Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
GENERAL / Re: Good Morning
« Last post by Ayisha on February 26, 2021, 06:30:57 AM »
32
அவன்
அன்பே  முழு நிலவே 
அழகான  வெண்மதியே 
பெண்ணே   பேசும் ஓவியமே
கண்ணே   உன்  காதலிலே
கரைந்துபோகுதடி  என் இதயம்
 
அவள்
கண்ணா  என்  காதலனே
 கார்முகில்  வண்ணா  நீயே
கந்தர்வ  உலகின்  கதாநாயகனே
கண்டதும்  கொண்டேன் காதல்  உன்
கண்களின் மடல்களில் தஞ்சமும் ஆனேன்

அவன் 
மின்விளக்கில்   வீழ்ந்து மடியும்  விட்டில்போல்
 உன் கண்  இடுக்கில்   மயங்கி   துடிக்கிறேனடி   
அன்னம்போல்  நீ  அசைந்து நெளிந்து  வந்து   
 மன்னன்  என் மார்பிலே  இதமாக   படர்ந்து
இன்புற்றிருக்க  வேண்டுமடி   

அவள்
குயில்  என்றாய்  என் மதுரக்குரல் கேட்டு
மயில்  என்றாய்  என்  நடை கண்டு 
கொடி  என்றாய்  என் இடை  பார்த்து 
கிளி என்றாய்  கொஞ்சும்  மொழி கேட்டு
என்னை   ஆட்கொண்ட  மன்னவனே

அவன்
கட்டிலில்  புரண்டாலும் உந்தன் ஏக்கம்
காலையில் எழுந்தாலும்  உன் நினைவு 
நித்தமும் நீயே  என் குலதெய்வம்
சித்தம்  கலங்குதடி    என்னவளே   
சிந்தையில்  உன்னையன்றி  வேறு இல்லை 

அவள்
உன் நித்திரையில்   வந்திடுவேன் '
நிழலாகவும்    தொடர்வேன் 
எட்டி  என்னை பிடிக்க  எழும்போது 
தட்டிவிட்டு   ஓடிவந்து  படுத்திடுவேன்
என் வீட்டு கட்டிலின்  மேல்   

காதல்   
காதல் எனும்  செடியில்  புதிதாக  பூத்து 
சாதல் எனும்  பதம் அறியா  மலர்கள்  இவை
காலையில்  பூத்த மலர்  மாலையில்   வாடிவிடும்
காதல்வலை   மாயவலை  என்றறிந்தும்
சோதனையில்   சிக்கிய  பட்டாம்பூச்சிகள் 
33

நிலவு பெண்ணே  ! நினைவுஇருக்கிறதா?
ஓர் நாள்  ...
கல்லூரி சாலையில் சந்தித்தோம் ! பின்பு
உள்ளூர் சோலையில் சிந்தித்தோம் !
காதல் என்ற கனவு வார்த்தை
வாழ்தல் என்ற பந்தம் ஆக துடித்தது !

எதிர்ப்புகள் இல்லா காதல் சாத்யமில்லையே !
எதிர்பார்ப்புகள் இல்லா வாழ்தலும் அப்படித்தானே ?

உனக்கு நினைவு இருக்கிறதா ?அன்று...
உன்னை பார்க்க துடித்து நெடுநேரம் ...
காத்து கொண்டு நின்றேன் ஆற்றங்கரையோரம் !
பால் நிலவு ஆறாக ஓடி கொண்டு இருக்க....
பெண் நிலவு நீ என் அருகே வந்தாய் !
கோடி நிலவுகள் குளிர்ச்சி அப்போது !

ஆனால்!  அனல் காற்று அல்லவே வீசிற்று !
ஏன் என்று உன் விழியை பார்த்த போது புரிந்தது !
விழிகள் மழையும் பொழிந்தது !
சுட்டு எரிக்கும் தணலையும் பொழிந்தது !
காரணம் எதோ சொன்னாய் !
ஏதுவாய் இருந்தால் என்ன ?

நான் இருக்கும் வரை உன் கண்களில்
கங்கையும் பார்க்க விழையவில்லை
காவேரியும் ஓட தேவை இல்லை !
ஒரு சொட்டு நீர் நீ சிந்தினாலும் ..
அது எனக்கு உயிர் வலி கொட்டும் !
அதில் மகிழ்வை தவிர வேறு ஒன்றும்
முகில கூடாது !நான் பார்க்கவும் கூடாது !

