ஏதோவொரு கடைசிக்குள் சரணடையும்.
3
GENERAL / Re: Good Morning
« Last post by Ayisha on November 26, 2020, 05:59:59 AM »

4
வெறுமையை உடுத்திக் கொண்ட,
வெறும் நெடுஞ்சாலையொன்றாய்
நான் இருக்கையில் தான்...!
உன் காதல்
இந்தச்சாலையின்
ஓரமாய் உள்ள இடுக்கினூடே,
தனியாய் பூக்கத் தொடங்கியது.
இப்போது மீண்டும்
சாலையின் பரிதாபம் மட்டும்
இங்கே உறங்கிக் கிடக்கிறது.

நீ வந்தமர்ந்து விட்டுப்போன
நெஞ்சம் இப்போது...!
சொந்தங்கள் கூடி
குதூகலித்துவிட்டுப்போன,
அமைதி வழியும்
வீடொன்று போல் ஆனது.
அந்த சிரிப்புச் சப்த்தம்
இங்கே காலியாய் உள்ளது.
நீட்சியான நிசப்தம்
இந்த அறையில் நிரந்தரமானது.

ஏனெனத்தெரியாமல்...!
உன்னிடம்
ஒப்புவித்துக்கொண்டே இருக்க,
என்னிடம்
ஏதோவொன்று, எப்போதும்,
இருந்து கொண்டே இருக்கின்றது.
அவை அனைத்திலும்
நீ உயிர்ப்போடு வாழ்வதை
என்னால் உணர முடிகிறது.
என் காதல் அப்போதெல்லாம்,
தாராளமாய் ததும்பியே இருக்கின்றது.

நீயும் சரி,
நீ நிகழ்ந்து விட்டுப்போன
என் காலமும் சரி,
இரண்டுமே
சரிசமமான போதையெனக்கு.
ஏனெனில்...!
நானறியாமல் என்னால்
மிகக் கவனமாய்,
அதிகளவில் எனக்குள்
உட்செலுத்தப்பட்ட தாக்கம் நீ.

என்னால் 
அதீத பிரியத்தோடு
கொண்டாடப்பட்டு,
அளவற்று நினைவுகூறப்படும்
ஆகச் சிறந்த பிறவி நீயெனக்கு....
5
ஓர் கஷ்டமொன்றுக்குள்
நான் தவித்திருக்கையில்...!
உதவி நாடி வந்த ஒருவனை
திருப்பி அனுப்பி வைத்தேன்.
அதன் பின்...!
அவன் காணும் மனிதரிடம் எல்லாம் என்னைப் பற்றிய,
அதிருப்தியை
வெளிப்படுத்தித் திரிந்தான்.

மெருகேற்றப்பட்ட
ஓர் பொய்யின் பக்கம்
நான் சார்ந்திருக்கவில்லை.
அதற்காக...!
என்மீது வசைமாரி பொழிந்து,
தூற்றித் தீர்த்தார்கள்.

எனதான
சில அபிப்பிராயங்களை
முன்வைத்தேன்.
அதில் உள்ள முரண்பாடுகளை
ஏற்கத் தயார் இல்லாமல்,
என்னை வஞ்சித்து விட்டு
விலகினார்கள்.

என் இயல்புகள்
அவர்களின் இயல்போடு
ஒத்தானதாக இல்லையென்பதால்...!
என்னை ஆராய முடிவெடுத்து,
முடிவுரையும்
அவர்கள் திருப்த்திக்கு
ஏற்றார் போல் கூறி,
சுய சமாதானம் செய்து விட்டு
அடங்கிப் போனார்கள்.

அவர்கள் எனக்குத் தோதுவாக
இல்லை என்றெண்ணி...!
நகர்ந்து வந்தேன்.
அதற்காக...!
பிற்பாட்டில் இருந்து,
இட்டுக்கட்டிய
கதைகளை பரப்பி வைத்தார்கள்.

அவர்கள்
நினைத்துக் கொண்டார்கள் போலும், அவர்கள் இவ்வாழ்வின்
விதிக்கப்பட்ட விதிகளிலிருந்து
தள்ளி நிற்பதாயும்,
இப்போதைக்கான
நிகழ்வுகள் மட்டும் தான்
நம் வாழ்வை தீர்மானிக்கும்
காரணிகள் என்றும்...!
கிடையாது...!
சல்லடைக்குள்
மண் விழும் வேகத்தில்
திருப்பங்கள் ஏற்படக் கூடும்.

