16
« Last post by இளஞ்செழியன் on March 01, 2021, 08:06:15 PM »
கோடி உயிரணுக்களை
முந்தி நீந்தியதில்
பிறப்பின் பின்னரும் நிருபித்தே
கடக்க வேண்டியிருக்கிறது இருப்பை
நேசத்தில், ஆதரவில்,,
பணிவில், உறவில்,
நட்பில்,காதலில், பணியில்,
பொறுப்புகளில்,வாழ்தலில்
என அத்தனையிலும்
இருப்பின் தாக்கத்தை எதிர்ப்பார்த்தே
நகர்கிறது வாழ்க்கை
சிறு தாக்கத்தையேனும் நிகழ்த்திடாத
எதுவும் பொருட்டாகிடுவதேயில்லை
தாக்கங்கள் உணர்த்திடாத
கணங்களின் தொகுப்பை எப்போதைக்குமாய்
ஒரு பதற்றம் பற்றிக் கொள்கிறது
கனமேறிய அக்கணங்களை
ஒரு நேசத்தின் அரவணைப்பு இலகுவாக்கலாம்
குறைந்தபட்சமாய்
இருப்புணர்த்திப் போகும் ஒரு கவிதை
இலகுவாக்கலாம்
தாக்கங்கள் செய்திடா கவிதைகளும்
கிறுக்கல்களின் வனங்களிலே கைவிடப்படுகின்றன
அப்படியே தான் நேசமும்..
இருப்புணர்த்தும் ஏதோ ஒன்றிற்காகவே
உயிர் நிகழ்த்துகிறது
அத்தனை பிரயத்தனங்களை..
இன்னும் சொல்லவியலாத
ஏதோ ஒன்றின் பிடரியில் பற்றிப் படரும்
எதிர்ப்பார்ப்புகளின் துளிர்களுக்கு
பலநேரங்களில் ஆறுதலின் நிறம்......