என்று நான் கூறிய வினாடிகளில் மீண்டும்
உன் கண்களில் ஆகாய கங்கை !
ஹே பெண்ணே !திரும்ப திரும்ப !
என்று நான் முறைக்க ..நீ சிரிக்க ..
எத்தனை இன்ப நினைவுகள் !

ஆம் ! அத்தனையும் இன்று நினைவுகள் தான் !
அன்று நீ அழக்கூடாது என்று பதறினேன் !..
இன்றோ...நீ எவர்கூடவோ மணமாகி சிரிக்கிறாய் !
என் மனம் தான் சிதறி போகின்கிறது !

பரவாயில்லை பெண்ணே !
என்  நினைவுகள் உன்னை சுடாதவரையில் !
என் கனவுகள் என்றும் ..
கடக்க முடியாத பாதைகளே!
என் பயணங்கள் என்றும் ...
இணையா  தண்டவாளத்தின் பயணங்களே !

34
நீ இல்லையென்றால்
உண்மையான காதல் என்றால் என்னவென்று
நான் அறிந்திருக்கவே மாட்டேன்
அந்தக் காதல் எத்தனை இன்பமானது என
நான் அறிந்திருக்க மாட்டேன்

நீ இல்லையென்றால்
காதல் வெப்பமும் குளுமையையும்
ஒன்றான கலவையென
உணர்ந்திருக்க மாட்டேன்
நீ இல்லாத போது உடல்
ஏக்கத்தால் தகிக்கிறதே
நீ இருக்கும் போது
ஊட்டி குளிரை உடல் அனுபவிக்கிறதே

உன் உயிர் தொடும் தொடுகை
மனதை மயக்கும் குரல்
யாரிடமும் அனுபவிக்காத
இன்பத்தை தருகிறதே
என் உயிரே நீ தான்
உன்னைத்தவிர யாரும் இல்லை

நீ இல்லாவிட்டால்
மழையில்லா பயிர் நான்
காற்றில்லா பிரபஞ்சம் நான்
எனது பாதி நீ
நீ இல்லாமல் நான் இல்லை
இதை உணர்த்தியது உனது காதல்!!
35
Quote

ஹாய் எனும் என்னவனுக்கு
நான் எழுதும் முதல் கடிதம்
காதல் கடிதம்
இதற்கு முன்னே இவ்வளவு  தீவிரமாய்
நான் கடிதம் எழுதியதே இல்லை
இது எனது முதல் காதல் கடிதம்
எனது முதல் காதலன் நீ
எனக்கு வாய்த்த முதல்
அடிமையும் நீயே

கணவன் என்ற சொல்லே
புதிது எனக்கு ஹீ ஹீ
மனசுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்குது
தலைக்கு மேலே
பல வர்ணங்களில் பல்பு எரியுது
இருந்தாலும் நீயே எனது கணவன் ஹீ ஹீ

நானே மோர்னிங் காபி போடுவேன் என்று
எதிர் பார்க்காதே
நீயே எனக்கும் சேர்த்து போட்டாலும்
பரவா இல்ல
லைப்ல எந்த எதிர்பார்ப்பும் இல்லாத எனக்கு
நீ கிடைத்தது வரமே
நான் உனக்கு கிடைத்தது
பெரிய கிப்ட்டு
அதனாலே நீ தினமும் தாராய்
எனக்கு கிப்ட்டு
உனக்கு நான் வைக்க போறேன்
கட் அவுட்டு
இல்லனா நான் உனக்கு தருவேன்
கெட் வுட்டு

உண்மைல சொல்லனுமென்ன

என் பிறப்பின் ஒளியும் நீ
என் பிறப்பின் உயிரும் நீ
என் பிறப்பின் அர்த்தமே நீ
என்பிறப்பின் அந்தமும் நீயே
எத்தனை முறை நான் பிறந்தாலும்
நீ என்னுடைய என் அவனாகவே இருக்கணும்
[/font]

Copyright by
BreeZe
36
இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இதயம், உடலுக்கு தேவையான இரத்தத்தை அனுப்புகிறது.  அப்போது ஏற்படும் அழுத்த மாற்றமே, இரத்த அழுத்தமாகும்.  இந்த இரத்த அழுத்தம் எப்போழுதும் ஒரே மாதிரியாக‌  இருப்பதில்லை.  மாறாக, காலையில் குறைவாக இருக்கும் இரத்த அழுத்தம், மாலையில் அதிகமாகும். அதேபோல், உடற்பயிற்சியின் போதும், உணர்ச்சி வசப்படும் போதும் அதிகமாகும், இரத்த அழுத்தம்,  உறங்கும் பொழுது குறைவாக இருக்கும்.