என்னை நீங்கள்
தீர்மானிக்காதீர்கள்!
உங்கள் அனுமானத்திற்காய்
ஒன்றும் நான் இல்லை.
நீங்களற்று...!
தனித்து வாழவே,
ரொம்பப் பிடித்திருக்கிறது.....
6
கவிதைகள் / கல்லறை மலர்கள்
« Last post by thamilan on November 22, 2020, 06:16:22 PM »
111
7
சின்ன சின்ன மழைத்துளிகள்   
சிந்துகின்ற மிருதங்க   ஒலிகள்
அன்னையின்  அணைப்பிலுள்ள
குழந்தையின்  சிரிப்பொலிபோல்
கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

பூமி தன்னை இருளால்  மூடிகொள்கிறது
அசுரவேக  மின்னல் கீற்றுகள்     
யானையின் பிளிறல் போன்ற  இடியோசை
மிருகங்களை    ஓட  ஓட  விரட்டுகின்றன
பறவைகள் திக்குத்தெரியாமல் பறக்கின்றன

அந்த சாலையோர  மரங்கள்  மட்டும்
ஆனந்தமாக   சிலிர்த்து  நிற்கின்றன .
இலைகளிலிருந்து  வீழும்   மழைத்துளிகள்
ஓரு காதலியின்  சிணுங்கல்  போன்று. 
ஜலதரங்கம்  இசைக்கின்றன.

வற்றிய  குட்டைகள் மீளவும்  நிரம்புகின்றன
குட்டைகளில்   வாழும் தவளைகள்
ஆனந்த மிகுதியால்  நாதஸ்வரம்  வாசிக்கின்றன
மீன்கள்   இசைக்கேற்ப  அபிநயம் புரிகின்றன
இசைக்கச்சேரி  அங்கே களைகட்டுகிறது

பூமியில்  வீழும்  நீர்க்கற்றைகள் ஒன்றுகூடி
சலசலப்புடன்   நதியை  நோக்கி   ஓடுகிறன்றன
 தாயைத் தேடி  ஓடும் குழந்தைகள்போல   
நதி  எங்கே  ஓடுகிறது??   கடலைத் தேடியா?   
முடிவில்லாத  ஓட்டம்   ... நம் வாழ்க்கையைப்போன்று !!!
 
8
கவிதைகள் / மீளுதல்
« Last post by இளஞ்செழியன் on November 20, 2020, 10:13:24 PM »
உள்ளத்தை நச்சரித்து
உணர்வுகளை அரித்து,
உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கோர்
இறுகிய மனோ நிலையொன்று,
என்றோ ஓர் நாள்
நமக்குள் நிகழ்ந்திருக்கும்.

அதிலிருந்த நாமே மீள முடியாமல்
தவித்து திணரி இருப்போம்.
ஆயினும்...!
அன்றைய சில விநாடிகளின்
அமைதியின் பின்னர்
இன்று மீண்டிருக்கிறோம்.

மூச்சடைப்பட்டு, உருகி,
உயிர் நோவினை பெரும் அளவுக்கான
நேசித்தல் ஒன்றின்
முதல் நாள் விலகலில்,
அக்கணம் கடந்து செல்லாமல்
ஏன் இத்துனை துயர் கொண்டு
என் ஆன்மாவின் உற்புர சதை வரை
கிழித்து வதைக்கிறது?
என்றெண்ணியே ஓர் நாள் உடைந்து
உருக்குலைந்து போயிருப்போம்.

இன்று மீளுதலினூடாக
சற்றேனும்
அந்த கனத்த வலிகள்
நெஞ்சத்தில் குறைந்து தான் இருக்கும்.

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
அளிக்கப்பட்ட பதில்களில்,
அத்துனை நேர்த்தியாய்
உண்மைகள் ஒழிக்கப்பட்டு சொல்லப்பட்டதை
தெரிந்த போது,
உருவான அழுகையின் ஈரம்
அப்போது சூடாய்த்தான் இருந்திருக்கும்.

இப்போது நினைக்கையில்
பெரு மூச்சு மட்டுமே
உஷ்ணமாய் பரவும் மீளுதலில்.

துயர் துடைக்க யாரும் இல்லயே,
சொல்லி அழ ஒற்றை உறவு இல்லயே,
சப்த்தமிட்டு அழும்
தருணங்கள் வாய்க்கவில்லயே,
இந்த ரணம் கலந்த
வாழ்வின் நகர்தல்
இவ்வளவு மெதுவாய் கடக்கிறதே,

என்றெல்லாம்...!
புலம்பித் தீர்த்த நாட்களை
இப்போது எண்ணுகையில்,
மீட்சி பெற்று ஏதோ
அந்நியமாய் தான் கிடக்கிறது.

