21
கவிதைகள் / ***எச்சரிக்கை***
« Last post by இளஞ்செழியன் on January 16, 2021, 12:01:13 AM »நிராகரிப்பு, துரோகம், வெறுப்பு
இவற்றின் மீது பயமில்லை எனக்கு..
யாரேனும் என்னை நிராகரிக்கையில்
நிராகரிப்பின் காரணங்களை நியாயப்படுத்தி
நகர்ந்துவிட முடிகிறது..
பரஸ்பரங்கள் இல்லாது போன
ஒரு நிலைக்காக
நம் அன்பில் ஒன்றர கலக்கவியலா
அவர் மனநிலைக்காக
அதில் திளைத்து மகிழ்ந்திட முடியாத
அவர்களின் இருப்புக்காக
சுமைக்கூட்டி பாரமாகி
அவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திடும்
குறைந்தப்பட்ச கருணைகூட
இல்லாநிலையில் நானில்லை..
நிராகரிப்புகள் இயல்பானவை..
அதிகபட்சமாய்
அலட்சியப்படுத்தி மறந்திடவோ
குறைந்தப்பட்சமாய் மன்னித்துக் கடந்திடவோ
முடிவதைத் தாண்டி
நிராகரிப்புகள் என்னை முடக்கிப்போடுவதில்லை.
கணங்களின் அதிர்ச்சிகளைத் தாண்டி
துரோகமும் அழவைப்பதில்லை
நிரந்தரமான ஒரு வெறுப்பு அல்லது
உரிமைவிடுத்தல் என்ற நிலையோடு
அதீத பலம்தந்தும் போய்விடுகிறது துரோகம்
காலங்கள் சென்றபின்
காயங்கள் உலர்ந்தபின்
மன்னித்துவிடவும் முடிகிறது துரோகத்தை..
இனி எந்த முகாந்திரமும் இல்லாதவனை
வெறுப்பின் பெயர் கொண்டு கூட
மனதில் சுமந்து நடக்க
நான் தயாரில்லை.
வெறுப்பின் நியாயங்கள் இயல்பானது
ஒரு தன்னிலை விளக்கத்தின்
தெளிவுபடுத்தல் முலமோ
மன்னிப்பை வேண்டியோ
சுயதிருத்தங்கள் செய்தோ
ஒரு வெறுப்பை களைந்து விட முடிகிறது
இயலாவிடில் பதிலுக்கு வெறுப்புமிழ்ந்து
கடந்துவிடவேனும் முடிகிறது..
ஆனால் அன்புக்குரியவர்களுக்கு
அன்பின் பாரமாகிவிடுகையில்
துவண்டு போய்விடுகிறேன்.
என் தேவைகள் அவர்களுக்கு
நேரும் போதெல்லாம்
பதட்டம் சூழ்ந்து கொள்கிறது என்னை
ஓ அன்பானவர்களே!
பிறிதொரு நாளில்
பாரமாகப்போகும் என்னை குறித்துப்
உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்...
இவற்றின் மீது பயமில்லை எனக்கு..
யாரேனும் என்னை நிராகரிக்கையில்
நிராகரிப்பின் காரணங்களை நியாயப்படுத்தி
நகர்ந்துவிட முடிகிறது..
பரஸ்பரங்கள் இல்லாது போன
ஒரு நிலைக்காக
நம் அன்பில் ஒன்றர கலக்கவியலா
அவர் மனநிலைக்காக
அதில் திளைத்து மகிழ்ந்திட முடியாத
அவர்களின் இருப்புக்காக
சுமைக்கூட்டி பாரமாகி
அவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திடும்
குறைந்தப்பட்ச கருணைகூட
இல்லாநிலையில் நானில்லை..
நிராகரிப்புகள் இயல்பானவை..
அதிகபட்சமாய்
அலட்சியப்படுத்தி மறந்திடவோ
குறைந்தப்பட்சமாய் மன்னித்துக் கடந்திடவோ
முடிவதைத் தாண்டி
நிராகரிப்புகள் என்னை முடக்கிப்போடுவதில்லை.
கணங்களின் அதிர்ச்சிகளைத் தாண்டி
துரோகமும் அழவைப்பதில்லை
நிரந்தரமான ஒரு வெறுப்பு அல்லது
உரிமைவிடுத்தல் என்ற நிலையோடு
அதீத பலம்தந்தும் போய்விடுகிறது துரோகம்
காலங்கள் சென்றபின்
காயங்கள் உலர்ந்தபின்
மன்னித்துவிடவும் முடிகிறது துரோகத்தை..
இனி எந்த முகாந்திரமும் இல்லாதவனை
வெறுப்பின் பெயர் கொண்டு கூட
மனதில் சுமந்து நடக்க
நான் தயாரில்லை.
வெறுப்பின் நியாயங்கள் இயல்பானது
ஒரு தன்னிலை விளக்கத்தின்
தெளிவுபடுத்தல் முலமோ
மன்னிப்பை வேண்டியோ
சுயதிருத்தங்கள் செய்தோ
ஒரு வெறுப்பை களைந்து விட முடிகிறது
இயலாவிடில் பதிலுக்கு வெறுப்புமிழ்ந்து
கடந்துவிடவேனும் முடிகிறது..
ஆனால் அன்புக்குரியவர்களுக்கு
அன்பின் பாரமாகிவிடுகையில்
துவண்டு போய்விடுகிறேன்.
என் தேவைகள் அவர்களுக்கு
நேரும் போதெல்லாம்
பதட்டம் சூழ்ந்து கொள்கிறது என்னை
ஓ அன்பானவர்களே!
பிறிதொரு நாளில்
பாரமாகப்போகும் என்னை குறித்துப்
உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்...