பொதுவாக, சராசரி நபருக்கு 120/80 எம்.எம்.எச்.ஜிக்கு மேல் இரத்த அழுத்தத்தின் அளவு இருக்க கூடாது.  அவ்வாறு 120/80 எம்.எம்.எச்.ஜிக்கும், அதிகமாக, இரத்த அழுத்தம் இருப்பதையே 'இரத்த கொதிப்பு' என்கின்றனர் மருத்துவர்கள்.  இந்த இரத்த கொதிப்பினால் இதயம் விரைவில் பலவீனமடைந்து, மரணத்தை சந்திக்கும் நிலை ஏற்படும்.

இரத்த கொதிப்பை ஏற்படுத்தும் 5 காரணங்களை ...
அவை பின் வருமாறு...

உடல் உழைப்பின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை:

பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமற்ற, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையையே கடை பிடித்து வருகின்றனர். உடல் உழைப்பின்மை மற்றும் சோம்பேறித்தனமாக இருப்பதினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினை கைவிட்டு, குறைந்த பட்சம் சிறு சிறு உடற்பயிற்சிகளையாவது மேற்கொள்வதன் மூலம், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன், நீரிழிவு, உடல் பருமன் அதிகரித்தல் மற்றும்  இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
 
புகைப்பிடித்தல்:

புகைப்பிடிக்கும் பழக்கமானது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இரத்த கொதிப்பு உண்டாக்கும்.ஒவ்வொரு முறை புகைப்பிடிக்கும் போதும் ரத்த அழுத்தம் உயர்கிறதாம், இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் இதயத்தமணிகள் பலவீனம் அடைந்து விரைவில், இதயம் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம்.

அதிகளவு மது அருந்துதல்:

அதிக அளவில் மது அருந்துவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை  அதிகளவு மது அருந்தும் பழக்கம் ஏற்படுத்தி விடும்.

ஆரோக்கியமற்ற உணவு முறை:

ஆரோக்கிய மற்ற உணவு முறைகளால், குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு மற்றும் சோடியம் கலந்த உணவுகளை சாப்பிடுவதினால், ரத்த அழுத்தம் உயர்வதுடன், இதயம் சம்மந்தமான நோய்களையும் சந்திக்க நேரிடுமாம். மேலும், இத்தகைய உணவு பழக்கம், கிட்னியின் செயல்பாட்டை குறைப்பதுடன்,விரைவில் கிட்னியின் செயலிழப்பிற்கும் வழிவகை செய்கிறது.

மன அழுத்தம் அதிகரித்தல்:

மன அழுத்தமும், உயர் இரத்த அழுத்தமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவையாக கருதப்படுகிறது.  இத்தகைய, அதிகப்படியான மனக்கவலை, உங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்காது, மாறாக உடல் நலத்தை கெடுத்துவிடும். இத்தகைய மோசமான விளைவுகளை கொடுக்க கூடிய மன அழுத்தத்தை, சமனில் வைத்துக்கொள்ள யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உடலில் நோய் ஏற்பட்டுள்ளது அதைச் சரிசெய்யவே பி.பி என்ற ஒரு விஷயம் உடலில் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பி.பி என்பது பின்னே நடப்பதை முன்னே சொல்லும் அறிவிப்பு மணியாகும். பி.பி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உடலில் ஏதோ பிரச்சினை அல்லது நோய் என்பதை அறிந்து, அதைக் குணமாக்கும் வழியை தேடுங்கள். அந்த நோய் குணமானால் பி.பி தானாகவே காணாமல் போய்விடும்.
 
அதை விடுத்து பி.பி.யை மட்டும் குறைப்பது என்பது அறிவிப்பு மணியை மட்டும் கழற்றி வைப்பது போலாகும். அறிவிப்பு மணியைக் கழற்றி வைத்து விட்டால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் போய்விடும்.

உடலில் உருவான நோயைக் குணமாக்காமல் அதை உணர்த்தும் பி.பி.யை மட்டும் மருந்துகள் மூலம் குறைப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
 
வலுக் கட்டாயமாக இதயத்தின் துடிப்பு குறைக்கப்படுகிறது. இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு, அவை இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றன. அதனால் நாளாவட்டத்தில் அவை தண்ணீர்க் குழாய் போல் ஆக்கப்பட்டு, உடலின் தன்மைக்கு அல்லது நோயின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக உடலில் இருந்து உப்புகளும் கனிமங்களும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால் இரத்தம் நீர்த்துப்போய் விடுகிறது.

