Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
MANY MORE HAPPY RETURNS of the day... Dear Thangachi
92
GENERAL / Re: Good Morning
« Last post by Ayisha on September 13, 2020, 08:15:47 AM »

93
காசேதான் கடவுளப்பா
இது மறுக்க முடியாத உண்மை
பணத்தால் முடியாதது என்ன இருக்கிறது
பணம் தாள் தான்
உலகையே நிர்ணயிக்கிறது

பணத்தால் வாங்கமுடியாதது
தாய் தான் என்று சொன்ன காலம் போய்
பணத்தால் வாடகைத்தாயையும் வாங்கலாம்
என்ற நிலைமை இன்று

உயிருள்ள உறவுகளில்
யார் முக்கியம் என்பதை
அவர்களிடம் இருக்கும்
உயிரற்ற பணமே நிர்ணயிக்கிறது

உலகம் இப்போதெல்லாம்
உடம்புக்கு உள்ளேயே இருக்கும்
மனதை பார்ப்பதில்லை
உடம்புக்கு வெளியே பையில் இருக்கும்
பணத்தைத் தான் பார்க்கிறது

பணம் பாவத்தின் திறவுகோல்
பணம் என்ற சொல்லின் பின்னால்
பாவம் என்ற கிரீடத்தை சூடிக்கொண்டிருக்கிறது
இன்றய  உலகம்
ஒவ்வொரு பணத்திலும்
பாவம் என்ற துர்மணம் வீசுகிறது

இறைவன் இருக்கும் இடத்தை
நிர்ணயிப்பதும் பணம் தான்
தட்டில் பணம் விழுந்தால் தான்
கடவுளுக்கு அர்ச்சனையே
பணம் கொடுத்தால் தான் கோவில் பிரசாதமே

இன்று மனிதன்
பணத்தை பார்த்து பழகுவதால்
அவர்கள் குணம் தெரியாமலேயே போய்விடுகிறது
பணம் இன்று வரும் நாளை போய் விடும்
பாசம் நிலையானது
பணத்துக்காக பாசத்தை விற்றுவிடாதீர்கள்
94
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 244
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

95
குறுக்கெண் புதிர் (சுடோகு) தமிழர் விளையாட்டு
முந்நூறு ஆண்டுகள் முன்பே Sudoku விளையாடிய தமிழர்கள்.

ஆம். உண்மை.

பழனி மலையடிவார மண்டபம் ஒன்றில் 3×3 சுடோகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 350 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

இது பற்றி புதியதலைமுறை மற்றும் The news minute இதழும் ஏற்கனவே காட்டியுள்ளன.

தற்போதைய 9×9 குறுக்கெண் புதிர் 1984 ல் ஜப்பான் கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டு 2004 ல் தான் செய்தித்தாள்களில் வெளியானதாம்.

ஆனால் தமிழர்கள் இதன் எளிய வடிவத்தை ஏற்கனவே பொழுதுபோக்கு விளையாட்டாக பயன்படுத்தி வந்துள்ளது வியப்பின் உச்சம்.
96புறநானூறு, 322. (கண்படை ஈயான்!)
பாடியவர்: ஆவூர்கிழார். (ஆவூர் என்னும் ஊரைச் சார்ந்த வேளாண் மரபினராக இருந்ததால், இவர் ஆவூர் கிழார் என்று அழைக்கப்பட்டார். ஆவூர் என்ற பெயருடைய ஊர்கள் தஞ்சை மாவட்டத்திலும், வட ஆர்க்காடு மாவட்டத்திலும் இருப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். புறநானூற்றில் உள்ள 322- ஆம் பாடலைத் தவிர, சங்க இலக்கியத்தில் இவருடைய பாடல்கள் வேறு எதுவும் காணப்படவில்லை.)
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய

மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
தண்பணை ஆளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே

அருஞ்சொற்பொருள்:-

ஊர்தல் = ஓய்ந்து நடத்தல்
ஊழ்த்தல் = தோன்றுதல் (மலர்தல்)
கோடு = கொம்பு
கவை = பிளவு
பொரித்தல் = தீய்தல், வெடித்தல்
அரை = அடிப்பாகம்
அரிகால் = அரிந்துவிட்ட தாள்
கருப்பை = எலி
புன்தலை = இளந்தலை
ஆர்ப்பு = ஆரவாரம்
மன்று = வாயில் முற்றம்
எந்திரம் = கரும்பு ஆலை
சிலைத்தல் = ஒலித்தல்
சுவல் = பிடர் (கழுத்து)
வாளை = ஒரு வகை மீன்
பிறழ்தல் = துள்ளுதல்
தண்பணை = மருத நிலம்
கண்படை = உறக்கம், மனிதர்களின் படுக்கை

இதன் பொருள்:-

உழுதூர்=====> கருங்கலன் உடைய

நிலத்தை உழுது களைப்படைந்து ஓய்ந்த நடையோடு செல்லும் காளையின் தலையில் முளைத்த கொம்பு போல், பிளவுபட்டு, முட்களும் வெடிப்புகளும் உடைய கள்ளிச் செடியின் பொரிந்த அடிப்பகுதியில் இருந்துகொண்டு, புதிதாக அறுத்த வரகின் அடித்தாளில் மேயும் எலியைப் பிடிப்பதற்குத் தக்க சமயம் பார்க்கும் சிறுவர்கள் தங்கள் கையில் வில்லை எடுத்துக்கொண்டு ஆரவாரம் செய்வர். அந்த ஒலியைக் கேட்ட, பெரிய கண்களையுடைய சிறிய முயல், அடுப்பில் ஏற்றிக் கரிபிடித்த பாத்திரங்கள் உடையுமாறு உருட்டித் தள்ளிவிட்டு

மன்றிற் பாயும்=====> வேலோன் ஊரே

வீட்டு முற்றத்தில் பாயும். எங்கள் தலைவனுடைய ஊர் அத்தகைய வலிய நிலம். இவ்வூரில் உள்ள எங்கள் தலைவன், கரும்பை ஆட்டும் ஆலைகளின் ஒலியால் அருகே உள்ள நீர்நிலைகளில், பெரிய கழுத்தையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் வளமான மருதநிலத்து ஊர்களை ஆட்சி செய்யும் அரசர்களுக்குக் கண்ணுறக்கம் இல்லாமல் செய்யும் வேலை உடையவன்.

பாடலின் பின்னணி:-

வீரன் ஒருவன் போர்புரிவதில் மிகவும் ஆற்றலுடையவனாக இருக்கிறான். அவனை நினைக்குந் தோறும், பகைவேந்தர்கள் அச்சம் மிகுந்து உறக்கமின்றி உள்ளனர். அவ்வீரன் வாழும் ஊர் முல்லை நிலத்தில் உள்ள ஒருசிற்றூர். அவ்வூரில் நடைபெறும் ஒருநிகழ்வை இப்பாடலில் புலவர் ஆவூர் கிழார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில் கூறப்படும் தலைவன் வாழும் ஊர் வலிய நிலத்தில் உள்ள ஒருசிற்றூர் என்ற கருத்தும், அவன் வலிய நிலத்திலுள்ள சிற்றூருக்குத் தலைவனாக இருந்தாலும் வளமான மருதநிலங்களையுடைய வேந்தர்கள் அவனுடைய போர்புரியும் ஆற்றலை எண்ணி அஞ்சி உறக்கமின்றி வருந்துகின்றனர் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.
Pages: 1 ... 8 9 [10]