நல்லதாயினும் தீயதாயினும்
எம் விருப்பங்கள், கட்டுப்பாடுகள்,
மன உளைச்சல்கள்,
அத்துனையும் உடைக்கப்பட்டேனும்
நாம் மீளுதல்கள்களுக்குள்
மீண்டே தீர வேண்டும்

உயிரற்று_சாயும்_வரை
மீளுதல்கள் நடந்தே தீரும்...
9
மறக்க முடியாத
ஓர் குரலோசைக்காக
காத்திருக்கையில்...!
ஓர் திடீர் அழைப்பினை ஏற்படுத்தி, மனம்விட்டுப் பேசி,
இன்பமளிக்க மாட்டார்களா?

தூரமாய் ஒதுங்கி மறைந்து,
ஏக்கச் சிறைக்குள்
தள்ளிவிட்டுச் சென்றவர்கள்...!
ஏதேனும் ஓர் தருணத்தில்
மனமாற்றம் பெற்று,
வந்தடைந்து
சேர்ந்து கொள்ள மாட்டார்களா?

சிறு சிறு தவறுக்கெல்லாம் வெறுத்தொதுக்கி நடப்பவர்கள்...! கொஞ்சமேனும்
இயல்புகளை புரிந்து,
அருகாமை உணர்த்த மாட்டார்களா?

என்றோ ரணங்களோடு
விட்டுச் சென்ற உறவொன்று...!
இப்போது ஏற்கத் தயாராக இருக்கையில்,
மீண்டும் வந்து
ஒட்டிக் கொள்ளமாட்டாதா?

என்ற...!
பெருமூச்சோடு,
யாரோ ஒருவருக்கான...!
ஏக்கங்களும், காத்திருப்புக்களும், இவ்வகிலத்தில் இன்னும்
பலர் மனதில்,
எஞ்சிக் கிடக்கத்தான் செய்கிறது.

மழை வேண்டி நிற்கையில்,
சோவெனக் கொட்டித் தீர்த்தல்,
அலாதியாய் மகிழ்ச்சியளிக்குமெனில்...! வேண்டி வேண்டி உருகி
சலித்துப் போய் நிற்கையில்,
அடர்த்தியாய்...!
திடீரென மழை இறங்குகையில்
மட்டற்ற சிலிர்ப்பு கிடைப்பதை, உணர்ந்திருப்போமல்லவா?

அதே காலத்தின் நியதிகள்
என்றேனும் ஓர் நாள்...!
இந்த அப்பிக் கிடக்கும்
ஏக்கங்களுக்கு,
நிவாரணம் வழங்கக் கூடும்.
மனதின் குமுறலை
கேட்கத் தகுதியான,
யாரோ ஒருவரை...!
என்றாவது காண நேரிடலாம்.

அதுவரை...!
மிகப் பிடித்தவராய்
யாரையும் நாம் உணரப் போவதில்லை.
அந்த ஓர் அதிசயம்
நிகழ்த்தப் போகும்...!
ஆசிர்வதிக்கப்பட்ட
உறவுக்கான_வருகையை,
காலம் எப்படியும்
தனக்குள் ஒளித்து வைத்திருக்கும்.

எந்த மழைத்துளி...!
எக்கடலுக்கான
தாகம் தீர்க்கும் காதலி என?
யாருக்குத் தெரியும்?

10
ஏர்பூட்டிய உழவனோ
ஏக்கமாய்த்தான் எதிர்பார்க்க
கண்கலங்கிட வான்மகளோ
விண்ணைவிட்டு மண்ணை சேர
ஏரியினை தூர்த்தவனோ
ஏக்கர்கணக்கில் ஏலமிட்டான்
அடுக்கடுக்காய் வீடுகட்டி
அண்ணார்ந்து இருந்தவனோ
மழையைத்தான் ரசித்தானே

மழைக்கும் வெயிலுக்கும்
மறைவாக நின்றவனை
மரம்நடத்தான் மன்றாட
மணிபிளான்ட்டை நட்டுவிட்டு

மார்தட்டி நின்றானே
கானகத்தை அழித்தவனோ
காகிதத்தில் அச்சடித்தான்
மரத்தை காப்போம் மழை பெறுவோமென்று

மாட்டிற்கும் மதமுண்டு 
மரத்திற்கு  யார் உண்டு
இன்றோ மண்குடிக்க நீரில்லை
மரம்வளர்க்க நாதியில்லை
மாசுற்கு இங்கு இடமுண்டு
மாஸ்க்கோடு வலம்வந்து
மாற்றான் முகம் மறந்து
மண்ணிலே வாழ்கிறோம்
மண்ணில் மூழ்கும்வரை

                 - இணையத்தமிழன்
Pages: [1] 2 3 ... 10