இதற்குப்பின் எந்த நோய் வந்தாலும் நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது. பி.பி. மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் தொடர்ச்சியாக வருவது இதனால்தான். அதனால் தயவுசெய்து பி.பி எதனால் வந்தது என்பதை அறிந்து முதலில் அந்த நோயைக் குணமாக்குங்கள்.
 
நோய் குணமாக வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரணத்தைச் சரி செய்யுங்கள், உடலில் நாட்பட்டுச் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுங்கள். இந்த இரண்டையுமே அக்குபஞ்சர் (தொடு சிகிச்சை) மருத்துவம் செவ்வனே செய்கிறது. வயிறுதான் அனைத்து நோய்களின் வரவேற்பறை. அதைச் சரி செய்யாமல் பி.பி. வந்து விட்டது சுகர் வந்து விட்டது என்று புலம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.படித்து பயன் பெறுங்கள் ..
என்றும் அன்புடன்,
தோழி JSB 🌹
37

39
நீரழிவு நோய் என்றால் என்ன?
 
நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகின்றது. குளுக்கோஸில் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ள இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreas) என்னும் சுரப்பி உள்ளது. இங்குதான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் (சீனியின்) அளவு அதிகமாகிறது.

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான குளுக்கோஸ் அல்லது சீனி இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் "சுய கட்டுப்பாடுடன்" வாழவேண்டும்.

நீரழிவு நோய் மூன்று வகைப்படும்
 
வகை - 1: டயாபிடிஸ் (Type 1 diabetes)
 
வகை - 2: டாயாபிடிஸ் (Type 2 diabetes)
 
வகை - 3: ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)

வகை- 1: நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்
*பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
*அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
*இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல
*இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
*சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
*உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் 
இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

வகை- 2: நீரழிவு நோயின் குணாதிசியங்கள்
*பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்
*அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்
*பொதுவாக இது பரம்பரை நோய்
*பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள். 
*இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

வகை - 3: ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்:
 *கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும்.
*இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும்.
*குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது ஒன்றும் பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. வாழ்க்கை முறையில் சின்னஞ்சிறு மாற்றங்களை செய்து கொண்டால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்''சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உணவு விஷயத்தில் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை. சுவையான லட்டு, அல்வா சாப்பிடக்கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எதை, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் போதும்''

சர்க்கரை நோயைத் தவிர்க்க ஐந்து வழிகள்...
 
1. கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. நடக்காமல் / ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
3. உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.
4. விருந்தும் விரதமும் வேண்டவே வேண்டாம்.
5. மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காத நிலை வேண்டும்.

படித்து பயன் பெறுங்கள் ..
என்றும் அன்புடன்,
தோழி JSB ;)
40
மனதை மயக்கும் அந்திமாலைப் பொழுது
பகலவன் களைப்பாறும் நேரம்
பறவைகள் தங்கள் கூடுகளைத் தேடித்
பறக்கும் தருணம்
சாரளத்தில் நின்றேன்
மாமன் மகள் அவள் நினைவுடனே
குனிந்த தலையும் நாணம் பொங்கும் முகமுமாய்
வந்து நின்றாள் என்முன்னே
 
அன்பே
உலகத்தில் பூக்கின்றன
ஓராயிரம் பூக்கள்
என்னை மலரவைத்த பூ
உன் சிரிப்பு தான்

பிற பூக்கள் எல்லாம்
காயாகி கனிகின்றன
உன் பூவோ
காயான என்னையே
கனிய வைக்கிறது

மற்ற பூக்களை பார்க்கும் போது
என் இதயம் மகிழ்ச்சியில் மலர்கிறது
உன்னை பார்க்கும் போது தான்
என் இதயமே பூவாய்மலர்கிறது

மாதவளே உன்னை அணிவதற்கு
மனதில் காதல் அணிந்துவந்தேன் கண்களில்
பொன்னை அணிகின்ற பூவே
மறுக்காமல் என்னை அணிவாயா இன்று

கண்நாடி போகுங்கால்
கண்ணாடி போலிருந்த
பெண்ணாய் வந்தாளே பேசத்தான்
பேச மறந்து
தள்ளாடி தலைகுனிந்து நின்றாளே
நாணத்தால்

போர்க்களத்தில் கூட புகுந்து வந்தேன்
எத்தனையோ நீர்குளத்தில் நீந்திவந்தேன்
ஆனால் உன்கண்ணுக்குள்
மூழ்கினேன் காண்

Pages: 1 2 3 [4] 5 6 ... 10